தேவன் திரைநீக்கப்படுதல் Jeffersonville, Indiana, USA 64-0614M 1நாம் சற்று நேரம் நின்ற வண்ணமாக ஜெபத்திற்காக தலை வணங்குவோம். எங்கள் கிருபையுள்ள ஆண்டவரே, கர்த்தருடைய வருகைக்கு முன்னதாக, இப்பூமியில் நாங்கள் ஒன்று கூடும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளதற்காக, இன்று நாங்கள் உண்மையில் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உம்முடைய வார்த்தையைக் கொண்டு இன்று எங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, நாங்கள் விசுவாசத்தில் இருக்கிறோமா என்றும்... அவருடைய பிரசன்னமாகுதலின் நேரத்துக்கு நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோமா என்றும் காண்போமாக. நாங்கள் அவ்வாறு இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் வேதாகமம், நித்திரையடைந்தவர்களுடன் நாங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்தித்து, அவரோடு கூட எப்பொழுதும் இருப்போம் என்று உரைக்கிறது. உலகில் ஜனங்களின் மத்தியில் உண்மையான கிறிஸ்தவ ஆவி இப்பொழுதும் உள்ளதற்காகவும், அவர்கள் இன்னமும் உம்மையும் உம்முடைய வார்த்தையையும் விசுவாசிப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எனவே இன்று உமது ஆசீர்வாதங்களை எங்கள் மேல் பொழியும்படி வேண்டிக் கொள்கிறோம். எங்கள் ஒவ்வொருவரும் மேலும் எங்களுக்கு தேவையானதை வருஷித்து, நாங்கள் வார்த்தையினால் நீர் பாய்ச்சப்படவும், இந்த கடைசி நாளுக்கென்று நாங்கள் உம்முடைய கரங்களில் கருவிகளாக வளரவும் அருள் புரிவீராக. அவருடைய பிரசன்னமாகுதலை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் எங்கள் மகத்தான மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2மறுபடியுமாக இன்று காலை இங்கு வந்துள்ளதை சிறந்த சிலாக்கியமாகக் கருதுகிறேன் என்று கூற விரும்புகிறேன். உட்காருவதற்குப் போதிய இடம் இல்லாதது வருந்தத்தக்கது. இன்றிரவு நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க முயல்வோம். இக்காலை வேளையில் அதை செய்வது சிறிது கடினம். இந்த செய்தியை இன்று நான் ஒலிப்பதிவு செய்யப் போகின்றேன். நான்... ஓ, இதைக் குறித்து கர்த்தர் என்னிடம் ஓரிரண்டு மாதங்களாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இது நீண்ட செய்தி வெளிக்கூட்டங்களில் எனக்கு நேரம் கிடைப்பதில்லை. ஏனெனில் ஆராதனையில் அதற்கு முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது. பிறகு நாம்... ஜனங்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்ற காரணத்தால், என் செய்திகளைச் சுருக்கிக் கொள்வது நலமென்று எனக்குத் தோன்றினது. எனவே இதை ஒலிப்பதிவு செய்ய நேரம் கிடைக்கவில்லை. நான் கூடாரத்துக்கு வரும்வரை காத்திருந்து இங்கு இதை ஒலிப்பதிவு செய்யலாமென்று எண்ணினேன். இது சிறிது நீளமாக செய்தி, நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். என்னால் கூடுமானவரை இதை துரிதமாக முடிக்கப்போகிறேன். நீங்கள் எழுந்து மற்றவர்களுக்கு இருக்கைகளை அளிப்பது என்னைத் தொல்லைப்படுத்தாது. அதனால் எனக்கு எவ்வித பாதகமுமில்லை. ஏனெனில் இது நாம் ஒலிப்பதிவு செய்யும் ஒரு விசேஷித்த நாளாகும். கர்த்தர் சுவிசேஷ ஊழியத்தில் செய்த மகத்தான கிரியைகளைக் குறித்து எங்களுக்கு சிறந்த தகவல்கள் வந்துள்ளன. இன்றிரவு அதற்கு நாம் அதிக நேரம் கொடுத்து அதைக் குறித்து பேசலாம். அப்பொழுது நமக்கு நிறைய நேரம் உண்டாயிருக்கும். 3உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாரென்று நம்புகிறோம். கர்த்தருடைய வருகையை எதிர் நோக்குபவர்களாய், உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறதென்று அறிவேன். காரியங்கள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விதமாக நடப்பதைக் கண்டு என் இருதயமும் மகிழ்ச்சியினால் பொங்கி வடிகிறது. தேசிய போராட்டம், சபையின் தற்போதைய நிலை, அவருடைய வருகையை அறிவிக்கும் சரீரப் பிரகாரமான, ஆத்துமப் பிரகாரமான அடையாளங்கள். அவர் பிரசன்னமாகுதலின் நேரம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அறியும் போது, இந்நாட்களில் ஒன்றில் நாம் மறுரூபப்படுவோம் என்பது நமது இருதயங்களை மகிழ்ச்சியினால் நிறைகிறது. நாம் சிருஷ்டிகள் என்னும் இப்பொழுதுள்ள நிலையிலிருந்து மறுரூபமாவோம். 4எங்கோ தொலைபேசி இணைப்பு உள்ளதாகவும், இந்த செய்தி தொலைபேசியின் வழியாய் பீனிக்ஸ் இன்னும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதாகவும் கேள்விப்படுகிறேன். அது அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்... எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே வருவதற்கு முன்பு அவ்வாறு எனக்கு அறிவிக்கப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் எல்லோருமே நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கின்றனர். கர்த்தருடைய மகிமை அவர்கள் மேல் தங்கியுள்ளது. 5இப்பொழுது நாம் கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை திறக்கப் போகிறோம். இங்கு நாம் வந்துள்ள காரணம் தேவனுடைய பிரசன்னத்தை ருசிக்கவும், நம்மைக் குறித்து நாமே கவனமாயிருக்கவும்... நாம் வேறெதற்காகவும் இங்கு வரவில்லை. இந்த உஷ்ணத்தில் உட்காருவது மிகக் கடினமென்று இங்கு வந்துள்ள எவருமே அறிவர். இங்கு வந்துள்ள நோக்கம். நாம் ஒரே நோக்கத்திற்காக இங்கு வந்துள்ளோம். அது தேவனுடன் இன்னும் நெருங்கி நடக்க வேண்டுமெனும் நோக்கமே. நம்முடைய கர்த்தராகிய இயேசு இருக்கிறார் என்று விசுவாசிப்பதை மாத்திரமே நாம் செய்யமுடியும். அவருடன் இன்னும் நெருங்கி நடக்கவே இங்கிருக்கிறோம். 6இந்த வெப்பம் எனக்கு சிறிது கடினமாயுள்ளது. டூசானில் உள்ள உலர்ந்த வெப்பம் எனக்கு பழக்கமாகிவிட்டது.... இங்குள்ள ஈரப்பசை... அங்குள்ள வெப்பம் இங்குள்ளதைவிட அதிகம், ஆனால் அது உலர்ந்தது. சில சமயங்களில் எங்களுக்கு அங்குள்ள ஈரப்பசை ஒரு சதவிகிதத்தில் இருப்பதில் ஒருபாகம் மாத்திரமே - அப்படி ஏதோ ஒன்று. அது பிராண வாயு கூடாரத்தில் வசிப்பது போன்றிருக்கும். ஆனால் இங்குள்ள ஈரப்பசையோ, நாம் பிழிந்து எடுக்கப்பட்ட உணர்வை அளிக்கிறது. எனவே அது உங்களுக்கு கடினமாயுள்ளதென்று அறிவேன் - சிறு குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள், இப்பொழுது நீங்கள் நிற்பது போல் நெருக்கமாக நின்று கொண்டிருக்கும் வாலிபர் வயோதிபர் போன்றவர்களுக்கு. உங்கள் தியாகத்துக்காக தேவன் உங்களுக்கு அபரிமிதமான பலனையளிப்பார் என்று நம்புகிறோம். 7சகோ. ராய் பார்டர்ஸ் இங்கு எங்கோ இருப்பதாக அறிகிறேன். அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டதைக் கேட்டேன். ஒருக்கால் அவரால் உள்ளே நுழைய முடியாமல் இருக்கக் கூடும். சரி, அவர் தான் கூட்டங்களுக்கு மேலாளர். நம்முடன் கூட முன்பு இருந்த ஒருவர் - ஒரு மனிதர் கர்த்தருடன் கூட இருக்க இன்று காலை சென்றுவிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மிச்சிகனிலுள்ள ஸ்டர்கிஸைச் சேர்ந்த சகோ. ஜாக்சன் என்பவர். அவர் எப்படி சென்றார், என்ன நேர்ந்தென்று யாருக்குமே தெரியவில்லை. அவர் நன்றாக இருந்தார். அது... அவரை இறந்த நிலையில் கண்டார்கள் என்று நினைக்கிறேன். அப்படி ஏதோ ஒன்று அதன் முழு விவரமும் எனக்குக் கிடைக்கவில்லை. சகோ. ஜாக்சன் ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக நாம் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவரை அநேக ஆண்டுகளாக நான் காணவில்லை. ஆனால் அவர் நமது மத்தியில் உட்கார்ந்தவர், நம்மில் ஒருவர். தேவன் அவருடைய தீரமான ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவாராக. அவர் அந்த விதமாக சென்றது, அவர் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாம் விசுவாசிக்கிறோம். அதைக் குறித்து தேவன் நம்மையும் எச்சரிக்கவில்லை, அவரையும் எச்சரிக்கவில்லை. அவர் அப்படியே சென்றுவிட்டார். அப்படித்தான் அது நடந்தது. நான் விரைவில் அவருடைய மனைவியை தொலைபேசியில் கூப்பிட்டு நம்முடைய துயரத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அவருடைய தீரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்காகவும், அவர் பூமியில் எவ்வளவு நல்லவராகவும், விசேஷமாக நம்முடைய உள்ளூர் சபைக்கு அவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்ததற்காகவும் நாம் அனைவரும் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். 8இன்றிரவு வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கப்படும் என்று அறிவித்தேன். வியாதியஸ்தரைக் குறித்து இன்றிரவு அதிகம் பேசுவேன். ஆனால் இந்த நேரத்தில் நாம் நேரடியாக வார்த்தைக்குச் செல்வோம். ஏனெனில் இங்கு நெருக்கமாகவும் உஷ்ணமாயும் உள்ளது. நாம் நேரடியாக வார்த்தைக்குச் செல்வோம். இக்காலை வேளையில் வேதாகமத்திலிருந்து இரண்டு பாகங்களை வாசிக்க விரும்புகிறேன். நீண்ட பாகங்கள். நான் கூற விரும்புவதற்கு அது சிறிது முன்னுரையாக அமையும். சகோ. சாத்மனும் மற்றவரும் இந்த ஒலிநாடாவை விற்காமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை விற்பதற்கு முன்பு.... இது பொது ஜனங்களிடம் செல்வதற்கு முன்பு, கூடுமானால் இதை நான் போட்டு கேட்க விரும்புகிறேன். 9இப்பொழுது... பிலிப்பியர் 2ம் அதிகாரம் 1 முதல் 8 வசனங்களையும்; 2 கொரிந்தியர் 3ம் அதிகாரத்தில் 6ம் வசனம் தொடங்கி 2 கொரிந்தியர் 4 அதிகாரத்திலும், ஒரு பின்னணிக்காக வாசிக்க விரும்புகிறேன். முதலில் நான் பிலிப்பியர் 2ம் அதிகாரத்தை வாசிக்கிறேன். வாசிப்பதற்கு முன்பு நாம் ஜெபிப்போம்: 10கர்த்தாகிய இயேசுவே, உம்முடைய வசனமே சத்தியம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தொல்லை நிறைந்த நேரத்தில் ஜனத்துக்கு விரோதமாக ஜனம், கொள்ளை நோய், பல இடங்களில் பூமியதிர்ச்சிகள், மனிதருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போதல், சுவற்றின் மேல் நாங்கள் கையெழுத்தைக் காண்கிறோம். இது உலகம் காணத்தக்கதாக உலகப்பிரகாரமான ஆதிக்கத்தில் நடக்கிறது. ஆனால் ஆவிக்குரிய ஆதிக்கமும் உண்டு. அதில் நடைபெறும் மகத்தான நிகழ்ச்சிகளை நாங்கள் காண்கிறோம். அதைக் குறித்து இன்று நாங்கள் பேச விரும்புகிறோம். உமது வார்த்தையை எங்கள் இருதயத்தில் ஆசீர்வாதமாக்கியருளும். இந்த புஸ்தகத்தைக் கையிலெடுத்து அதன் முத்திரைகளை திறக்கவும் அல்லது அதைப் பார்க்கவும் கூட வானத்திலாவது பூமியிலாவது எந்த மனிதனும் பாத்திரவான் அல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒருவர் அங்கு வந்தார். அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி, இரத்தம் தோய்ந்தவராய் அங்கு வந்து புஸ்தகத்தை வாங்கி, அதை திறக்கப் பாத்திரவானாய் இருந்தார். ஓ தேவ ஆட்டுக்குட்டியே, எங்களை ஆறுதல்படுத்த உம்முடைய வார்த்தையை இன்று எங்கள் இருதயங்களுக்குத் திறந்தருளுவீராக. நாங்கள் உம்முடைய ஊழியக்காரர். கர்த்தாவே, எங்கள் பாவங்களை மன்னியும். வார்த்தை வல்லமையுடன் புறப்பட்டுச் சென்று இன்று எங்கள் வாழ்க்கையில் பாதிப்பை உண்டுபண்ணுவதற்கு தடையாயுள்ள எல்லாவற்றையும், கர்த்தாவே, நீர் நீக்கிப்போட்டு உம்முடைய வார்த்தையின் மூலம் எங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் அனைத்தும் எங்களுக்கு முழுவதுமாக கிடைக்க அருள் புரியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 11பிலிப்பியர் 2ம் அதிகாரம். ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கமும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரிந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலி 2:1-8 12இப்பொழுது நாம் 2 கொரிந்தியர் 3ம் அதிகாரத்துக்குத் திருப்பி, 6ம் வசனத்திலிருந்து 18ம் வசனம் முடிய படித்து, 4ம் அதிகாரத்தின் ஒரு பாகத்தையும் படிப்போம். புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி அவரே எங்களை தகுதியுள்ளவர்களாக்கினார். அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக் கூடாதிருந்தார்களே. ஒழிந்து போகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக்கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமைப்பட்டதல்ல. அன்றியும் ஒழிந்து போவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்து போவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப் பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக்கொண்டது போல் நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டு; இந்நாள் வரைக்கும் பழைய ஏற்பாட்டை வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது. அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும் போது, இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின் மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும் போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவவசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். கொரி. 3:6-18, 4:1-3 13வாசிக்கப்பட்ட அவருடைய வசனங்களுடன் கர்த்தர் தாமே தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இன்று காலை என் பொருள், தேவன் இதை வெளிப்படுத்தி தருவாரென்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் ஒலிநாடாக்களைப் போட்டு கேட்கும் உங்களுக்கு, சபைக்கு தேவன் எதைக் கூற விரும்புகிறார் என்பதைக் குறித்து ஆவிக்குரிய விளக்கம், அதை வெளிப்படையாகக் கூறாமலே உங்களுக்கு கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? சில சமயங்களில் ஒன்றைக் கூறுவது... நாம் சில காரியங்களை கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். அது ஆட்களை சபையில் குறைத்து விடுகிறது. சிலர் சபையை விட்டு வெளியேறும்படி செய்துவிடுகிறது. மற்றும் சிலரை அது சிந்திக்கும் செய்கிறது. அது வேண்டுமென்று செய்யப்படுகிறது. அது அப்படித்தான் செய்யப்பட வேண்டும். 14ஒருக்கால் சிலர், “தேவன் வேண்டுமென்று அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வார் என்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்கலாம். அவர் நிச்சயமாக முன்பு அப்படி செய்தார். இப்பொழுதும் செய்து வருகிறார். அவரை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் அவர், ''நீங்கள் தேவகுமாரனுடைய - இல்லை, மனுஷகுமாரனுடைய - மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை'' என்றார். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைக் குறித்து ஒரு மருத்துவர் அல்லது நர்ஸ் அல்லது ஒரு அறிவாளி என்ன நினைத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள் - அவ்வளவு பெரிய ஊழியத்தைக் கொண்டிருந்த ஒரு மனிதர், “என் மாம்சத்தைப் புசியுங்கள்'' என்று கூறினதைக் குறித்து? அவர் நரமாமிசம் தின்பவர் மனித இரத்தத்தைக் குடிப்பதென்பது? அது இரத்தத்தை குடிக்கும் பூதம் (Vampire). ”'நாம் நரமாமிசப் பட்சிணிகளாகவும் இரத்தத்தைக் குடிக்கும் பூதங்களாகவும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்“ என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். எனவே எல்லோரும் அவரை விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். 15அவருடன் கூட தெரிந்து கொள்ளப்பட்ட எழுபது பேர் கொண்ட ஊழியக்காரர் சங்கம் ஒன்றிருந்தது. அவர் அவர்களை நோக்கி, “மனுஷகுமாரன் தாம் புறப்பட்டு வந்த இடத்துக்கு மறுபடியும் ஏறிப்போவதை நீங்கள் காணும்போது என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார். அவர் அதை விளக்கவில்லை. அது எப்படியென்று அவர் விளக்கம் தரவேயில்லை. (சிறிது காலம் கழிந்து பவுல் அதற்கு விளக்கம் தந்தான்). அவர் அதற்கு விளக்கம் தராமல் சொன்னார். பாருங்கள்? அப்பொழுது அவர்கள். அவர், ''மனுஷகுமாரன் தாம் புறப்பட்டு வந்த இடத்துக்கு ஏறிப்போவதை நீங்கள் காணும்போது இந்த ஊழியக்காரருக்கு என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார். அவர்கள், “சிறிது பொறுங்கள். ஓ, நாங்கள் அவருடன் உண்டோம், அவருடன் மீன் பிடித்தோம், அவருடன் உறங்கினோம். அவர் பிறந்த இடம் நமக்குத் தெரியும். அவர் குழந்தையாயிருந்த போது அவரை ஆட்டின் தொட்டிலை நாங்கள் கண்டிருக்கிறோம். அப்படியிருக்க, இந்த மனிதன் எப்படி.... இது கடினமான சொல்” என்று கூறியிருப்பார்கள் என்பதில் ஐயமேயில்லை. அதன் பிறகு அவர்கள் அவருடன் நடக்கவில்லை என்று வேதம் கூறுகிறது. அவர்கள் அவரைப் பிரிந்து சென்றனர். 16பிறகு பன்னிரண்டு பேர் மாத்திரமே மீதியாயிருந்தனர். அவர் பன்னிரண்டு பேர்களைத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவன் பிசாசு. அவர் அவர்களிடம் திரும்பினார். அவர் சொன்னவைகளுக்கு யாருமே விளக்கம் தரமுடியவில்லை. ''அவர்கள் எப்படி அவருடைய மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணப் போகிறார்கள்? அவர் பூமியில் பிறந்திருக்க, எப்படி பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்க முடியும்?'' பாருங்கள்? அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அப்போஸ்தலர்களிடம் திரும்பி, ''நீங்களும் போய் விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்றார். அப்பொழுது தான் பேதுரு அப்போஸ்தலன் அந்த மகத்தான வாக்குமூலத்தை கொடுத்தான். ''ஆண்டவரே, நாங்கள் யாரிடத்தில் போவோம்?'' பாருங்கள்? ''எங்களுக்கு பூரண திருப்தி. நீர், நீர் ஒருவர் மாத்திரமே இந்நேரத்துக்கான ஜீவ வசனத்தைக் கொண்டிருக்கிறீர் என்பதை நிச்சயமாய் அறிந்திருக்கிறோம்'' பாருங்கள்? ''அதைக் குறித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம்.'' பாருங்கள், அவர்களால் அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. அவர்கள். உங்களால் விசுவாசத்துக்கு விளக்கம் தர முடியாது. அது நீங்கள் விசுவாசிக்கும் ஒன்று. அது மிகவும் திடமானது. அதன் ஸ்தானத்தை வேறெதுவும் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அவர்கள் வாழ்ந்த அந்த காலமாகிய மேசியாவின் காலத்துக்கென்று எழுதப்பட்ட வார்த்தைக்கு அந்த ஸ்தானத்தில் அவர் பரிபூரணமாக பொருந்தினார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அப்படியிருக்க அவர்கள் வெளியேறின குளிர்ந்த, சடங்காச்சாரம் நிறைந்த சபைகளுக்கு திரும்பிச் சென்று அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்? பேதுரு, ''நாங்கள் எங்கே போவோம்?'' பாருங்கள்?“ ஜீவ வசனம் உம்மிடத்திலுண்டு என்பதைக் குறித்து நாங்கள் முழு நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம்'' என்றான். பாருங்கள்? அவர்களால் விளக்கம் தரமுடியவில்லை, ஆனால் அவர்கள் அதை விசுவாசித்தார்கள். பாருங்கள்? 17அவருடைய கூட்டத்திலுள்ள களைகளைப் போக்கி தம்முடைய சொந்த கூட்டத்தினரை ஒன்று சேர்க்கவே இயேசு அவ்வாறு கூறினார். அந்த ஜனங்கள் அனைவரிலும் பதினொன்று பேர் மாத்திரமே அவர் யாரென்பதை உண்மையில் அறிந்திருந்தனர். அவர் தேவன், தேவன் மாத்திரமே என்று அவர்கள் அறிந்திருந்தனர். இன்று காலை என் பொருளின் நோக்கம் அந்த தேவனை திரை நீக்கி வெளிப்படுத்துவதே. ஒவ்வொரு காலத்திலும் தேவன் எப்பொழுதுமே திரைக்கு பின்னால் மறைந்து கொண்டிருந்தார் - எல்லா காலங்களிலும். ஆனால் அவர் எல்லா காலங்களிலும் தேவனாயிருந்து வந்திருக்கிறார். பாருங்கள்? ஆனால் அவர் தம்மை உலகத்துக்கு மறைத்துக் கொண்டு தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார் - அக்காலத்தில் அவர் தம்மை அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தினது போல. அது தேவன் கிறிஸ்துவில் பேசினதாகும். மனிதன் எப்பொழுதுமே.., மனிதனின் இயல்பு என்னவெனில், அவன் எப்பொழுதுமே அதை காண விரும்பினான். அவரைப் போல் காணப்படும் அநேக சிருஷ்டிகளை மனிதன் உருவாக்கிக் கொண்டான்... இந்தியர்கள் சூரியனை நமஸ்கரிக்கின்றனர். ஆப்பிரிக்காவில் வெவ்வேறு வகையான மிருகங்கள் தொழப்படுவதை நாம் காண்கிறோம். அலஸ்காவில் பழங்குடி மக்களின் பட்சி சின்னம் போன்றவை. வெவ்வேறு வகையான உருவங்களில் இந்த தேவன் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். பவுல். அத்தேனே பட்டணத்தில் மார்ஸ் மேடையில், இந்த அறியப்படாத தேவனைக் குறித்து அவர்கள் அஞ்ஞான பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதாகவும், அவர் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தும் அவரை அவர்கள் உண்மையில் அறியவில்லை என்றும் கூறினான். 18எனவே யோபின் காலத்திலும் கூட நாம் காண்கிறோம். தேவன் இருக்கிறார் என்பதை யோபு அறிந்திருந்தான். அவன் அதை அறிந்திருந்தான். தெளிவான சிந்தை கொண்ட எந்த மானிடனும் ஏதோ ஒன்று எங்கோ இருக்கவேண்டும் என்பதை அறிந்திருக்கிறான். யோபு அவருடன் பேச விரும்பினான். யோபுவுடன் பேச தேவன் தெரிந்து கொண்ட உருவத்தை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். தேவன் யோபிடம் பேசினபோது திரை மறைக்கப்பட்டிருந்தார். அவர் சுழல் காற்றில் தம்மை திரை மறைத்துக் கொண்டு, சுழல்காற்றில் இறங்கி வந்தார். தேவன் தம்மை திரை நீக்கி வெளிப்படுத்த இப்பொழுதும் சுழல் காற்றில் வருகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 19அன்றொரு நாள் அவர் சுழல் காற்றில் இறங்கி வந்தபோது, எங்களுடன் கூட இருந்த பலர் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு முந்தின நாள் அவர் என்னிடம், ''இந்த கல்லை ஆகாயத்தில் எறிந்து “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொல். நீ உடனே அதை காண்பாய்'' என்றார். சகோ. பாங்கஸ் உட்டும் மற்றவர்களும் என்னுடன் இருந்தனர். நான் மலையுச்சியில் கல்லைக் கையிலெடுத்து ஆகாயத்தில் எறிந்தேன்... அது கீழே இறங்கி வந்தபோது ஒரு சுழல்காற்றை தோன்றப் பண்ணினது அதன் உறிஞ்சும் சக்தி (suction). ஏதாவதொன்று நடக்க வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். இயேசு அப்பத்தை எடுத்துபிட்டு, அந்த அப்பத்திலிருந்து அநேக அப்பங்கள் தோன்றச் செய்தார். அவர் தண்ணீரை எடுத்து கற்சாடியில் ஊற்றினார். எலியா உப்பை எடுத்து கலசத்தில் போட்டான். ஒரு கொம்பை முறித்து தண்ணீரில் எறிந்தான். அது ஒரு அடையாளத்துக்காக. இந்த கல்லைக் கையிலெடுத்து ஆகாயத்தில் எறிந்து அது கீழே வந்த போது, சுழல்காற்றைத் தோன்றச் செய்தது. 20அடுத்த நாள்... வேட்டை பயணத்தின்போது எங்களுடன் ஒரு போதகர் இருந்தார். அவர் அருகாமையில் நின்று கொண்டிருந்தார். நான். அவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, இப்படிப்பட்ட பயணத்தின்போது கர்த்தர்; உங்களுக்கு தரிசனங்களைக் கொடுப்பதுண்டா?'' என்று கேட்டார். நான், “கொடுப்பார், ஆனால் வழக்கமாக நான் இளைப்பாறவே இங்கு வருகிறேன்'' என்றேன். சகோ. பார்டர்ஸ் (இப்பொழுது அவர் வெளியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்). அப்பொழுது அங்கிருந்தார். சகோ. பாங்க்ஸ் உட்டும் இருந்தார் என்று நினைக்கிறேன். ஓ, அநேகர் மேலே இருந்தனர் - எட்டு அல்லது பத்து பேர். மலையின் மேல் இது நடப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சகோ. பாங்க்ஸ் உட், ஏழு தூதர்கள் பிரத்தியட்சமான இடத்திலிருந்து சுமார் அரை மைல் தூரம் இருந்தார். அதற்காக நான் இங்கிருந்து சுமார் அரை மைல் தூரம் இருந்தார். அதற்காக நான் இங்கிருந்து புறப்பட்டு சென்று திரும்பி வந்து... ஏழு முத்திரைகளைக் குறித்து அறிவித்தேன். அங்கிருந்து சுமார் அரை மைல் தூரம். 21அடுத்த நாள், இது நடந்து கொண்டிருக்கையில்... நான் சகோதரனிடம் கூறினேன். இந்த போதகர் சகோதரனிடம் நான், ''உங்களுக்குள்ள கோளாறு என்னவெனில், உங்கள் கண்ணில் அலர்ஜி உள்ளது. அதை போக்க மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகளாக முயன்று வந்தும் அவர்களால் முடியவில்லை. அவர்கள் உங்களிடம்... அது உங்கள் கண்ணை அரித்து விடும் என்று கூறிவிட்டார்கள்'' என்றேன். நான், ''ஆனால் கவலைப்படாதீர்கள். கர்த்தராகிய இயேசு உங்கள் விசுவாசத்தை கனப்படுத்திவிட்டார்“ என்றேன். அவர் இதைக் கேட்டவுடன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டார். நான் தொடர்ந்து, ''உங்கள் தாயார்'' என்று கூறி, அவர்களைக் குறித்தும் அவர்களுடைய கோளாறைக் குறித்தும் கூறினேன். அவர், ''அது உண்மை'' என்றார். 22இப்பொழுது அங்கு நின்று கொண்டிருக்கிற இந்த சபையைச் சேர்ந்த சகோ. ராய் ராபர்ஸனை உங்கள் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அவர் முன்பு இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதையும், என்ன நடக்கவிருக்கிறது என்பதையும் அறிந்தவனாய், என் கையை அவர் தோளின் மேல் போட்டு, ''சகோ. ராபர்ஸன், ஜாக்கிரதையாயிருங்கள், ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது'' என்றேன். நான் எங்கே நிற்க வேண்டுமோ அந்த இடத்துக்கு நடந்து சென்றேன். அப்பொழுது ஆகாயத்திலிருந்து சுழல்காற்று (மலைக்கணவாயின் வழியாக) இறங்கி வந்தது. அது மிகவும் பலத்த சுழல் காற்றாய் இருந்ததால் மலையின் உச்சியிலிருந்த கற்பாறைகளை எட்டு அல்லது பத்து அங்குல கனம் வரைக்கும் உடைத்து, இருநூறு கெஜம் தூரம் வரைக்கும் தூக்கியெறிந்து, மூன்று முறை இப்படி கைகொட்டினது போன்ற ஓசையை எழுப்பினது. அதிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு வந்தது. பாருங்கள். அங்கு எல்லோரும் நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது இங்குள்ள சகோ. பாங்க்ஸ் என்னிடம் வந்து, ''இதைக் குறித்து தான் நேற்று நீங்கள் என்னிடம் கூறினீர்கள் அல்லவா? என்றார். நான், ''ஆம் ஐயா, இதைக் குறித்துதான்“ என்றேன். அவர், “அந்த சத்தம் உங்களிடம் என்ன சொல்லிற்று?'' என்று கேட்டார். நான், ''சகோ. பாங்க்ஸ், அதை நான் மாத்திரமே அறிய வேண்டியவன், பாருங்கள். ஏனிெனல் அது... அது ஜனங்களுக்கு பயத்தை அளிக்கும்'' என்றேன். 23அந்த சுழல்காற்று அங்கிருந்து சென்று .... அது வடதிசை நோக்கி சென்றது. சில நாட்கள் கழித்து அது கடலைத் தாக்கியது. அலாஸ்காவிலுள்ள ஃபேர்பாங்ஸை சுற்றிலும் என்ன நடந்ததென்று பாருங்கள். அது நியாயத்தீர்ப்பின் அடையாளம். இப்பொழுது, நாம் காண்பது என்னவெனில், தேவன் இப்பொழுது... பாருங்கள், அது ஜனங்களை பீதிக்குள்ளாக்கிவிடும். எனவே அது நடக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள். அது நடக்க வேண்டும், நடக்க வேண்டியவை எப்படியும் நடந்தே தீரவேண்டும். பாருங்கள், அது எப்படியும் நடக்கும். 24ஒரு சமயம் மோசே தேவனைக் காண விரும்பினான். தேவன் அவனிடம் ஒரு கன்மலையின் மேல் நிற்கும்படி கூறினார். மோசே கன்மலையின் மேல் நின்றுகொண்டு தேவன் கடந்து செல்வதைக் கண்டான். அவருடைய பின்பாகம் மனிதனின் பின்பாகத்தைப் போலிருந்தது. தேவன் அப்பொழுது சுழல்காற்றில் இருந்தார். தேவன்... மோசே கன்மலையின் மேல் நின்று கொண்டிருந்தபோது. அன்றொரு நாள் அந்த புகைப்படத்தை நீங்கள் எல்லோரும் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் இந்த கன்மலையின் அருகில் தான் நின்று கொண்டிருந்தோம். இதோ அந்த ஒளி, கர்த்தருடைய தூதன். அந்த இடத்தில்தான் கைதட்டினது போன்ற ஓசை எழும்பினது. நின்று கொண்டு... அந்த படம் மறுபடியும் அறிக்கை பலகையில் வைக்கப்பட்டிருக்கிறது. 25கவனியுங்கள். பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து. பாருங்கள்? அது அதே தேவன், தமது ரூபத்தை மாற்றிக் கொள்ளுதல். அன்று டூசானில் ஒருவர் - ஒரு பாப்டிஸ்டு போதகர் - என்னிடம், “இயேசுவும் தேவனும் ஒரே ஆள் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?'' என்று கேட்டார். நான், ''நல்லது, நீங்கள் உங்கள் சொந்த சிந்தனையை விலக்கிக் கொண்டு வேதப்பிரகாரமாக சிந்திப்பீர்களானால், அது மிகவும் எளிது“ என்றேன். ''அவர்கள் இருவரும் ஒருவரே. தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் திரை மறைத்த சரீரம் தான் இயேசு. பாருங்கள்?'' என்றேன். நான் தொடர்ந்து, ''என் வீட்டில் உள்ளது போல. என் மனைவிக்கு நான் கணவன். என் இளைய மகள் ரெபேக்காளுக்கு நான் தகப்பன். எனக்கு ஒரு பேரன் இருக்கிறான். அவன் பெயர் பால். அவனுக்கு நான் பாட்டன். நான் கணவன், தகப்பன், பாட்டனாயிருக்கிறேன். என் மனைவிக்கு நான் தகப்பனாகவோ பாட்டனாகவோ இருக்க உரிமையில்லை. அவளுக்கு நான் கணவன் என்னும் உரிமை மாத்திரமே. என் மகளுக்கு நான் கணவனாகவோ பாட்டனாகவோ இருக்க உரிமையில்லை. அவள் என் மகள். பாருங்கள்? இந்த மூன்று நபர்களும் ஒரே நபர் தான். தேவனும் அப்படிப்பட்டவராயிருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யுகங்களின் உரிமையே. தேவன் ஒருவரே, அதே தேவன். 26தேவன் தம்மை மாற்றிக்கொண்டார், தமது ரூபத்தை மாற்றிக்கொண்டார் என்றேன். நீங்கள் இங்கு பிலிப்பியர் நிரூபத்தில் கவனிப்பீர்களானால், பவுல், ''அவர் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், மனுஷ ரூபம் எடுத்தார்'' என்கிறான். 'ரூபம்' என்னும் சொல்லுக்கான கிரேக்க சொல்லை நேற்று பூராவும் ஆராய்ந்து, அது என்னவென்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது ''என் மார்பி'' (en morphe) என்னும் சொல் என்பதை அறிந்து கொண்டேன். அது e-n- m-o-r-p-h-e என்னும் எழுத்துக்களை உடையது. 'என் மார்பி' என்னும் கிரேக்க சொல்லுக்கு அர்த்தம் என்னவென்று தேடிக் கொண்டிருந்தபோது... அதை நான் தவறாக உச்சரிக்க வகையுண்டு. ஆனால் நான். அதை நான் எழுத்து கூட்டி உரைத்த காரணம் என்னவெனில், இந்த ஒலிநாடாவை வெளியிடும் போது, ஜனங்கள் (பண்டிதர்கள்) நான் எந்த சொல்லைக் குறிப்பிடுகிறேன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அவர்... அந்த 'என் மார்பி'... அவர் தம்மை மாற்றிக்கொண்டார் என்று அர்த்தம். அவர் இறங்கி வந்தார். அந்த கிரேக்க சொல்லின் அர்த்தம் என்னவெனில், காணக்கூடாது ஒன்று, இருப்பினும் அது அங்குள்ளது. அதன் பிறகு கண் காண்பதற்காக அது மாறுவது“ என்பதாம். பாருங்கள். 27தோத்தானில் எலிசாவைப் போல். பாருங்கள், அந்த வேலைக்காரனுக்கு அங்கு சூழ்ந்திருந்த தேவ தூதர்களைக் காணமுடியவில்லை. தேவன் அதை மாற்றினார். அவர் தேவதூதர்களைக் கீழே கொண்டு வரவில்லை. ஆனால் வேலைக்காரனின் பார்வையை மாற்றினார். அப்பொழுது மலைகள் நிறைய தேவ தூதர்கள் இருந்தனர். அக்கினி, அக்கினி குதிரைகள், அக்கினி இரதங்கள் அவருடைய தீர்க்கதரிசியை சூழ்ந்திருந்தன. பாருங்கள்? அவை.... அவர் பார்வையை மாற்றினார். அவையெல்லாம் அங்கிருந்தன. எனவே, நான் சொல்ல முயல்வது என்னவெனில், என்றென்றைக்கும் இருந்து வருகிற தேவன் இங்கிருக்கிறார். அவர் மனிதனானபோது செய்த ஒன்றே ஒன்று தமது முகமூடியை (Mask) அதாவது வேடத்தை மாற்றிக் கொண்டதே. பாருங்கள்? அவர் அவர். இந்த 'என் மார்பி'. அவர் முன்பிலிருந்து இப்பொழுது உள்ளதற்கு தம்மை மாற்றிக் கொண்டார். தமது முகமூடியை மாற்றிக்கொண்டார் - நாடகத்தின் வேறொரு அங்கம். 28ஒரு பெரிய நாடகத்தில் செய்வது போல். இக்காலை வேளையில் நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஷேக்ஸ்பியர் மனதுக்கு தோன்றினது. அவருடைய நாடகங்கள் எழுதப்பட்டு நீண்ட காலமாயின. ஷேக்ஸ்பியர் இங்கிலாந்து அரசன் ஜேம்சுக்காக நாடகங்களை எழுதின போது, அவர்... ''மாக்பெத்“ என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாருங்கள், ஷேக்ஸ்பியருக்கு மந்திரவாதிகளின் மேல் நம்பிக்கையில்லை. ஆனால் இந்த நாடகத்தில்... ஏனெனில்... அரசன் மந்திரவாதிகளின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால், அவர் நாடகத்தில் மந்திரவாதிகளை சேர்க்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? அந்த நாடகத்தை நடிக்க, அவர்கள் வேடத்தை மாற்றினர். இங்குள்ள பெக்கியின் பள்ளிக்கூடத்தில் அவர்கள் 'கார்மென்' என்னும் நாடகம் நடத்தினர். சில வாரங்களுக்கு முன்பு தான் அவள் தேர்ச்சி பெற்று அந்த பள்ளியை விட்டு வெளி வந்தாள். அந்த நாடகத்தில் ஒரே நபர் மூன்று அல்லது நான்கு பாகங்களை ஏற்று நடித்தார். அப்படி செய்வதற்காக அவர் தன் முகமூடியை மாற்றிக் கொண்டார். ஒருமுறை அவர் மேடையில் தோன்றினபோது இந்த கதாபாத்திரமாகவும், அடுத்தமுறை அவர் வேறொரு கதாபாத்திரமாகவும் தோன்றினார். ஆனால் அது ஒரே நபரே. 29அதுதான் தேவன். அவர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து மாற்றிக்கொண்டு மனிதனாக ஆனார். அவர் மனிதனில் வாசம் செய்வதற்கென தம்மை மறுபடியும் ஆவியாக மாற்றிக் கொண்டார். தேவன் என்னவாயிருந்தாரோ அதை அவர் மனிதனில் கிரியை செய்கிறார். தேவன் ஒரு மனிதனில் கிரியை செய்ததுதான் இயேசுகிறிஸ்து - ஒரு மனிதனில். ஒரு மனிதனில். அதுதான் அவர். அவர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து தம்மை மாற்றிக் கொண்டு வனாந்தரத்திலுள்ள திரைக்குப் பின்னால் வந்தார். அந்த திரை தேவனை இஸ்ரவேலரிடமிருந்து மறைத்தது. மோசே அவருடைய சரீரத்தின் உருவத்தைக் கண்டான். ஆனால், உண்மையில் அவர் எப்பொழுதும் இந்த அக்கினி ஸ்தம்பத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். அதுதான் தேவனிடத்திலிருந்து வந்த வார்த்தையாய் (logos) இருந்தது. இங்கு நாம் காண்பது என்னவெனில், பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு தேவன் மனிதனில் கிரியை செய்யாமல் மனிதன் மூலமாக கிரியை செய்கிறார். பாருங்கள்? அப்பொழுது அவர் இயேசு என்னும் மனிதனில் கிரியை செய்து வந்தார். இப்பொழுது அவர் இந்நோக்கத்திற்காக அவர் தெரிந்து கொண்ட மனிதனின் மூலம் கிரியை செய்கிறார். மனித உருவில் தேவன். அவர் தேவனுடைய உருவத்திலிருந்து மனித உருவத்திற்கு தம்மை மாற்றிக் கொண்டார். 30அவர் மூன்று நாமங்களில் - மூன்று குமாரரின் நாமங்களில் வந்தார். அவர் மனுஷகுமாரன், தாவீதின் குமாரன், தேவனுடைய குமாரன் என்னும் மூன்று குமாரரின் நாமங்களில் வந்தார். அவர் முதலில் மனுஷகுமாரனின் நாமத்தில் வந்தார். ஏனெனில் அவர் ஒரு தீர்க்கதரிசி. யேகோவா எசேக்கியலை ''மனுபுத்திரனே (son of man), நீ காண்கிறது என்ன?'' என்று கேட்டார். இயேசு தம்மை ஒருபோதும் தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடவில்லை; அவர் தம்மை மனுஷகுமாரன் என்று தான் அழைத்துக் கொண்டார். ஏனெனில் வேதவசனம் தவறாததாயிருக்க வேண்டும். வேதவசனங்களில் ஒன்றுமே தவறாது. ஒவ்வொரு வார்த்தையும் அவ்வாறு இருக்க வேண்டும். அப்படித்தான் நான் விசுவாசிக்கிறேன். அப்படித்தான் அது இருக்க வேண்டும் - நான் அவ்வாறு விசுவாசிக்கிறேன் என்பதனால் அல்ல, அது தேவனுடைய வார்த்தையாய் இருப்பதனால். 31நீங்கள் கவனிப்பீர்களானால், தொடக்கத்தில், ஒரு வார்த்தை, வேதாகமத்தின் முதலாம் பக்கத்தில், ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் நாம் காண்பது என்னவெனில், எல்லாமே... எல்லா வியாதிகளும், எல்லா துயரமும், எல்லா மனோவேதனைகளும், மானிடருக்கு நேரிட்ட அனைத்துமே, ஒரு நபர் ஒருவார்த்தையை அவிசுவாசித்த காரணத்தால் உண்டானவைகளே. அது வேதாகமத்தின் தொடக்கத்தில். வேதாகமத்தின் கடைசியில் வெளிப்படுத்தின விசேஷம் 22ம் அதிகாரத்தில் அதே தேவன், “எவனாகிலும் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தையை கூட்டினால்'' என்கிறார். பாருங்கள், அது வார்த்தைக்கு வார்த்தை அது உள்ளபடியே இருந்தாக வேண்டும். 32எனவே நான் ஏன் இந்த சிறு காரியங்களையும் முக்கியப்படுத்துகிறேன் என்றால்... ஸ்திரீகள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதை நான் கடிந்து கொள்வதைக் குறித்து ஒருவர் என் மேல் குற்றம் கண்டு பிடிக்கிறார். என்னைப் பொறுத்தவரையில், அவள் எவ்வளவு பரிசுத்தவாட்டியாக இருந்தாலும், எவ்வளவு அறிந்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவள் அவ்வாறு செய்யும் பட்சத்தில் தவறாயிருக்கிறாள். அவள் குட்டை கால் சட்டைகளையும், இத்தகைய ஆடைகளையும் அணிவாளானால், அவள் என்ன செய்தாலும், எவ்வளவு நன்றாக பாடினாலும், எவ்வளவு நன்றாக பிரசங்கம் செய்தாலும், எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தாலும் எனக்குக் கவலையில்லை. அந்த ஒரு வார்த்தை மீறப்பட்டது. பாருங்கள்? அது ஒவ்வொரு வார்த்தையாக இருக்கவேண்டும். ஒரு வாக்கியம் அல்ல, ஒரு வார்த்தை. ஒரு வார்த்தை எனவே வேதத்தை தனிப்பட்ட விதத்தில் அர்த்தப்படுத்தக் கூடாது. அது வார்த்தைக்கு வார்த்தை அது எழுதப்பட்ட விதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதை நாம் விசுவாசிக்க வேண்டும். 33அதை விசுவாசிப்பது மாத்திரமல்ல, அதன்படி வாழ வேண்டும். அதன்படி நாம் வாழாமல் போனால், அதை நாம் விசுவாசிக்கவில்லை, நாம் விசுவாசிப்பதாக கூறிக்கொள்கிறோம். உதாரணமாக நான்... நான் முன்பு கூறினதை அடிப்படையாகக் கொண்டால், அந்த சீஷர்களுக்கு அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. இருப்பினும் அவர்கள் அதை விசுவாசித்தனர். அவர்கள் விசுவாசிப்பதாக அறிக்கை செய்து, அதன்படி வாழ்ந்தனர். மற்றவர் அனைவரும் அதை விட்டு விலகிச் சென்றபோது, அவர்கள் அதில் நிலைநின்றனர். அவர்கள் அதை விசுவாசித்தனர். அப்படித்தான் நாமும் செய்கிறோம். அப்படித்தான் நீங்களும் செய்ய வேண்டும். மற்றவர் என்ன செய்த போதிலும் அதை நாம் விசுவாசித்து, அதன்படி நடக்கிறோம். அப்படி நீங்கள் செய்யாமல் போனால், அதை நீங்கள் விசுவாசிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. 34இப்பொழுது கவனியுங்கள். அவர் வந்தபோது, மனுஷ குமாரனாய் வரவேண்டியதாயிருந்தது. ஏனெனில் அவர் அப்படி வரவேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் உரைத்திருந்தது. தேவன் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவாரென்று அது உரைத்தது. எனவே அவர் தம்மை தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொண்டு வரமுடியாது. ஏனெனில் அது அந்தக் காலம் அல்ல. அவர் மனுஷகுமாரனாக தீர்க்கதரிசனம் உரைத்து, நிறைவேற்றி, ஏற்கனவே நடந்த காரியங்களை அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்து, அவர் யாரென்பதை முன்னடையாளமாகக் காண்பித்தார். அவர் பூமியில் மனுஷகுமாரனாய் இருந்தார். 35அந்த சீரோபோனிக்கியா தேசத்து ஸ்திரீயைப் பாருங்கள். அவள் அவரிடத்தில் ஓடிவந்து, ''தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்'' என்றாள். அவர் தலை நிமிர்ந்து பார்க்கவும் கூட இல்லை. அவளுக்கு அவர் மேல் தாவீதின் குமாரன் என்ற உரிமை இருக்கவில்லை. அவள் ஒரு புறஜாதி (என் மகளுக்கு என் மேல் கணவன் என்ற உரிமையும், என் மனைவிக்கு என் மகள் என்ற உரிமையும் கிடையாதோ அது போல். என் மனைவி சுவிசேஷத்தில் என் குமாரத்தி. ஆனால் உலகப் பிரகாரமாக என்னை தகப்பன் என்று அழைக்க அவளுக்கு உரிமை கிடையாது. பாருங்கள்?) இப்பொழுது கவனியுங்கள், இந்த புறஜாதி ஸ்திரீக்கு அவர் மேல் தாவீதின் குமாரன் என்ற உரிமை கிடையாது. ஆனால் குருடனான பர்த்திமேயுவுக்கு அந்த உரிமை இருந்தது, அவன் ஒரு யூதன். இப்பொழுது, அவர் மனுஷ குமாரனாக வந்தார். நீங்கள் இந்த வார்த்தைகளையும் இந்த காரியங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஹாட்டி ரைட்டைப் பாருங்கள். மூன்றாம் இழுப்பின் நேரத்தின் போது. உங்களுக்கு ஞாபகமிருக்கும். எல்லாவற்றிலும், அவள் சரியான காரியத்தை சொன்னாள். நீங்கள் தேவனிடம் அந்த சரியாக வார்த்தையை, சரியான காரியத்தை கூற வேண்டும். 36இப்பொழுது கவனியுங்கள், அவர் முதலில் தீர்க்கதரிசியாக வந்தார். அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருக்குச் சொந்தமானவர்களே அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மனுஷகுமாரனாக வந்தார். பரிசுத்த ஆவி வந்த பிறகு, அவர் தேவனுடைய குமாரனானார். தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவி, தேவனுடைய குமாரன். அவர் சபை காலங்களில் தேவனுடைய குமாரனாயிருந்தார். ஆயிரம் வருட அரசாட்சியின்போது, அவர் தாவீதின் குமாரனாக, தம்முடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார். அவர் தாவீதின் குமாரனாயிருப்பார். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். தேவனுடைய குமாரனுக்கும் .... லவோதிக்கேயா சபையின் காலத்தில், அவர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டார்கள். அவர் மறுபடியும் மனுஷகுமாரனாக வெளிப்பட்டு மற்றவைகளை நிறைவேற்றுவார் என்று அவர் லூக்கா சுவிசேஷத்தில் கூறியிருக்கிறார். பாருங்கள்? வேதவாக்கியங்கள் பிழையின்றி ஒன்றோடொன்று இணைகின்றன. மனுஷகுமாரன், தேவனுடைய குமாரன், தாவீதின் குமாரன். அது என்ன? அது அதே தேவன் தமது உருவத்தை மாற்றிக் கொள்ளுதல் - 'என் மார்பி' அதை அவர் மாற்றிக் கொண்டார். அது அவருக்கு பெரிய நாடகமாக உள்ளது அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கிறார். 37அவர் மனுஷகுமாரனாக வந்தார், தீர்க்கதரிசியாக. அவர் பிழையின்றி அப்படியே செய்தார். கிணற்றண்டையிலிருந்த பாவம் நிறைந்த அந்த ஸ்திரீயும் கூட அவரை அடையாளம் கண்டு கொண்டாள். அவள், “கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் இதைதான் செய்வார்'' என்றாள் பாருங்கள், அவள் முன்குறிக்கப்பட்ட வித்தாயிருந்தபடியால் அவரை அடையாளம் கண்டு கொண்டாள். பிறகு அவள்... மற்றவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள அவர்களிடத்தில் ஒன்றும் இருக்கவில்லை. அவர்கள் தொடக்கத்திலேயே பாவத்தில் இருந்தனர். 38தமது நடிப்புகளுக்காக அவர் தமது உருவத்தை மாற்றிக் கொள்கிறார். அவர் மனுஷகுமாரனின் உருவில் வந்தார். சீர்திருத்தக்காரரான வெஸ்லி, லூத்தர் இவர்களின் காலத்தில் வழி வழியாக... அதன் பிறகு நாம் காண்பது என்னவெனில், அவர்கள் இஸ்ரவேலரைப் போல் குழப்பமுற்று, முடிவில் கடைசி நாளில் பெந்தெகொஸ்தே காலத்தில் அவர் பரிசுத்த ஆவியாக பிரத்தியட்சமான போது, அவர்கள் அதைப் புறக்கணித்தனர். இஸ்ரவேலர் செய்த அதையே இவர்களும் செய்தனர். இப்பொழுது அவர் என்ன செய்கிறார்? மனுஷ குமாரனாக திரும்ப வருகிறார். அதன் பிறகு, அதிலிருந்து, தாவீதின் குமாரன். நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்று பார்த்தீர்களா? மனுஷ - குமாரன், தாவீது குமாரன், தேவனுடைய குமாரன். அவர் இந்தக் கடைசி நாட்களில் மல்கியா 4ன்படியும், இன்னும் இந்த நேரத்துக்கான மற்ற தீர்க்கதரிசனங்களின்படியும், மனுஷ குமாரனாக வெளிப்பட்டிருக்கிறார். சபையானது அவரை வெளியே தள்ளிவிட்ட பிறகு, இனி ஒருபோதும் அவர் சபையுடன் தொடர்பு கொள்ளப் போவதில்லை. அவர் வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார். சில முன்குறிக்கப்பட்ட வித்துக்கள் இன்னும் அங்குள்ளன. அவர் அவர்களை அடைந்தாக வேண்டும். 39தேவன் தம்மை ஒரு மனிதனுக்குள் ஊற்றிக் கொண்டார். யோவேல் 2:28ல், “கடைசி நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்'' என்று அவர் கூறினதாக நாம் காண்கிறோம். அங்கு உபயோகிக்கப்பட்ட கிரேக்க சொல்லை நீங்கள் கவனிப்பீர்களானால்... ஒருக்கால் இதை நான் தவறாகக் கூறக்கூடும், ஆனால் நான் கண்ட சொல்... நீங்கள் அந்த சொல்லை கவனிக்க வேண்டும். சில சமயங்களில் ஆங்கிலச் சொற்களுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. உதாரணமாக நாம் ''தேவன்'' என்று அழைக்கும் சொல். தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மூல வேதாகமத்தில், “ஆதியிலே ஏலோகிம்'' என்பதாய் உள்ளது. இப்பொழுது, ஏலோகிம் என்னும் சொல்... ஆங்கில வேதாகமத்தில் ”தேவன்'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தேவன் என்னும் சொல் உண்மையில் ஏலோகிமை குறிப்பிடுவதல்ல. நாம் எதற்கும் தேவன் என்னும் சொல்லை உபயோகிக்கலாம். நீங்கள் விக்கிரகத்தை தேவனாக்கிக் கொள்ளலாம். அந்த பியானோ இசைக்கருவியை தேவனாக்கிக் கொள்ளலாம், எதையும் நீங்கள் தேவனாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஏலோகிம் என்னும் சொல் அப்படியல்ல. அது “தன்னில் தானே ஜீவிக்கிறவர்'' என்னும் பொருளுடையது. பாருங்கள்? பியானோ தன்னில் தானே ஜீவிக்க முடியாது. எதுவுமே தன்னில் தானே ஜீவிக்க முடியாது. எனவே ஏலோகிம் என்னும் சொல் ”எக்காலத்தும் இருந்து வருகிறவர்“ என்னும் பொருள் கொண்டது. தேவன் என்னும் சொல் எதையும் குறிக்கலாம். இவ்விரண்டு சொற்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டீர்களா? 40அவர் தம்மை வெறுமையாக்கினார், அல்லது ஊற்றிக் கொண்டார் என்று இங்கு எழுதப்பட்டுள்ளதை நாம் காணும் போது, அவர் ''கக்கினார்'' (Vomit) என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். வெறுமையாக்குதல் அல்லது ஊற்றுதல் என்னும் சொற்கள், அவரை விட வித்தியாசமான ஒன்று அவரிடத்திலிருந்து வெளி வந்தது என்னும் அர்த்தத்தை தரக்கூடியதாயுள்ளன. ஆனால் ''கீனாஸ்'' (Kenos) என்னும் கிரேக்கச் சொல், அவர் ''கக்கினார்'' அல்லது அவருடைய கரங்கள் அவரிலிருந்து பிரிந்து சென்றன. அவருடைய கண்கள் பிரிந்து சென்றன. வேறொரு ஆள் சென்றார் என்னும் அர்த்தம் கொண்டதல்ல. அதாவது, அவர் தம்மை மாற்றிக் கொண்டார். அவர் ''வேறொரு வேடத்துக்குள்'' (ஆமென்!), அல்லது வேறொரு உருவத்துக்குள் தம்மை முழுவதுமாக ஊற்றிக் கொண்டார் என்று அர்த்தம் கொள்ளும். பரிசுத்த ஆவி என்றழைக்கப்படும் வேறொரு ஆள் அவரிலிருந்து செல்வதல்ல, அது அவரே உங்களுக்குப் புரிகிறதா? அவர் தாமே தம்மை ஜனங்களுக்குள் ஊற்றிக் கொண்டார். கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்தல் தேவன் தம்மை மனிதனுக்குள், விசுவாசிக்குள் ஊற்றிக் கொண்டார் என்று எண்ணிப்பார்க்கும் போது, எவ்வளவு அழகானது, எவ்வளவு அருமையானது! ஊற்றிக் கொள்ளுதல். அவ்வாறு செய்தல் அவருடைய நாடகத்தின் ஒரு பாகமாயிருந்தது. தேவனின் பரிபூரணம், தேவத்துவம் அனைத்தும் சரீரப்பிரகாரமாக இந்த இயேசு கிறிஸ்து என்னும் நபரில் வாசம் செய்தது. இவர் தேவனாயிருந்தார், இவர் தேவன் மாத்திரமே. மூன்றாம் ஆளோ, இரண்டாம் ஆளோ, முதலாம் ஆளோ அல்ல; ஆனால் தேவன் மாம்சத்தில் திரை மறைக்கப்பட்டிருந்த அந்த ஆள். 411 தீமோ 3:16, ''அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது; தே-வ-ன், ஏலோகிம்...'' யார் வேண்டுமானாலும் மூல வேதாகமத்தை திருப்பிப் பாருங்கள். அது “ஏலோகிம்'' என்கிறது. ”ஆதியிலே ஏலோகிம் பாருங்கள்.“ ''ஏலோகிம்... அன்றியும் ஏலோகிமைக் குறித்த இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. ஏலோகிம் மாம்சத்திலே வெளிப்பட்டார். அவரை எங்கள் கைகளினால் தொட்டோம்.'' ஏலோகிம் மாம்சத்தில் திரை மறைக்கப்பட்டிருக்கிறார். விண்வெளி, காலம், எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்த மகத்தான யேகோவா மனிதனானார். இந்த ஏலோகிமை எங்கள் கைகளினால் தொட்டோம் ”ஆதியிலே ஏலோகிம், ஏலோகிம் மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார்.'' 42என்ன? அது அவருடைய விதம், அவருடைய நாடகத்தின் ஒரு பாகம். அவர் அந்த விதமாகத்தான் அதை நடிக்க வேண்டும். அவர் வேறொருவராக தம்மை நமக்கு வெளிப்படுத்தும் விதம். நாம் மானிடர். அது அவருக்குத் தெரியும். நாம் மானிடர் புரிந்து கொள்ளும் விதத்தில் தான் புரிந்து கொள்ளமுடியும். நாம் மானிடர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் அறிந்து கொள்ள முடியும். நமது ஐம்புலன்கள் நமக்கு அறிவிக்கும் வகையில் தான் நாம் அறிந்து கொள்ள முடியும். மற்றவைகளை நாம் விசுவாசத்தில் தான் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் தேவனைக் கண்டாலும் காணாவிட்டாலும், அவர் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம். பாருங்கள்? அது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை நாம் விசுவாசிக்கிறோம். ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். 43உதாரணமாக, ஆபிரகாம் அந்த குமாரனைக் காண முடியவில்லை, எந்த அடையாளமும் இல்லை, சாராள் கர்ப்பமுற்றிருக்கவில்லை, அவளுக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடும் நின்று போயிருந்தது. இருப்பினும், தேவன் அவ்வாறு கூறினார். எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. சாராளின் கர்ப்பம் செத்துப்போயிருந்தது. அவனுடைய சத்து போய்விட்டது. அவனுடைய ஜீவனின் சத்து உலர்ந்துவிட்டிருந்தது. அவளுடைய ஜீவனும் உலர்ந்திருந்தது. இருப்பினும் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். அப்படித்தான்; நாம் வார்த்தையை இன்று விசுவாசிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அது எப்படி நடக்கும்? எனக்குத் தெரியாது. தேவன் அப்படி நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அத்துடன் அது முடிவு பெறுகிறது. 44காணக்கூடாத இந்த மகத்தான நபர் யார்? தரிசனங்களில் ஆபிரகாம் கண்ட இவர் யார்? முடிவில் அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட போதிலும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு, தேவன் தாமே ஆபிரகாமிடம் மனித உருவில் கடைசி காலத்தில் வந்தார். மனித உருவில் வெளிப்பட்டார். அவன் அவரை ஒருமுறை ஒரு சிறு வெளிச்சத்தில் கண்டான். அவரை தரிசனங்களில் கண்டான். அவருடைய சத்தத்தைக் கேட்டான். அநேக வெளிப்பாடுகள். ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு, அவன் அவரை மனித உருவில் கண்டான். அவருடன் பேசினான், அவருக்கு புசிக்க இறைச்சியும் குடிக்க தண்ணீரும் கொடுத்தான். பாருங்கள்?கவனியுங்கள், தேவன் தாமே மானிட சரீரத்தில் திரைமறைக்கப்பட்டிருத்தல். 45இது அவருடைய வழியின் ஒருபாகம். இந்த வழியில் தான் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். தமது நித்திய வார்த்தையை வெளிப்படுத்துகிறார். தேவன் மாம்சமான யேகோவா. பரி. யோவான் 1ல் கூறியுள்ளபடி, ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது... ஆதியிலே ஏலோகிம் இருந்தார், ஏலோகிம் வார்த்தையானார், அந்த வார்த்தை ஏலோகிமாயிருந்தது. வார்த்தையானது ஏலோகிமானது.'' பாருங்கள்? அதே காரியம்தான், வெளியாக்கப்படுகிறது. பாருங்கள், தேவனுக்குள் இருந்த தன்மைகளைப் போல், உங்கள் சிந்தை ஒரு தன்மை. ஆதியிலே தேவன். நித்தியமானவர், தேவனாகவும் கூட இல்லை. அவர் நித்தியமானவராயிருந்தார், அவர் தேவனாகவும் கூட இல்லை. தேவன் என்றால் தொழுகைக்குரிய ஒன்று என்று பொருள். பாருங்கள்? எனவே அவர் அவ்வாறு இல்லை. அவர் ஏலோகிம், நித்தியமானவராக இருந்தார். ஆனால் அவருக்குள் சிந்தைகள் இருந்தன. அவர் ஒரு சரீரத்தில் வர விரும்பினார். அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையைத் தோன்றப் பண்ணினது. அதுதான் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய உள்ள முழு காட்சி. அதில் ஒரு தவறும் இல்லை. ஏலோகிம் கைகளால் தொடப்படுவதற்கும், தொட்டு உணர்வதற்கும் மாம்ச சரீரத்தில் தோன்றினார். ஆயிரம் வருட அரசாட்சியில் ஏலோகிம் சிங்காசனத்தில் வீற்றிருப்பார். பாருங்கள். அது உண்மை. உலகத் தோற்றத்துக்கு முன்பு அவர் முன் குறித்த பிரஜைகள் அவரைச் சூழ இருப்பார்கள். 46உலோகம் வார்ப்பிக்கிறவன் ஆலய மணிகளை வார்ப்பிப்பது போல். ஒவ்வொரு மணியும் வெவ்வேறு ஓசைகளை எழுப்ப வேண்டும். இவைகளைச் செய்ய அவன் அதே உலோகங்களை உபயோகிக்கிறான். ஆனால் இவ்வளவு இரும்பு இவ்வளவு எஃகு, இவ்வளவு பித்தளை என்று அவன் சேர்த்து ஒரு பிரித்தியேக ஓசை உண்டாகும்படி செய்கிறான். அப்படித்தான் தேவன் செய்தார். அவர் இதிலிருந்து அதை, இதிலிருந்து அதை, இதிலிருந்து அதை உருவகப்படுத்தி அவர் எதை விரும்பினாரோ அதை அப்படியே பெற்றுக் கொண்டார். அவர் அப்படித்தான் கீழே இறங்கி வந்தார். தேவன் தம்மை அக்கினி ஸ்தம்பத்திலிருந்து தீர்க்கதரிசிகளின் வழியாக திரைநீக்கி வெளிப்படுத்தி முடிவில் தேவனுடைய குமாரனுக்குள் (அவர் தேவனாயிருந்தார்) தம்மை வெளிப்படுத்தினார். பாருங்கள். அதே தேவன் பரிபூரணத்தின் மேல் பரிபூரணத்திலும் மகிமையின் மேல் மகிமையிலும் தம்மைக் காண்பித்தார். அப்படித்தான் சபையும் சென்று கொண்டிருக்கிறது. 47கவனியுங்கள், காலங்கள் தோறும் அதே விதமாக அவர் தம்மை தமது தீர்க்கதரிசிகளின் மூலம் வெளிப்படுத்திக் காண்பித்தார். அவர்கள் உண்மையில் தீர்க்கதரிசிகள் அல்ல. அவர்கள் தேவர்கள். அவர் அவ்வாறு கூறினார். அவர்கள் உரைத்தது தேவனுடைய வார்த்தை. அவர்கள் தேவன் திரைமறைக்கப்பட்டிருந்த மாம்ச சரீரமாயிருந்தனர். அவர்கள் தேவர்கள். இயேசுதாமே, “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று உங்கள் சொந்த நியாயப்பிரமாணம் கூறியிருக்க, என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே நீங்கள் எப்படி என்னைக் குற்றப்படுத்தலாம்?'' என்று கேட்டார் (யோவான் 10:36 - 36). பாருங்கள்? எனவே அது தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் ஒருவனில் தேவன் உருவாகுதலாகும். பாருங்கள்? தேவனுடைய வார்த்தை இந்த மனிதனிடத்தில் வந்தது. எனவே அது அந்த தீர்க்கதரிசியல்ல. தீர்க்கதரிசி ஒரு திரை மாத்திரமே, ஆனால் அவன் உரைத்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த மனிதனுடைய சொற்கள் அவ்வாறு கிரியை செய்திருக்காது. நான் கூறுவது புரிகிறதா? அது அவனுடைய சொற்களாக இருந்தால் அந்த விதமாக அது கிரியை செய்திருக்காது. அது மறைந்திருந்த தேவன். பாருங்கள், அவர் 'மனிதன்' என்றழைக்கப்பட்ட மனித உருவில் தேவனுடைய வார்த்தையாயிருந்தார். கவனியுங்கள், அவர் தமது சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை, அவருடைய உருவத்தை மாத்திரமே மாற்றிக் கொண்டார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபி. 13:8 உரைக்கிறது. எனவே அவர் வரும்போது தமது சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் காலங்கள் தோறும் அதே தீர்க்கதரிசியாக, வார்த்தை, வார்த்தை, வார்த்தை, வார்த்தை என்பதாக விளங்கினார். பாருங்கள்? அவர் தமது சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் தமது உருவத்தைத் தான் மாற்றிக்கொண்டார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபி.13:8 உரைக்கிறது. அவர் தமது வேடத்தை மாத்திரமே மாற்றிக் கொண்டார். 48உதாரணமாக, என் குழந்தை பிறந்த போது, நான் கணவன் என்னும் நிலையிலிருந்து தகப்பன் என்னும் நிலைக்கு மாறினேன். எனக்கு பேரப்பிள்ளை பிறந்தபோது, நான் பாட்டனானேன். பாருங்கள்? நான் மாறுவதில்லை. நான் இன்னமும்.... அது இன்னமும் நானே பாருங்கள்? (தேவனும் அவ்வாறே உள்ளார்). நான் என் நிலையை மாத்திரம் மாற்றிக் கொள்கிறேன். இயற்கை என்னை வாலிபனிலிருந்து நடுத்தர வயதுள்ளவனாகவும் பிறகு வயோதிபனாகவும் மாற்றுகிறது. பார்த்தீர்களா? பாருங்கள்? உங்கள் உருவம் தான் மாறுகிறது. இங்கு நின்று கொண்டிருக்கும் பதினாறு வயது பையனைப் பார்த்து அவனைப் பாட்டன் என்று நீங்கள் அழைக்க முடியாது. அவன் பாட்டனாக இருக்க முடியாது. அவன் உருவம் மாற வேண்டும். சில ஆண்டுகளில் அவன் உருவம் மாறிப் போய் பாட்டனாகி விடுகிறான். நான் கூறுவது புரிகிறதா? அது எக்காலத்தும் அதே நபர், எக்காலத்தும் அதே தேவன். இவ்விதமாக செய்வதன் மூலம், அவர் தம்மை தமது மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். கவனியுங்கள். அக்கினி ஸ்தம்ப காலத்தில் அவர் தம்மை தமது மக்களுக்கு வெளிப்படுத்தினார். இயேசுவின் காலத்தில் அவர் தம்மை தமது மக்களுக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியின் காலத்தில் தேவனுடைய குமாரனாக வெளிப்படுத்தினார். தாவீதின் குமாரன்... இந்த வகையில் அவர் தம்மை தம் மக்களுக்கு வெளிப்படுத்தி, அவர்கள் தம்மை அறிந்து கொள்ளும்படி செய்கிறார். கவனியுங்கள். அவர் அதேவிதமாக ஏதாவது ஒன்றன்பின் திரைமறைக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அதே சுபாவம். 49சிலுவையில் மீட்பின் கிரியையை செய்து முடிக்கும் பொருட்டு, தேவன் இயேசுவில் திரை மறைக்கப்பட்டிருந்தார். ஆவியாகிய தேவன் மரிக்க முடியாது. அவர் நித்தியமானவர் எனவே அவர் ஒரு வேடம் அணிந்து மரணத்தின் பாகத்தை ஏற்று நடிக்க வேண்டியிருந்தது. அவர் நிச்சயம் மரித்தார். ஆனால் அவருடைய தேவனுடைய உருவில் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவர் குமாரனுடைய உருவில், பூமியில் மனுஷ குமாரனாக, அதை செய்ய வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? அவர் குமாரனுடைய உருவில் இருக்க வேண்டியதாயிருந்தது. அதன் பிறகு அவர் பெந்தேகோஸ்தேநாளில் திரும்பி வந்தபோது, அவர் மறுபடியும் தேவனுடைய குமாரனாக வந்தார். நான் கூறுவது புரிகிறதா? அந்த கருத்து விளங்குகிறதா? அவர்...... 50அவர் மானிட சரீரத்தில் வரவேண்டியதாயிருந்தது... யாருமே.. எந்த இனசேர்க்கை உணர்ச்சியுமின்றி. அது மறுபடியுமாக சர்ப்பத்தின் வித்து என்னும் நமது கருத்தை நிரூபிக்கிறது. பாருங்கள் “இன சேர்க்கை'', முற்றிலுமாக ''இனசேர்க்கை உணர்ச்சி” அது ஆப்பிள் பழங்கள் அல்ல. இனசேர்க்கை அது உண்மை. அது அப்படித்தான் இருக்க வேண்டும். இங்கு கவனியுங்கள். பாருங்கள், எந்த நல்ல மனிதனுக்கும்... அந்த தீர்க்கதரிசிகளைப் பாருங்கள், அவர் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராக இருக்க வேண்டும். பாருங்கள்? அவ்வாறு இருப்பதற்காக அவர் கன்னிகை பிறப்பின் மூலம் வரவேண்டியாதாயிருந்தது. அந்த கன்னிகை பிறப்பு நிரூபித்தது என்னவெனில்.. சாபத்தை எடுத்துப்போட, விஷத்திற்கு மாற்று மருந்தாக (antidote) அவர் கன்னிகையின் வயிற்றில் பிறக்க வேண்டியதாயிருந்தது. நான் கூறுவது விளங்குகிறதா? எனவே பாவம் இனசேர்க்கையின் மூலம் வந்திருக்க வேண்டும் அவருடைய பிறப்பின் மூலம் அவர் அதை நிரூபித்தார். அவர் இன இச்சையின் மூலம் பிறக்காமல் கன்னிகை பிறப்பின் மூலம் பிறந்தார். அவர் நடிக்கும் நாடகத்தில், சிலுவையில் மீட்பின் கிரியையை செய்து நிறைவேற்ற, அவர் யேகோவாவிலிருந்து மாறி இயேசு என்னும் வேடம் பூண்டார். 51கிரேக்கர் அவரைக் காண விரும்பினர். அது பரி. யோவான் 12:20ல் கூறப்பட்டுள்ளது. உங்களில் அநேகர் அதன் பேரில் நான் “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்னும் தலைப்பில் பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறீர்கள். அதை நீங்கள் கவனித்தீர்களா? கிரேக்கர் படித்த மேதைகள், அவர்கள் மிகவும் பெரியவர்கள். அவர்களுக்கு தேவன் பேரில் மிகுந்த உணர்ச்சி இருந்தது. பவுல் அவர்களுக்கு மார்ஸ் மேடையில் பிரசங்கித்தான். அவர்கள் விஞ்ஞானத்திலும் கல்வியிலும் உலகில் தலை சிறந்தவர்களாயிருந்தனர். அவர்கள் மிகப்பெரியவர்கள். ஆனால் அவர்கள் கட்டுக்கதைகளில் நம்பிக்கை கொண்டு அத்தகைய தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அவர்கள் இலக்கியத்திலும் கலையிலும் மிகவும் ஆர்வம்கொண்டிருந்தனர். வியாதியஸ்தரை சுகப்படுத்தி, நடந்த சம்பவங்களை பிழையின்றி எடுத்துரைத்த இந்த மனிதரைக் குறித்து அவர்கள் உற்சாகம் கொண்டு அவரைக் காண வந்தனர் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், இதைக் காணத்தவறாதீர்கள். பாருங்கள்? அவர்கள் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடம் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்றனர். பிலிப்புவும் மற்றொரு சீஷனும் இயசுேவைக் காண அவர்களை அவரிடம் கொண்டு வந்தனர். அவர் யாரென்று காண அவர்கள் வந்திருந்தபோது இயேசு சீஷர்களிடம் உரைத்த வார்த்தைகளை கவனியுங்கள். கிரேக்கர் அவரைக் காண முடியவில்லை. அவர்கள் அவருடைய உருவத்தைக் கண்டனர். ஆனால் அவரோ அவருடைய ஆலயத்தில் இருந்தார். தேவன் தம்முடைய ஆலயத்தில், மாம்ச சரீரத்தினால் திரைமறைக்கப்பட்டிருந்தார். அவர் உரைத்த வார்த்கைளை கவனியுங்கள்: “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்.'' பாருங்கள்? ”மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது, அவர் இவ்வுலகை விட்டு கடந்து செல்ல வேண்டும். அந்த வேளை வரும் வரைக்கும் நீங்கள் அவரைக் காண முடியாது.'' பாருங்கள்? 52கேட்டீர்களா? அவர்களால் ஏன் இயேசுவை கூட காண முடியவில்லை? அவர் மறைக்கப்பட்டிருந்தார். தேவன் மறைக்கப்பட்டிருந்தார். கிரேக்கருக்கு தேவன் வேண்டியதாயிருந்தது. அவர் அங்கிருந்தார். ஆனால் திரையின் காரணமாக அவர்களால் அவரைக் காண முடிவில்லை. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது! திரையின் காரணமாக அவர்கள் அவரைக் காண முடியவில்லை. அந்த திரை அவர்கள் முகத்தின் மேல் உள்ளது. கிரேக்கர்கள் காண முடியாதவாறு அவர்களுடைய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தன. இல்லை, இயேசு கிரேக்கர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தார். கவனியுங்கள், அவர் அவர்களிடம், ''கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்'' என்றார். அவர்களால் ஏன், எதற்காக அவரைக் காண முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கு ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் தேவனைக் காண வந்தனர், அவர்கள் ஒரு மனிதனைக் கண்டனர். பாருங்கள்? தேவன் அவர்களுக்கு திரை மறைக்கப்பட்டிருந்ததால், அவர்களால் தேவனைக் காண முடியில்லை. இதை மனதில் கொள்ளுங்கள்: தேவன் ஒரு மனிதனில் திரைமறைக்கப்பட்டிருந்தார். அவர்கள், “தேவனைத் தவிர எந்த மனிதனும் இந்த கிரியைகளைச் செய்ய முடியாது. எந்த மனிதனும் இவைகளைச் செய்ய முடியாது. இதோ ஒரு மனிதன் இங்கு நின்று கொண்டிருக்கிறார். அவர் மூலம் தேவனுடைய கிரியைகள் வெளிப்படுவது எப்படி?'' என்று வியந்தனர். பாருங்கள், தேவன் திரைமறைக்கப்பட்டிருந்தார் என்பதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. 53அவர் எப்பொழுதுமே திரைமறைக்கப்பட்டிருந்தது போல, அப்பொழுது ஒரு மனிதனில் திரைமறைக்கப்பட்டிருந்தார். அந்த கிரேக்கருக்கு அவர் திரைமறைக்கப்பட்டிருந்தார். அவர் தமது சரீரமாகிய ஆயலத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். தேவன் மனித சரீரமாகிய ஆலயத்தில் வாசம் செய்தார். இப்பொழுது மிகுந்த கவனமாயிருங்கள், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். பாருங்கள், தேவன் திரையிடப்பட்டு உலகத்துக்கு தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு மனித சரீரத்தில் திரையிடப்பட்டிருக்கிறார் பாருங்கள். அதோ தேவன் அங்கிருந்தார். கிரேக்கர் அவரைக் காண விரும்புகிறோம்'' என்றனர். இயேசு, “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாக வேண்டும்'' என்றார். நீங்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் மரித்தவர்களாயிருக்க வேண்டும். உங்கள் சிந்தனைகளை விட்டு நீங்கள் விலக வேண்டும். உதாரணமாக, அந்த சீஷர்களுக்கு, அவருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணுவது என்ன என்பதற்கு விளக்கம் தரமுடியவில்லை. ஆனால், பாருங்கள், அத்தகைய காரியங்களுக்கு அவர்கள் மரித்தவர்களாயிருந்தனர். அவர்கள் ஒரு கொள்கைக்கு மரித்தவர்களாயிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு மரித்தவர்களாயிருந்தனர். அவர் என்ன செய்தபோதிலும், அவருக்கு எவ்வளவு தோல்வி நேர்ந்தது போல் காணப்பட்டாலும், அவர்கள் அதை விசுவாசித்தனர். பாருங்கள்? அவர்களால் அந்த மனிதனில் காண முடிந்தது... அந்த மனிதன் புசித்தார், குடித்தார், மீன் பிடித்தார், உறங்கினார், எல்லாவற்றையும் செய்தார், அவர் இவ்வுலகில் பிறந்தவர், அவர்களுடன் நடந்தார். அவர்களுடன் பேசினார். மற்றவர்களைப் போல் உடை உடுத்தினார். ஆனால் அவர் தேவனாயிருந்தார். 54கிரேக்கர் அவரைக் காணமுடியாமற் போயிற்று. ஏனெனில் அவர் ஒரு மனிதனில் அவர்களுக்கு மறைந்திருந்தார். அவர்களுக்கு அவர் கூறின வார்த்தைகளை கவனியுங்கள். ''கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்!'' தேவன் மனித உருவில் திரையிடப்பட்டு அவர்களுடைய கருத்துக்கு தம்மை மறைத்துக் கொண்டார். அவர்களால் ஒரு மனிதனை மாத்திரமே காண முடிந்தது. ஆனால் முன்குறிக்கப்பட்டவர்கள் தேவனைக் கண்டனர். ஒருவன் மனிதனைக் கண்டான், மற்றவன் தேவனைக் கண்டான். பாருங்கள்? தேவன் மனித சரீரத்தில் திரையிடப்பட்டு, இருவர் செய்வதும் சரியென்று காண்பிக்கிறார். நீங்களோ காணாததை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் எப்படியானாலும் அதை விசுவாசிக்கிறீர்கள். தேவன் மனித சரீரத்தில் திரையிடப்பட்டிருத்தல். அவர் அந்த மாம்சத்தில் இருந்தார், அந்த மாம்சம் அவருக்குத் திரையாயிருந்தது. தேவன் காணப்படுவதற்கென அந்த திரை கிழிக்கப்பட்டது, பாருங்கள். 55பழைய ஏற்பாட்டின் காலத்தில், தேவன் தம்முடைய கிருபாசனத்தில் வீற்றிருந்த போது மறைக்கப்பட்டிருந்தார். கிருபாசனம் திரையினால் மறைக்கப்பட்டிருந்தது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன் தமது தேவாலயத்தில் வாசம் பண்ணினார். ஜனங்கள் உள்ளே வந்து இப்படி தொழுது கொண்டனர். ஆனால் ஒரு திரை (ஆமென்) தேவனை மறைத்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் அங்கிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களால் அவரைக் காண முடியவில்லை. அந்த அக்கினி ஸ்தம்பம் அதன் பிறகு காணப்படவேயில்லை. நீங்கள் கவனித்தீர்களா? அந்த அக்கினி ஸ்தம்பம் அந்த திரைக்குப் பின்னால் சென்ற பிறகு, இயேசு கிறிஸ்து வந்தபோது தம்மை மறுபடியும் காண்பிக்கும் வரைக்கும் அது ஒரு முறையாவது காணப்பட்டதாக வேதத்தில் சான்று எதுவுமில்லை. தேவன் திரையிடப்பட்டிருந்தார். அவர் பூமியிலிருந்தபோது, ''நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் பிதாவினிடத்திற்குப் போகிறேன்'' என்றார் (யோவான் 16:28). அவருடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, பவுல் தமஸ்குவுக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில், அந்த அக்கினி ஸ்தம்பம் மறுபடியும் காணப்பட்டது. அது என்ன? திரைக்குப் பின்னாலிருந்து வெளியே வருதல். தேவனுக்கு மகிமை! 56அவர் திரைக்குப் பின்னால் இருந்தார். அவர் எதற்குப் பின்னால் இருந்தார்? தோல் திரைக்கு பின்னால். பாருங்கள், தகசுத் தோல் திரைக்குப் பின்னால், சிலுவை மரணத்தின் போது அந்த திரை கிழிந்தது. அவர் சுற்றப்பட்டிருந்த திரை சிலுவை மரணத்தின்போது கிழிந்த போது, முழு கிருபாசனமும் காட்சிக்கு வந்தது. நம்மைப் போன்ற பாவமுள்ள, அழுக்கான மக்களிடம் தேவன் எவ்வாறு இரக்கமுள்ளவராயிருக்க முடியும் என்பதை யூதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரக்கத்தை அளிக்கும் இந்த ஒருவரை அவர்களால் காணமுடியவில்லை. ஏனெனில் அவர் மறைக்கப்பட்டிருந்தார். அவர் உள்ளே கிருபாசனத்தில் இருந்தார். தக்சுத் தோல்கள் கீழே தொங்கிக் கொண்டு அவரை மூடிக் கொண்டிருந்தன. முன்பு, அவன் 57முன்பு ஒரு மனிதன், அந்த திரைக்குப் பின்னால் சென்றால், அது உடனே மரணத்தை விளைவிக்கும். (ஓ, இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் ஒரு பாடம் கற்கப் போகிறோம், பாருங்கள் உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமானால்). அந்த தோல்களுக்குப் பின்னால் செல்லுதல்; ஒருமுறை ஆசாரியனின் குமாரர்களில் ஒருவன் அதை செய்ய முயன்று மரித்துப் போனான். அந்த திரைக்குப் பின்னால் போக வேண்டாம். அதற்கு பின்னால் செல்லும் மனிதன்... ஏன்? அதில் அப்பொழுது மீட்பு இருக்கவில்லை. அது மறைவாக இருந்தது. (potential) மறைவாக உள்ள எதுவும் உண்மையான காரியமாக ஆகாது. பாருங்கள், மறைவாக. அது மீட்பு... பாவம் மூடப்பட்டது, நீக்கப்படவில்லை. அது போக்கப்படவில்லை. போக்கப்படுதல் (remitted) என்னும் சொல், ''நீக்கப்பட்டு தள்ளிவிடுதல்'' என்று அர்த்தம் கொள்ளும். செம்மறியாடுகள் வெள்ளாடுகளின் இரத்தம் அதை செய்யமுடியவில்லை, எனவே யேகோவா திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். அவர் மறைந்து கொண்டிருந்த திரைக்குப் பின்னால் உள்ள ஸ்தலத்தில் ஒருவன் பிரவேசிக்க முயன்றால், அவன் அங்கேயே செத்து விழுந்தான். 58ஆனால் பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு சிலுவை மரணத்துக்குப் பிறகு, அந்த திரை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்த பிறகு, அந்த சந்ததிக்கு... இயேசு திரை மறைக்கப்பட்ட அந்த தேவனாயிருந்தார். அவர் கல்வாரியில் மரித்தபோது, தேவன் அக்கினியையும் மின்னலையும் அனுப்பி, அந்த திரையை மேலிருந்து கீழ்வரை கிழித்துப்போட்டார். அப்பொழுது முழு கிருபாசனமும் வெளிப்படையான காட்சிக்கு வந்தது. ஆனால் அவர்களோ அதைக் காணக் கூடாமல் மிகவும் குருடாயிருந்தனர். மோசே இங்கு கூறினது போல்; மோசேயின் ஆகமங்களைப் படிக்கையில் என்ன செய்கின்றனர். என்று பவுல் கூறினது போல்: ''மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின் மேல் இருக்கிறதே'' என்றான் அவன். ஓ, சகோதரனே, சகோதரியே, இயேசு சிலுவையில் தொங்கினபோது, திரை கிழிக்கப்பட்டு அது தேவனை வெளிப்படையான காட்சிக்குக் கொண்டு வந்தபோது, யூதர்கள் அதை தான் செய்தனர். தேவன் வெளிப்படையான காட்சிக்கு வந்தார், ஆனால் அவர்களால் அதைக் காண முடியவில்லை. 59புறஜாதிகளும் அதையே தான் செய்திருக்கக் கூடுமா? (ஓ தேவனே!) அவர்களுக்கு தேவனுடைய குமாரனின் சபை காலங்கள் இருந்தன. இப்பொழுது இந்த ஸ்தாபனங்களின் திரை; பெந்தெகொஸ்தேவுக்கு பிறகு நாம் பெற்றுள்ள இந்த சபை பாரம்பரியங்கள் கிழிக்கப்பட்டு, ஜனங்கள், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன“ என்று சொன்ன அப்படிப்பட்ட திரையை தேவன் கிழித்துவிட்டு அதை வெளிப்படையான காட்சிக்கு கொண்டு வந்த பிறகும், அவர்கள் அதை மறுபடியும் சிலுவையில் அறைய ஆயத்தமாயுள்ளனர். அது முற்றிலும் உண்மை. 60திரை நீக்கப்பட்ட தேவன், வெளிப்படையான காட்சிக்கு வந்து அங்கு நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டிருக்கவேண்டும். ஆனால் அவரோ மிகவும் எளியவர். சாதாரணமானவர். அவர்களால் அதைக் காணமுடியவில்லை. பாருங்கள், அங்கு ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தார். அவர்கள், ''இந்த ஆள் எந்த பள்ளிக் கூடத்தில் படித்தார்?'' என்று கேட்டார்கள். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், ஈட்டி அவருடைய சரீரத்தை தாக்கினபோது, அந்த ஆவி அவரை விட்டுச்சென்றது. அந்த ஆலயம்... பலிபீடம் கவிழ்ந்தது. மின்னல் தேவாலயத்தில் அடித்து அந்த திரைச்சீலையைக் கிழித்தது. அது என்ன? அவர்களுடைய தேவன் கல்வாரியில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைக் காணக்கூடாதவாறு அவர்கள் மிகவும் குருடாயிருந்தனர். அது அவரைத் திறந்த காட்சிக்கு கொண்டு வந்தது. இருப்பினும், அவர்கள் இன்னமும் அதைக் காணவில்லை. அவர்கள் குருடாயிருக்கின்றனர். தேவன் ஒரு மனிதனுக்கு திரைமறைக்கப்பட்டிருத்தல். 61உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அதன்பிறகு அவர் அக்கினி ஸ்தம்பமாக பவுலினிடத்திற்கும், சிறையிலுள்ள பேதுருவினிடத்திற்கும் திரும்ப வந்தார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்தக் கடைசி நாட்களில் அவர் திரும்ப வரவேண்டும். மனுஷகுமாரனை வெளிப்படுத்தவும், பாருங்கள். வார்த்தையாகிய வெளிச்சத்தைக் காண்பிக்கவும் அக்கினி ஸ்தம்பம் மறுபடியும் வரவேண்டும். இதுவரைக்கும் உண்டாயிருந்த பாரம்பரியங்கள் நீக்கப்படும். அதை எதையும் தொல்லைப்படுத்தப் போவதில்லை, அது எப்படியும் நடந்தே தீரும். தேவன் அந்த ஸ்தாபனங்களையும் பாரம்பரியங்களையும் கிழித்தெறிவார். எந்த விதமான ஆவியால் அவர் அதைச் செய்வார்? அவர் முதலில் செய்தது போல். எலியாவின் நாட்களில், யோவானின் நாட்களில் அவர் என்ன செய்தாரென்று பாருங்கள். ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்'' என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' (மத்.3:9). பாருங்கள்? ''நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன்“ என்று நினைக்காதீர்கள். பாருங்கள்? தேவன் தாம் யாரென்பதைக் காண்பிக்க திரையைக் கிழித்து விட்டார், பாருங்கள். திரை கிழியும்போது, அதை கவனியுங்கள், இப்பொழுது நாம் காண்பது என்னவெனில், 62ஒரு காலத்தில் ஒரு மனிதன் திரைக்குப் பின்னால் சென்றால், அது சடுதியான மரணத்தை விளைவித்தது. இப்பொழுது திரைக்குப் பின்னால் செல்லாதது மரணத்தை விளைவிக்கும்! ஆமென். நீங்கள் பாரம்பரியம் என்னும் திரையை, ஸ்தாபனம் என்னும் திரையை உடைத்து உள்ளே சென்று, தேவனை தமது வல்லமையில் காணாவிட்டால், அது மரணத்தை விளைவிக்கும். ஒரு காலத்தில் உள்ளே சென்றது மரணத்தை விளைவித்தது, இப்பொழுது உள்ளே செல்லாமல் வெளியே இருப்பது மரணத்தை விளைவிக்கும். முழு கிருபாசனமும் வெளிப்படையான காட்சிக்கு வந்துவிட்டது, எவருமே அதைக் காணலாம். திரை கிழிக்கப்பட்டு விட்டது. தேவனுக்கு மகிமை! முழு கிருபாசனமும் வெளிப்படையான காட்சிக்கு வந்துள்ளது. 63தேவன் தம்மை மறைத்துக் கொண்டபோது, நம்மைப் போன்ற அசுத்தமான பாவிகளின் மேல் எப்படி இரக்கம் காண்பிக்க முடிந்தது என்பது பரம ரகசியமே. அது இப்பொழுது வெளிப்படையான காட்சிக்கு, முழுகாட்சிக்கு வந்து, அவருடைய வார்த்தையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது எப்பொழுதுமே வார்த்தை, அது தேவன். வார்த்தைதான் அதை திறந்து கொடுக்கிறது. இயேசு மரித்த அந்த நாளில் இருந்த ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்திருப்பார்களானால், அவர்கள் கிருபாசனத்தைக் கண்டிருப்பார்கள், அவர் யாரென்பதை அறிந்து கொண்டிருப்பார்கள். “அந்த மனிதன் யார்? திரைச்சீலை ஏன் கிழிந்தது?'' ஞாபகம் கொள்ளுங்கள், அதற்குள் செல்வது மரணத்தை விளைவித்தது. யாருமே அதைக் காண முடியவில்லை. மோசே அதை ஒரு உருவில் கண்டான். அது சுழற்... அது ஒரு மனிதனின் பின்பாகம். இதோ அது, இரத்தம் கொட்டும் பின்பாகம், அதே மனிதன். அது என்ன? தேவன் அவர்களுக்கு கிருபாசனத்தைக் காண்பிக்க விரும்பினார். எனவே தேவாலயத்தின் திரைச்சீலை மேலேயிருந்த தேவனுடைய கரங்களால் மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிக்கப்பட்டு அது தேவனை வெளிப்படையான காட்சிக்குக் கொண்டு வந்தது. சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவே கிருபாசனம். அது என்ன? அதைக் காணக்கூடாதவாறு ஜனங்கள் மிகவும் குருடாயிருந்தனர். 64அது மறுபடியும் நடந்தது. பாரம்பரியங்கள், எப்படி ... பெந்தெகொஸ்தே நாளில் வார்த்தை “தேவனுடைய குமாரன்” உருவில் வந்தது. அவர்கள் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் அதை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். முதலாவதாக அவர்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே போன்ற ஸ்தாபனங்களுக்குள் சென்றனர். அவை மனிதனின் பாரம்பரியங்களைக் கொண்டு கட்டப்பட்ட ஸ்தாபனங்கள், அவனுடைய நிலையென்ன என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் தேவனுக்கு மகிமை! அவர் கடைசி நாட்களில் என்ன செய்யப்போகிறார் என்பதை வாக்களித்துள்ளார். அவர் தமது வார்த்தையை வெளிப்படையான காட்சிக்குக் கொண்டு வந்து, நமக்கு முன்பாக அதை திறந்து காண்பிப்பார், பாருங்கள், திறந்து காண்பிப்பார். அவர்கள் மாத்திரம் வார்த்தையை அறிந்திருந்தார்களானால், இயேசு யாரென்பதை அறிந்து கொண்டிருப்பார்கள். மனிதன் ஒருவன் தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தையும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வான். அவர்கள் அந்த வார்த்தைக்கு செவி கொடுக்க மறுக்கின்றனர். அவர்களுடைய பாரம்பரியங்கள்... அதை யூதர்கள் காணத் தவறின காரணம் என்ன? அவர்கள் அதைக் கண்டிருக்கலாம். ஏனெனில் திரை கிழிக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. அது ஒரு நோக்கத்துக்காக கிழிக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. 65இப்பொழுது இந்த எழுப்புதல் எதைச் சார்ந்துள்ளது? அது எப்படி செழிக்க முடியும்? அது எப்படி ஆசீர்வாதமாயிருக்க முடியும்? எத்தனை போலிகள் தோன்றினாலும் எனக்குக் கவலையில்லை. அவையெல்லாம்... மோசே எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது, அவனுடன் கூட பல ஜாதியான ஜனங்கள் (mixed multitude) சென்றனர். அது எதற்காக நடந்தது? சரியானதற்கும் தவறானதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்க யேகோவாவே தேவனை மறைத்திருந்த திரையை நீக்குதலாகும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், யார் சரி? தேவனுடைய வார்த்தையே சரி! ''எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய், என் வார்த்தையே சத்தியம்.“ (ரோமர் 3:4). தேவனுக்கு வியாக்கியானி எவரும் அவசியமில்லை. அவரே தமது சொந்த வியாக்கியானத்தை அளிக்கிறவர். அவர் அதை நிறைவேற்றி.... அதற்கு வியாக்கியானம் அளிக்கிறார். தேவனே தம்மை திரைநீக்கி கொள்கிறார். ஓ, என்னே! நமது மத்தியில் தேவனுடைய மகத்தான கரம் இந்த காரியங்களை உரைத்து, இந்த காரியங்களைச் செய்வதை நாம் காண்கிறோம். தேவனுடைய கரத்தை எவ்வாறு கவனிப்பது, அது என்ன செய்கிறது, அது எப்படி தன்னை வெளிப்படுத்துகிறது என்பதைக் குறித்து இன்றிரவு சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். பாருங்கள்? ஜனங்களோ, “ஓ, அது அர்த்தமற்றது. அது மூட மனிதாபிமானம், அதெல்லாம் ஒன்றுமில்லை, அது மூடத்தனம். அது பெயல்செபூல், அது பிசாசு, அது குறி சொல்லுதல், அது இது'' என்கின்றனர். பாருங்கள், அவரைக் குறித்து கூறினதையே கூறுகின்றனர். 66ஓ சபையே, இந்த ஒலிநாடா வெளியே செல்லுமானால், சுவிசேஷத்தின் ஊழியக்காரரே, நீங்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களால் காண முடியவில்லையா? நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தை உங்களால் காண முடியவில்லையா? தேவன் எல்லாவற்றையும் அப்புறம் தள்ளி விட்டு தம்மை காண்பித்துக் கொண்டிருக்கிறார். பாருங்கள், அவர்கள் தேவனை வெளிப்படையான காட்சியில் காண வேண்டும் என்பதற்காக அவர் தேவாலயத்தின் திரைச்சீலையை துண்டு துண்டாக கிழித்துப் போட்டார். ஆனால் அவர்களோ அவரைக் காணக் கூடாதவாறு மிகவும் குருடாயிருந்தனர். இன்றைக்கு அவர் அதையே செய்து, அவருடைய வார்த்தையை, அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை முன்னிலையில் வைத்துள்ளார். வார்த்தையிலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் வெளிப்படையான காட்சியில் நமக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. புறஜாதி சபை என்ன செய்கிறது தெரியுமா? யூத சபை செய்ததையே செய்கிறது. இவர்களும் காணக்கூடாதவாறு மிகவும் குருடாயிருக்கின்றனர். அவ்வளவுதான். அந்த நாளில் இருந்தது போல, இவர்களுடைய இருதயங்களின் மேலும் முக்காடு இருக்கிறது. 67கவனியுங்கள், இப்பொழுது அதற்குள் பிரவேசிக்காமல் தங்கி விடுவது மரணத்தை விளைவிக்கும். நீங்கள் திரையின் வழியாக அதற்குள் பிரவேசிக்க வேண்டும், இல்லையென்றால் சாவீர்கள். இப்படிப்பட்டவர்கள் மேல் தேவன் எப்படி இரக்கம் காண்பிக்க முடியும்? அது என்னவென்பதை ஞாபகம் கொள்ளுங்கள், திரைக்குப் பின்னால் என்ன இருந்ததென்று கவனியுங்கள். வார்த்தை, திரை எதை மறைத்திருந்தது? வார்த்தையை. அது என்ன? அது உடன்படிக்கை பெட்டிக்குள் இருந்தது. திரை மறைத்திருந்தது வார்த்தையே பாருங்கள்? இயேசுவே அந்த வார்த்தை. அவர் அந்த வார்த்தை. அவருடைய மாம்சம் என்னும் திரை அதை மறைத்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு பாரம்பரியம் என்னும் திரை மறுபடியும் வார்த்தையை மறைத்து, ''அது அப்படியல்ல'' என்கிறது. ஆனால் அது அப்படித்தான். தேவன் அதைக் குறித்து சாட்சிக் கொடுத்து, எல்லோருக்கும் முன்னால் சூரிய வெளிச்சம் போல பிரகாசமாக தம்மை வேகமாக வெளிப்படுத்தின போதிலும், அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். தேவனே, எங்கள் மேல் இரக்கமாயிரும். 68அதற்கு உதாரணமாக, மோசே தேவனுடைய சமுகத்திலிருந்து அக்காலத்துக்கான தேவனுடைய வார்த்தையைப் பெற்று வருகிறான். கவனியுங்கள், இப்பொழுது நாம் யாத்திரகாமம் 19ம் அதிகாரத்தில் இருக்கிறோம். யாத்திராகமம் 19, மோசே தேவனுடைய சமுகத்திலிருந்து புறப்பட்டு வருகிறான். 20, 21 வசனங்கள். 19:20,21. மோசே தேவனுடைய சமுகத்திலிருந்து புறப்பட்டு வருகிறான், அவன் வார்த்தைக்குள் பிரவேசித்திருந்தான். வார்த்தை எழுதப்பட்டது. அவன் தேவனுடைய சமுகத்தில் வார்த்தையோடு நின்று கொண்டிருந்தான். அவன் அக்காலத்துக்கான வார்த்தையை உடையவனாயிருந்தான். ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு வார்த்தை உண்டு. மோசே புறப்பட்டு வந்தபோது அவனுடைய முகம் பிரகாசித்தது. பாருங்கள்? வார்த்தை அவனுக்குள் இருந்து, ஜனங்களுக்கு அளிக்கப்பட, வெளிப்பட ஆயத்தமாயிருந்தது. உண்மையான வார்த்தை, தேவன் அதை எழுதினார், அது மோசேயிடம் இருந்தது. கவனியுங்கள், அது மோசேயிடம் இருந்து,வெளிப்பட ஆயத்தமாயிருந்தது. அவன் அவர்களுக்கு வார்த்தையாயிருந்தான். அவன் ஜீவிக்கிற வார்த்தையாக, தன்னை மறைத்துக் கொண்டான். மோசே தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏன்? அவன் அந்த வார்த்தையாயிருந்தான்! ஆமென். அந்த வார்த்தை அறிவிக்கப்படும் வரைக்கும், மோசே தன்னை முக்காடு போட்டு மறைத்துக் கொள்ள வேண்டிதாயிருந்தது. ஆமென். உங்களால் அதை காண முடிகிறதா? வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அது திரையிட்டு மறைக்கப்படுகிறது. 69மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், வார்த்தை வெளிப்பட்ட பின்பு, மோசே மறுபடியும் மோசேயாகி விட்டான். பாருங்கள்? ஆனால் வார்த்தை அறிவிக்கப்படுவதற்காக அது அவனுக்குள் இருந்த போது, அவன் தேவனாயிருந்தான்! அப்பொழுது அவன் மோசேயாயிருக்கவில்லை. அவன் அக்காலத்துக்கான கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். அது முடியும் வரைக்கும், அந்த வார்த்தை அவனிடம் இருந்த வரைக்கும், எதுவுமே அவனைத் தொட முடியவில்லை. எனவே அவன் வந்தபோது, ஜனங்கள் தங்கள் தலையைத் திருப்பிக் கொண்டனர். அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவன் வித்தியாசமான ஆளாக இருந்தான். அவன் அந்த வார்த்தையோடு வந்தான். அவனுடைய முகத்தின் மேல் அவன் முக்காடு போட்டுக் கொண்டதாக வேதம் உரைக்கிறது. ஏனெனில் அவன் வார்த்தையை உடையவனாயிருந்தான். அவன் அவர்களுக்கு வார்த்தையாயிருந்தான். 70இப்பொழுது பாருங்கள், மோசே... ஓ சகோதரனே, இங்கு ஒரு நிந்தை ஏற்படப்போகிறது. மோசே... பவுல் 2 கொரிந்தியர் 3ம் அதிகாரத்தில் கூறுவது போல், அப்படிப்பட்ட மகிமை அவன் மேலிருந்த போது, மோசே தன் முகத்துக்கு முக்காடு போட்டுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுமானால்... பாருங்கள், ஏனெனில் அது மாம்சப்பிரகாரமான மகிமை, அது மாம்சப்பிரகாரமான நியாயப்பிரமாணம். மோசே... அந்த நியாயப்பிரமாணம் ஒழிந்து போகக் கூடியது என்று அறிந்தும். ஆனால் அந்த மகிமை அதிக பிரகாசமாயிருந்தபடியால், அது ஜனங்களைக் குருடாக்கிற்று. எனவே அவர்கள் அவனுடைய முகத்தின் மேல் முக்காடு போட வேண்டியதாயிருந்தது. அப்படியானால் இந்த மகிமை அதைக் காட்டிலும் எவ்வளவு பெரிதாயிருக்கும்? (ஆவிக்குரிய பிரகாரம் குருடாக்கப்பட்ட மக்கள்! ஊ, ஊ). அந்த மகிமை மறைந்து போகவேண்டியது, ஆனால் இந்த மகிமையோ ஒருக்காலும் மறைந்து போகாது. பாருங்கள்? மோசே ஆக்கினைக்குட்படுத்தும் மாம்சப்பிரகாரமான நியாயப் பிரமாணத்தை உடையவனாயிருந்தான். அதில் கிருபை இல்லை, எதுவுமில்லை, அது உங்களைக் குற்றப்படுத்தினது. ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் இதுவோ... அதில் மன்னிப்பு கிடையாது, நீங்கள் யாரென்பதை அது உங்களுக்கு எடுத்துக் கூறினது. ஆனால் இதுவோ நீங்கள் தப்பித்துக் கொள்ள வழியைக் காண்பிக்கிறது. அந்த வார்த்தை திரைநீக்கப்பட்டு வெளிப்படும் போது, ஓ, என்னே, அது எப்படிப்பட்ட விசுவாசமாய் இருக்கும்? அது திரை மறைக்கப்பட வேண்டும். அது திரையிட்டு மறைக்கப்படத்தான் வேண்டும். இப்பொழுது, கவனியுங்கள், ஆவி மனித சரீரம் என்னும் ஆலயத்தில் திரை மறைக்கப்பட்டுள்ளது. மோசே மாம்ச திரையைக் கொண்டவனாய் மாம்சப் பிரகாரமான வார்த்தைகளைப் பேசுகிறான். 71இப்பொழுது, பவுல் என்ன கூறுகிறான் என்றால் - இந்த அர்த்தத்தில், ஆவி - வார்த்தை - “நாங்கள் எழுத்தின்படி (நியாயப் பிரமாணத்தின்படி) ஊழியக்காரராயிராமல், ஆவியின்படி ஊழியக்காரராயிருக்கிறோம்'' ஆவி எழுத்தை எடுத்து அதை வெளிப்படுத்துகிறது. அது வெறும் நியாயப்பிரமாணம். நீங்கள் சென்று அதைக் கண்டு, ''விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய் சொல்லாதிருப்பாயாக, இதை, அதை, மற்றதை செய்யாதிருப்பாயாக“ என்று சொல்ல வேண்டும். நீங்கள் அதை பார்த்து சொல்ல வேண்டும். ஆனால் இதுவோ இந்த காலத்துக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின்மேல் வரும் ஆவியாகும். அது (இரண்டு கற்பலகைகளையல்ல), ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாயுள்ளது. இது யாரோ உண்டாக்கின கட்டுக்கதையோ, ஜாலவித்தையோ அல்ல. இது தேவனுடைய வாக்குத்தத்தம் வெளிப்பட்டு நமக்கு முன்னால் காண்பிக்கப்படுவதாகும். அப்படியானால் அந்த திரைக்குப் பின்னால் என்ன இருக்கும்? இதை இழந்து போவதென்பது ... 72பாருங்கள், அது மிகவும் மகத்துவமானதாயிருந்தது, அதைக் கண்டபோது ஜனங்கள் - யேகோவா அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து பூமியை அசைத்தபோது - அவர் செய்த காரியங்களும் மலை தீ பற்றி எரிந்ததையும். மலையினருகில் செல்ல முயன்ற எவருமே அழிந்து போனார்கள். அது மிகவும் பயங்கரமாயிருந்தது, மோசேயும்கூட பூமியதிர்ச்சியைக் கண்டு நடுங்கினான். அப்பொழுது அவர் மலையை மாத்திரம் அதிரச் செய்தார். இப்பொழுது அவர் வானத்தையும் பூமியையும் அதிரப்பண்ணுவார். இந்த மகிமையைக் குறித்தென்ன? அது இயற்கை திரையினால் திரையிடப்பட்டிருந்தது, இது ஆவிக்குரிய திரையினால் திரையிடப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இயற்கையானதை காண வேண்டாம், நீங்கள் ஆவிக்குரியதில் நுழைந்து, நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்றும், எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் காணுங்கள். 73அதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள், ஜனங்களின் மேல் ஆவிக்குரிய திரை உள்ளது. அவர்கள், ''நான் மெதோடிஸ்டு. நான் மற்ற எவரைப் போலவும் நல்லவனாயிருக்கிறேன். நான் பாப்டிஸ்டு. நான் பெந்தெகொஸ்தேகாரன்'' என்கின்றனர். இது பாரம்பரிய திரை என்பதை நீங்கள் உணருவதில்லையா? அது தேவனை உங்களிடமிருந்து மறைத்து விடுகிறது. நீங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்காதபடிக்கு உங்களைத் தடை செய்வது இவைகளே. ஓ, நீங்கள் “நான் கூச்சலிட்டு மேலும் கீழும் குதிக்கிறேன்'' எனலாம். அவர், ''ஒவ்வொரு வார்த்தை“ என்றார். ஏவாள் ஒரு வார்த்தைத் தவிர எல்லா வார்த்தையும் விசுவாசித்தாள். பாருங்கள்? அது தேவனுடைய வார்த்தை முழுவதும், இந்நேரத்துக்கான வாக்குத்தத்தம் வெளிப்படுவதாய் உள்ளது? பாருங்கள்? நாம் தொடர்ந்து செல்லும்போது இதை கவனியுங்கள். பேசுவதற்கு இங்கு நிறைய உள்ளது. நான் குறிப்புகள் இருபது பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறேன்.... ஆனால் அவை எல்லாவற்றின் மேலும் நான் பேசப்போவதில்லை. பாருங்கள், நான் வேகமாக முடிக்கிறேன். 74மோசே ஜனங்களிடம், பேசுவதற்கு முன்பாக இயற்கை திரையினால் திரையிடப்பட்டிருந்தான் தேவன், தாம் வாக்களித்தபடியே, மாம்ச சரீரத்தில் - தம்மை திரையிட்டுக்கொள்ள வேண்டும். தேவன்... உங்களுக்கு விளங்குகிறதா? தேவன் தாமே மாம்ச சரீரத்தில் தம்மை திரை மறைத்துக்கொண்டு ''நான் இது, நான் அது என்று சொல்பவர்களின் மேல் ஆவிக்குரிய முக்காட்டைப்போட்டு, ஜனங்களிடம் பேசவேண்டும். அந்த பாரம்பரிய முக்காடு கிழிக்கப்படும் போது... அவர்கள், அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்கின்றனர். 75அன்றொரு நாள் ஒருவர் என்னிடம்- சகோ. க்ரீன் என்னும் பாப்டிஸ்டு போதகர் என்னிடம் வந்து, ''சகோ. பிரான்ஹாமே, உங்களுக்கு விரோதமாக எனக்கு ஒரு காரியம் உண்டு. நீங்கள் ஜனங்களை...'' இது 'ரமாதா இன்'னில் நாங்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். அவர், ''நீங்கள் ஜனங்களை அப்போஸ்தலர் காலத்தைக் குறித்து விசுவாசிக்கும்படி செய்து, இந்நாளில் அவர்கள் அப்போஸ்தல காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பும்படி செய்கிறீர்கள். அப்போஸ்தல காலம் அப்போஸ்தலருடன் முடிவடைந்து விட்டது'' என்றார். நான், ''அப்படியா?'' என்றேன். அவர், ''ஆம்'' என்றார். நான், ''அப்போஸ்தல காலத்தின் சார்பாக பேசியவர் (spokes-man) யார்?“ என்றேன். அவர், “மேலறையிலிருந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்'' என்றார். நான், ''அப்படியானால் பவுல் விடப்படுகிறான்.'' ''பேதுரு தான் சார்பாக பேசியவன். பெந்தெகொஸ்தே நாளில் இவைகள் எல்லாம் நடந்து, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து கொண்டிருந்த போது, அவன், 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது' என்றானே. அவர் இன்னும் அழைத்துக் கொண்டிருப்பாரானால் அது இப்பொழுது உள்ளதே அப்படியானால் அப்போஸ்தல காலம். எப்பொழுது முடிவடைந்தது? கர்த்தர் அழைப்பதை நிறுத்தும் போது, அப்போஸ்தல காலம் முடிவு பெறும்'' என்றேன். அவர் பதில் ஒன்றும் பேசாமல், தன் தொப்பியை எடுத்துக் கொண்டு நடந்து சென்றுவிட்டார். பாருங்கள்? அதற்கு பதிலுரைக்க வார்த்தை அவசியமாயுள்ளது. அது வார்த்தை. இயேசு சாத்தானிடம், “எழுதியிருக்கிறதே” என்றார். பாருங்கள். பார்த்தீர்களா? அது தான், “எழுதியிருக்கிறதே.'' நான், ''அது முடிவு பெறாது என்று பேதுரு கூறினான். கர்த்தர் அழைத்த யாவருக்கும் இந்த ஆசீர்வாதம் உரியது. அவர் அப்போஸ்தல காலத்தை நிறுத்திவிட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். அவர் எப்பொழுது நிறுத்தினார்?'' என்றேன். ''தவறு ஒன்றும் இல்லையே?'' “இல்லை ஐயா. சிறிதும் கூட இல்லை. நீங்கள் சென்று கொண்டிருங்கள்.'' பாருங்கள்? பார்த்தீர்களா? அது தேவன் அழைக்கும் ஒவ்வொருவருக்கும் உரியதாக பேதுரு கூறுகிறான், அவர்கள் அதே அப்போஸ்தல ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆம், அது கர்த்தருடைய வார்த்தை. பாருங்கள்? 76இப்பொழுது மாம்சத்திரை. வார்த்தையாகிய தேவன் மாம்சத்தில் திரை மறைக்கப்பட்டிருந்தார். தேவன் மோசேயில் திரைமறைக்கப்பட்டிருந்தார். தேவன் மோசேயில் திறை மறைக்கப்பட்டிருந்தார். தேவனுடைய சமுகம் அவனுக்குள் இருந்தது. அந்த வார்த்தை அவனுக்குள் அவ்வளவாக இருந்து அவன் பரிபூரணமாக இருந்தபடியால், அவன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி வார்த்தையை வெளிப்படுத்தி அவர்களிடம், ''இதை செய்யாதிருப்பாயாக. இதை செய், இதை செய்யாதிருப்பாயாக“ என்றான். பாருங்கள்? 77அந்த சந்ததிக்கு தம்முடைய வார்த்தையை அளிக்க, அவர் ஒரு மனிதனில் தம்மை திரைமறைத்துக் கொண்டார். இல்லையென்றால் வார்த்தையானது வெளியே அழைக்கப்பட்டவர்களையும் குருடாக்கியிருக்கும். பாருங்கள்? அங்கிருந்த ஜனங்களும் கூட அதைப் பார்த்து தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதை நாம் யாத்திராகமத்தில் காண்கிறோம். அவர்கள், ''மோசே எங்களோடு பேசட்டும், “தேவன் பேச வேண்டாம்'' என்றனர். அக்கினி ஸ்தம்பம் ஏன் அதிகமாக பிரத்தியட்சமாவதில்லை என்பதற்கு காரணம் அறிந்து கொண்டீர்களா? பாருங்கள். தேவன், ''நான் அப்படியே செய்வேன். நான் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன்'' என்றார். ஆமென். ''நான் அவர்களுக்கு ஒருவனை எழுப்புவேன்“ அந்தப்படியே ஒரு தீர்க்கதரிசி வந்தான். அவன்... ''நான்... அவனிடம்... என் வார்த்தையாயிருப்பான்.'' அவர், ''அவர்கள் வார்த்தையாரென்பதை அறிந்து கொள்ளவேண்டுமானால், மோசே, நான் எரிகிற முட்செடியில் உனக்கு தரிசனமானேன். நான் இறங்கி வந்து மலையை தீப்பிடிக்கப் பண்ணப் போகிறேன் அப்பொழுது அவர்கள் நீ உண்மையைச் சொன்னாய் என்பதை அறிந்து கொள்வார்கள். நான் உனக்கு எரிந்து காண்பித்த விதமாகவே இங்கும் தரிசனமாகி ஜனங்களுக்கு நிரூபித்து, உன் ஊழியத்தை உறுதிப்படுத்துவேன்'' என்றார். அந்த அர்த்தத்தில் தான் அவர் மோசேயிடம் அநேக வார்த்தைகளை சொன்னார். 78கவனியுங்கள், அவர், ''இப்பொழுது நான் உன்னை ஜனங்களுக்கு முன்பாக மகிமைப்படுத்தப் போகிறேன்.'' ''உன்னை நான் எரிகிற முட்செடியில் சந்தித்ததாக நீ அவர்களிடம் கூறினாய். இப்பொழுது நான் அதே அக்கினியாக இறங்கி வந்து, நீ பொய் சொல்லவில்லை என்று ஜனங்கள் காணும்படி செய்யப் போகிறேன்.'' வேண்டுமானால் அதை விஞ்ஞானப் பிரகாரமாகவும் நிரூபித்துக் காண்பிப்பேன். ''நான் இறங்கி வந்து அவர்கள் காணும்படிச் செய்வேன்'' என்றார். அவர் இடி முழக்கமிடத் தொடங்கினபோது, யேகோவா இடி முழக்கம் செய்தபோது, ஜனங்கள் ''வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! யேகோவா எங்களிடம் பேச வேண்டாம். நாங்கள் மரித்துப் போவோம்'' என்றனர். எனவே அவர் திரைமறைக்கப்பட வேண்டியதாயிருந்தது. தேவன் மோசேயில் தம்மை திரைமறைத்துக் கொண்டு மோசேக்கு வார்த்தையை அருளினார். மோசே இறங்கி வந்து, தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை உரைத்தான். அது சரியா? யேகோவா தீர்க்கதரிசியின் உருவில் திரைமறைக்கப்பட்டார். ஏனெனில் அது முற்றிலுமாக.. தேவன் அவர்களிடம் இனி ஒருக்காலும் அப்படி நேரடியாக பேசுவதில்லை என்றும், ஒரு தீர்க்கதரிசியின் மூலமாகவே பேசுவாரென்றும் உரைத்தார். அன்று முதல் அவர் அந்த ஒரே வழியில்தான் அவர்களிடம் பேசுவார். அந்த ஒரே வழியில் தான் அவர் பேசி வருகிறார். அது உண்மை. வேறெந்த வழியிலும் இல்லை. அவர் பொய் சொல்வதில்லை. 79கவனியுங்கள், மோசே மாத்திரமே தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். ஒரு கூட்டம் ஜனங்கள் மலையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை. அது பரிசேயரல்ல, சதுசேரயல்ல, வேறெந்த பிரிவினரும் அல்ல. அது மோசே மாத்திரமே! அவர் ஒரு மனிதனை தெரிந்து கொண்டார். அவர் இரண்டு மூன்று வெவ்வேறு சிந்தையுடையவர்களை தெரிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு மனிதனை தெரிந்து கொள்கிறார். மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். - மோசே மாத்திரமே. யோசுவாவும் கூட அதை பெற்றிருக்கவில்லை. வேறு யாருமே அதை பெற்றிருக்கவில்லை. ஆமென்! யோசுவா ஒரு தளபதி. யோசுவா சேனையின் தளபதியாயிருந்தான். யோசுவா ஒரு விசுவாசி, கிறிஸ்தவன். ஆனால் மோசேயோ தீர்க்கதரிசி! வார்த்தை யோசுவாவிடம் வர முடியாது. அது மோசேயிடம் மாத்திரமே வர முடியும். அவன் அந்நேரத்துக்கான பெரிய தீர்க்கதரிசி. கவனியுங்கள், மோசே போகும் வரைக்கும் யோசுவாவிடம் வார்த்தை வரவில்லை. பாருங்கள்? இல்லை, ஐயா. தேவன் ஒரு நேரத்தில் ஒருவரோடு மாத்திரமே ஈடுபடுகிறார். தேவன் ஒருவரே. பாருங்கள்? மோசே மாத்திரமே வார்த்தையை உடையவனாயிருந்தான். ஒரு கூட்டம் ஜனங்கள் அல்ல. 80கவனியுங்கள், எந்த மனிதனும் மோசேயைப் பின் தொடர்ந்து திரைக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று தேவன் எச்சரித்தார் - போலியாட்கள். பாருங்கள்? அது ஸ்திரீ, மனிதன், ஆசாரியன் யாராயிருந்தாலும், எவ்வளவு தேவபக்தியுள்ளவர், எவ்வளவு கனம் பொருந்தியவர்களாயிருந்தாலும், அவர், ''மோசே மாத்திரம் தனியாக வரட்டும். எந்த மனிதனாகிலும், மிருகமாகிலும் அதைத் தொட்டால் அங்கேயே கொன்று போடப்படுவார்கள்'' என்றார். அந்த திரைக்குள் பிரவேசிக்க வேண்டாம், அந்த திரை ஒரு மனிதனுக்கு மாத்திரமே சொந்தம். அந்த செய்தி எப்பொழுதும் ஒருவரைக் குறித்தது, பாருங்கள்? தேவாலயத்தில் ஒரு மனிதன் வருடத்திற்கு ஒருமுறை, அபிஷேகம் பெற்றவனாய் உள்ளே பிரவேசிக்க நியமிக்கப்பட்டான்; வார்த்தையை வெளியே கொண்டு வருவதற்காக அல்ல, ஆனால் இரத்தத்தை செலுத்த, அதற்கு முன்னால் நடப்பது ஒரு மனிதன் மாத்திரமே, வேறெந்த மனிதனும் மரித்தான். பாருங்கள்? 81இப்பொழுது அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் மரிக்கிறார்கள். இது ஆவிக்குரிய திரை பாருங்கள்? அது இயற்கையான திரை. இது ஆவிக்குரிய திரை. பாருங்கள்? நீங்கள் அவர்களிடம் எவ்வளவு சொன்னாலும், அவர்கள், “ஓ, எனக்குத் தெரியும்! அது எனக்குத் தெரியும், ஆனால் நான்...'' என்று சொல்லி திரைக்குப் பின்னால் நடந்து செல்லப் பார்க்கிறார்கள் வேண்டுமானால் போங்கள், அது எதைக் காண்பிக்கிறதென்றால்... உங்களுக்கு ஞாபகம் உள்ளதா, இஸ்ரவேல் ஜனங்கள் யாத்திரையைத் தொடங்கும் முன்பு எகிப்தில் நிகழ்ந்த கடைசி வாதை மரணம். அவ்வாறே பூமியில் நிகழவிருக்கும் கடைசி வாதையும் ஆவிக்குரிய மரணமே. அவர்கள் சுட்டெரிக்கப்பட்டு பூமியின் மண்ணுக்குத் திரும்புவார்கள், நீதிமான்கள் அவர்களுடைய சாம்பலை மிதிப்பார்கள். கடைசியாக நிகழவிருப்பது வார்த்தையைப் புறக்கணிப்பதனால் உண்டாகும் ஆவிக்குரிய மரணமே. 82இப்பொழுது கவனியுகள், மோசேயைப் பின் தொடர்ந்து அக்கினித் திரைக்குள் எந்த மனிதனும் பிரவேசிக்கக் கூடாதென்று தேவன் எச்சரித்தார். மோசே திரைமறைக்கப்பட்டு அதிலிருந்து வெளியே வரவேண்டும். மோசே மோசேயாக இந்த அக்கினி ஸ்தம்பத்துக்குள் பிரவேசித்தான். அவன் அதைவிட்டு வெளியே வந்தபோது முக்காடு போடப்பட்டிருந்தான். ஏனெனில் அவன் முன்னோர்களின் பாரம்பரியங்கள் அனைத்தும் கைவிட்டு அதற்குள் பிரவேசித்தான். அவன் முதலில் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டான். இப்பொழுது அக்கினி ஸ்தம்பத்துக்குள் பிரவேசிக்கிறான். பாருங்கள்? ஆமென்! அவன் திரைமறைக்கப்பட்டவனாக வெளிவருகிறான். தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனில் திரையிடப்பட்டது. இதோ, அவன் வெளியே நடந்து வருகிறான். ஓ, என்னே, என்னால் அதைக் காணமுடிகிறது. யாருமே அதை முயற்சி செய்யக்கூடாது. யாருமே அதை பாவனை செய்யக் கூடாதென்று எச்சரிக்கப்பட்டனர். நீங்கள் அப்படி செய்யாதிருப்பது நலம். பாருங்கள்? ஆசாரியன், பரிசுத்த மனிதன், அது யாராயிருந்தாலும், கார்டினல், பேராயர் எவரானாலும் அந்த திரைக்குள் போக முயற்சி செய்தபோது, மடிந்தனர். தேவன் அவர்களை எச்சரித்தார். நமக்கு எந்த பாவனையும் இருக்கக்கூடாது. 83அவருடைய வார்த்தை ஒருவருக்கு மாத்திரமே வெளிப்படுத்தப்படுகிறது. அது எப்பொழுதுமே அவ்வாறு இருந்து வந்துள்ளது. வேதத்தில், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நேரத்திலும், ஒரு தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தையை உடையவனாய் வந்தான். பாருங்கள்? வார்த்தை ஒருவனிடத்தில் மாத்திரமே வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது - சபை காலங்களிலும் கூட, முதல் காலம் தொடங்கி கடைசி காலம் முடிய, மற்றவர்களுக்கு தங்கள் ஸ்தானங்கள் உள்ளன என்பது உண்மையே, கவனியுங்கள். ஆனால் அக்கினி ஸ்தம்பத்தை விட்டு விலகியிருங்கள். பாருங்கள்? இங்கு நாம் எப்படிப்பட்ட ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்! பாருங்கள், எல்லோருமே மோசேயாக விரும்புவது, எல்லோருமே..... 84தாத்தானும் மற்றவர்களும் அங்கு என்ன கூறினரென்று உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அவர்கள், “மோசே, ஒரு நிமிடம் பொறு. உன்னை நீ பெரியவனாக்கிக் கொள்ளப் பார்க்கிறாய்.'' பாருங்கள்? ''தேவன் அழைத்த வேறு மனிதரும் இங்குள்ளனர்” என்றனர். அது உண்மை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலையில் பின்தொடர்ந்து யாத்திரை செய்து கொண்டிருந்தபோது, எல்லாமே நன்றாயிருந்தது. ஆனால் ஒருவன் தன் படியைத் தாண்டி, தேவன் அந்த பணிக்கென்று முன்குறித்து அதை மோசேக்கு அருளிய அந்த ஸ்தானத்தை கைப்பற்ற முயன்றபோது, அக்கினி இறங்கி வந்து, பூமியைப் பிளந்து அவர்களை விழுங்கிப் போட்டது. பாருங்கள்?பாருங்கள்? ஜாக்கிரதையாயிருங்கள்! பாருங்கள்? நல்ல, தேவ பக்தியுள்ள கிறிஸ்தவர்களாயிருந்து, வார்த்தையை விசுவாசியுங்கள். பாருங்கள்? அந்த ஸ்தம்பத்திலிருந்து விலகியிருங்கள் என்ன ஒரு பாடம். 85தேவன் மோசேக்கு முதலில் எரிகிற முட்செடியில் தரிசனமானார். தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் திரைமறைக்கப்பட்டிருந்தார். இப்பொழுது ஒரு நிமிடம் கூர்ந்து கவனியுங்கள். தேவன் முதலில் மோசேயிடம் வந்தார், அவர் திரைமறைக்கப்பட்டிருந்தார். தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் மறைக்கப்பட்டு முட்செடியில் காணப்பட்டார். பாருங்கள்? அவர் தோலுக்குப் பின்னால் பீடத்தில் கிருபாசனத்தில் மறைந்து கொண்டிருந்தது போல. பாருங்கள்? அவர் திரை மறைக்கப்பட்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் திரை மறைக்கப்பட்டிருக்கிறார். அவர் மோசேயிடம் வந்தபோது, அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார். ஆனால் இங்கு ஜனங்களின் முன்னால் தேவன் அவனை அதே அக்கினி ஸ்தம்பத்தினால் உறுதிப்படுத்தினார். பாருங்கள்? மோசே சொன்னான்... 86இப்பொழுது கவனியுங்கள்! நீங்கள் படிக்கிறீர்களா... உங்கள் மனதை வேறெங்காவது செலுத்துகிறீர்களா? உங்களால், உங்களால்... ''காதுள்ளவன் கேட்கக்கடவன்.'' பாருங்கள்? தேவன் மோசேக்கு தரிசனமாகி அவனை ஊழியத்துக்கு அழைத்தபோது, அவர் அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார். மோசே அதைக்குறித்து ஜனங்களிடம் கூறினான். அவர்களால் அதை நம்பமுடியவில்லை. இருப்பினும் அவன் அற்புதங்களையும் மற்றவைகளையும் செய்தான். இம்முறை அவர் காணக் கூடிய விதத்தில் விஞ்ஞான ரீதியில் தரிசனமாகி மோசேயின் ஊழியத்தை உறுதிப்படுத்தி, அக்கினி ஸ்தம்ப உருவில் தரிசனமாகி, மலை தீப்பிடிக்கும்படி செய்து, அது அவனிடம் பேசின அதே தேவன் என்பதை நிரூபித்தார். அவர் மோசேயிடம் முட்செடியிலிருந்து பேசினார். சரி. 87தேவன் முதலில் மோசேக்கு திரையிடப்பட்டவராய் எரிகிற முட்செடியில் தரிசனமானார். ஜனங்களின் முன்னிலையில் தேவன் மறுபடியும் அதே அக்கினியில் திரைமறைக்கப்பட்டவராய் மோசேயை உறுதிப்படுத்தினார் - அதே அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தது. அவர் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தார். அவர்கள் தேவன் பேசுவதை மாத்திரம் கேட்க முடிந்தது. உங்களுக்குப் புரிகிறதா? வார்த்தையை மாத்திரம், அவருடைய சத்தத்தை மாத்திரம் அவர்கள் கேட்டனர். மோசே அவர்களுக்கு ஜீவிக்கிற வார்த்தையாயிருந்தான். மோசே!பாருங்கள், தேவன் அந்த வார்த்தையை மோசேயின் மூலம் அவ்வளவாக நிருபித்திருந்தார். பாருங்கள், மோசே சொன்னான். தேவன் மோசேயிடம், “அங்கே போ, நான் உன்னோடே கூட இருப்பேன், உனக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்'' என்றார். மோசே இறங்கி வந்து, ''நீங்கள் ஒருக்கால் இதை நம்பாமல் போகலாம். தேவன் எனக்கு அக்கினி ஸ்தம்பத்தில் தரிசனமாகிய இவைகளை உரைத்தார்'' என்றான். பார்வோன், “ஓ, இப்படி எத்தனையோ விதமான காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன'' என்றான். போதகர் பார்வோன், ”ஓ, நீ மலிவான மந்திரவாதியின் ஜாலவித்தையை செய்கிறாய். இங்கு எங்களுக்கும் மந்திரவாதிகள் உள்ளனர். அவர்கள் சர்ப்பத்தை.... ஒரு கோலை சர்ப்பமான மாற்றமுடியும்'' என்று சொல்லி, மந்திரவாதிகளே, இங்கு வாருங்கள் என்று அழைத்தான். அவர்கள் வந்து அதையே செய்தனர். 88ஆனால் மோசே அறிந்திருந்தான், எதுவும் அவனைத் தொல்லைப்படுத்தவில்லை. எவ்வளவு போலியாட்கள் இருந்த போதிலும், அது அவனைப் பாதிக்கவில்லை. மோசே அமைதியாக நின்றான். முதலாவதாக என்ன தெரியுமா, அந்த சர்ப்பங்கள் சிறிது நேரம் ஊர்ந்து கொண்டிருந்தன. பிறகு மோசேயின் சர்ப்பம் மற்ற சர்ப்பங்களை விழுங்கினது. பாருங்கள்? ஏன்? அந்த அப்போஸ்தலர்களைப் போல அவர்களால் விளக்கம் தரமுடியவில்லை. தேவன் அதை எப்படி செய்யப் போகிறார் என்று மோசேக்கு தெரியவில்லை, ஆனால் அவர் அதை எப்படியும் செய்வார். ஞாபகம் கொள்ளுங்கள், யந்நேயும் யம்பிரேயும் கடைசி நாட்களில் திரும்ப வருவார்கள் என்று அவர் கூறியுள்ளார், பாருங்கள், போலியான செயல். ''அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்'' (மத்.24:24). பாருங்கள்? அதே விதமான காரியங்கள், அதேவிதமானஅற்புதங்கள், எல்லாமே. அந்த வார்த்தையை கவனியுங்கள்! அந்த வார்த்தையை கவனியுங்கள், ஒரு மனிதன் அற்புதங்களைச் செய்து, அதே நேரத்தில் மூன்று கடவுள்கள் இருப்பதாக விசுவாசிப்பானானால்... அதை விட்டு விலகி வாருங்கள். அது தவறென்று நாமறிவோம். பாருங்கள்? அப்படி ஒன்றுமே கிடையாது. பாருங்கள்? வார்த்தை, ஒவ்வொரு வார்த்தையும், தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும், ஆதியாகமத்தில் ஒரு வார்த்தை! இங்கு, ''ஒரு வார்த்தையை எடுத்துப் போடாதே, ஒரு வார்த்தையைக் கூட்டாதே“ என்கிறது. பாருங்கள், அது அதே வார்த்தையாக இருக்க வேண்டும். பாருங்கள்? 89கவனியுங்கள், அங்கு ஒன்று நடந்ததை மக்கள் கண்டனர். மோசே திரைமறைக்கப்பட்டிருந்தான்.... அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் அங்கு சென்ற போது, தேவன் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். அவன் அற்புதங்களும் அடையாளங்களும் நடப்பதை கண்டான். அதன் பிறகு ஜனங்கள் பிரிந்து ஒரு சபையாக ஆனார்கள். பாருங்கள், சபை என்றால், “வெளியே அழைக்கப்பட்டவர்கள்'' என்று பொருள். பாருங்கள்? அவர்கள் உலகத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டு ஒரு கூட்டம் ஜனமாக ஆனபின்பு, தேவன் அவரே அந்த அக்கினி ஸ்தம்பம் என்பதை தெரியப்படுத்தினார். அவர் மோசேயின் செய்தியை நிரூபித்தார். பாருங்கள்? அவரே அக்கினி ஸ்தம்பம். அவர்களிடம் புகைப்படம் பிடிக்கும் 'காமிராக்கள் இருந்திருந்தால், அவர்கள் அதை புகைப்படம் எடுத்திருப்பார்கள். ஏனெனில் மலை முழுவதும் தீப்பிடித்திருந்தது. ஆனால் அவர்கள் நிரூபித்தனர் - அந்த செய்தி சரியென்று தேவன் நிரூபித்தார். செய்தி அவர்களிடம் இருந்தது, எல்லாமே இருந்தது. அவர்கள் யாத்திரைக்கு தயாராயிருந்தனர். யாத்திரை செய்த இந்த ஜனங்களுக்கு தேவன் தமது தீர்க்கதரிசியை திரைமறைத்தார். 90ஜனங்கள் சிந்தித்துப் பாருங்கள் அவனுக்கு ஏதோ ஒன்று நேர்ந்ததைக் கண்டனர். அவன் அப்பொழுது மற்ற இஸ்ரவேலரைக் காட்டிலும் வித்தியாசமுள்ளவனாயிருந்தான். அவன் வித்தியாசமாக... அவனுடைய செய்தி வித்தியாசமாயிருந்தது. அவன் ஆசாரியர்களைக் காட்டிலும் வித்தியாசமுள்ளவனாயிருந்தான். அவன் மற்றெல்லாரை விட வித்தியாசமுள்ளவனாயிருந்தான். பாருங்கள், அவன் வித்தியாசமுள்ள ஆளாக இருந்தான். அவனுக்கு ஏதோ ஒன்று நேர்ந்ததை ஜனங்கள் கண்டனர்.தேவன் தமது வார்த்தைகளை ஜனங்களிடம் பேசுவதற்கென, தம்மை தமது தீர்க்கதரிசியில் திரைமறைத்துக் கொண்டார். அதைதான் அவர் செய்தார். மோசே அக்கினி ஸ்தம்பத்தினால் திரைமறைக்கப்பட்டு, பின்காலத்தில் தக்சுத் தோலின் பின்னால் திரைமறைக்கப்படவிருந்ததை உரைத்து, இப்படியாக ஜனங்களுக்கு ஜீவிக்கிற வார்த்தையாக இருந்தான். பாருங்கள்? 91வார்த்தை முதலில் மோசேயிடமிருந்து வரவேண்டும். பாருங்கள்? மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். அவை தேவனால் எழுதப்பட்டன, அதற்கு யாருமே அர்த்தம் உரைக்க முடியவில்லை. மோசே தான் அதற்கு முதலில் அர்த்தம் உரைக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால்தான் அவன் தன் முகத்துக்கு முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏனெனில் அவன்... உங்களுக்கு விளங்குகிறதா? பாருங்கள்? இதோ அது. நீங்கள் அதை கையிலெடுக்கலாம். சுற்றிவைக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அது வெளிப்பட வேண்டும். அது வெளிப்பட வேண்டுமென்றால், மோசே ஜனங்களுக்கு தேவனாக வேண்டும். நீங்கள், ''அது அர்த்தமற்றது'' எனலாம். ஏன் அவர் சொன்னார். அவர் மோசேயிடம், ''நீ தேவனாயிருப்பாய், ஆரோன் உனக்கு தீர்க்கதரிசியாயிருப்பான்'' என்றார். பார்த்தீர்களா? பாருங்கள்? எனவே இங்கு அவர் வந்து தம்மை திரைமறைத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏனெனில் தேவன் எப்பொழுதுமே திரைக்குப்பின்னால் இருக்கிறவர். ஓ, என்னே! உங்களால் காணமுடிகிறதா? தேவன் பொது ஜனங்களிடமிருந்து மறைந்திருத்தல். அவர், ''பிதாவே, இதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்'' என்றார் (மத்.11:25). பாருங்கள்? 92தேவன் திரைக்குப் பின்னால் மறைந்திருந்திருத்தல். மோசே தன் முகத்தின் மேல் முக்காடிட்டுக் கொண்டான். மோசே அப்பொழுது திரைமறைக்கப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாயிருந்தான். ஜனங்கள் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டு, “இப்பொழுது எங்களுக்குத் திருப்தி'' பாருங்கள்? ''மோசே எங்களோடு பேசட்டும்.'' பாருங்கள்? ”தேவன் எங்களோடே பேச வேண்டாம், நாங்கள் மடிந்து போவோம்'' என்றனர். மோசே அக்கினி ஸ்தம்பத்துக்குள் நடந்து சென்றான். அப்பொழுது தேவன், ''நான் இனிமேல் இவ்விதம் அவர்களோடு பேசமாட்டேன், அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பேன்“ என்றார். பாருங்கள், அப்படித்தான் அவர் எப்பொழுதும் செய்து கொண்டு வருகிறார். அவர், ''அவர்கள்... என்றார். ஆனால் இந்த தீர்க்கதரிசி அவருடைய வார்த்தையை உடையவனாயிருக்க வேண்டும். அவன் பாரம்பரியத்தால் திரையிடப்பட்டிருந்தால், தேவன் அவனை அனுப்பவேயில்லை. ஆனால் அவன் வார்த்தையினால் திரையிடப்பட்டிருந்தால், தேவன் அதை உறுதிப்படுத்துகிறார். தேவனே தமது சொந்த வார்த்தையை வியாக்கியானப்படுத்துகிறார். மோசே அவைகளை உரைத்தான், தேவன் அவைகளுக்கு அர்த்தம் உரைத்தார். ஆமென். மோசே, ''கர்த்தர் இவ்வாறு உரைத்தார்“ என்றான். கர்த்தர் அவன் சொன்னதை அப்படியே செய்தார். அது அதை சத்தியமாக்கியது. 93அவர், ''மோசே, உனக்கு விளங்குகிறது, ஜனங்களுக்கும் இப்பொழுது விளங்குகிறது'' என்றார். பாருங்கள்? ''நான் உனக்குக் காண்பித்தேன், உன்னை நான் உறுதிப்படுத்திவிட்டேன்.'' தேவன் அவருடைய வார்த்தையை ஜனங்களிடம் பேசுவதற்கென தம்மை இந்த தீர்க்கதரிசியில் திரை மறைத்துக்கொண்டிருந்தார். மோசே அவர்களுக்கு ஜீவனுள்ள தேவனாக, வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாக இருந்தான். ஆகையால்தான் அவனுடைய முகம் முக்காடிடப்பட்டிருந்தது. பாருங்கள்? ஒரு உத்தமமான கிறிஸ்தவனில் உள்ள அதே காரியம் இன்று அவிசுவாசிகளுக்கு திரைமறைக்கப்பட்டுள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் நீண்ட கூந்தலையுடைய பெண்களைப் பார்த்து, ''அந்த பழைய மாடலைப் பாருங்கள்'' என்று கேலி செய்கின்றனர் பெண்கள் தலை மயிரைக் கொண்டைக் கட்டிக் கொண்டால்,''காற்று போன உதிரி டயர்'' என்று கேலி செய்கின்றனர். பாருங்கள், இவையனைத்தும் திரைமறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குருடாயிருக்கின்றனர். அவர்கள், ''நல்லது, எனக்கு பிஎச்.டி, பட்டம் இருக்கிறது...'' என்கின்றனர். உனக்கு என்ன இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீ இன்னும் வார்த்தையைக் குறித்து ஒன்றும் அறியாவதனாய் இருக்கிறாய். முற்றிலும் உண்மை. ''ஓ, அது சிறிய காரியம். நான்...'' முதலில் ஆரம்ப பாடங்களைக் கற்றுக்கொள். 94தேவனுடைய சமூகம் தங்களில் திரையிடப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு சபை பாரம்பரியங்களைப் போதிப்பவர்களைக் குறித்தென்ன? ஓ, இரக்கம், நன்மை! அது சேர்த்தல், எடுத்துப் போடுதல் போன்ற எல்லாமே. அவர்கள் தங்கள் சொந்த பொருள்களையும் கருத்துக்களையும் உள்ளே நுழைத்து, தேவனுடைய வார்த்தையைப் போதிக்காமலிருக்கின்றனர். பாருங்கள், அது எப்படிப்பட்ட திரையாயிருக்கும்? அது மதசம்பந்தமான திரை. தேவன் அந்த திரையைக் கிழித்தெறிந்தார். அவர்கள், ''தீர்க்கதரிசிகள் என்று கிடையாது. இந்தக் கடைசி நாட்களில் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்று ஒன்றுமே கிடையாது. தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று கிடையாது. ஞான திருஷ்டிக்காரர் இனிமேல் இருக்கமுடியாது. மாற்கு 16 நிறைவேறுதல் என்பது கிடையாது. அப்போஸ்தல காலம் முடிவடைந்து விட்டது'' என்கின்றனர். அவர்கள் அதை ஜனங்களிடமிருந்து திரைமறைத்தனர். ஆனால் தேவனோ தமது அக்கினியாகிய பரிசுத்த ஆவியை கொண்டவராய் நடந்து வந்து அதை மேலிருந்து கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழித்து போட்டார். (ஒலிநாடாவில் காலியிடம்) தேவன் அந்த திரையைக் கிழித்து விட்டார்! 95மோசே அந்த திரையாயிருந்தான். ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை மானிட சரீரத்துக்குப் பின்னால் திரையிடப்பட்டிருந்தது. அக்கினி ஸ்தம்பம் மோசேக்குள் இருந்து உரைத்தது. உரைக்கப்பட்டது பிற்காலத்தில் தோல்களுக்குப் பின்னால் திரைமறைக்கப்பட வேண்டியதாயிருந்தது. பார்த்தீர்களா? அது வார்த்தை, வார்த்தையானது கொண்டு வரப்பட்டது. பிறகு அது எழுதப்பட்டது. பிறகு அது பின்னால் வைக்கப்பட்டு அப்பொழுதும் திரைமறைக்கப்பட்டது. தேவன் எப்பொழுதும் அந்த வார்த்தையில் இருந்தார். ஆமென்! அவர் எப்பொழுதும் வார்த்தையாயிருக்கிறார். அவர் அந்த வார்த்தையில் இருந்தார். ஆகையால்தான் அந்த வார்த்தை திரைமறைக்கப்பட வேண்டியதாயிருந்தது. 96ஓ, சகோதரனே, சகோதரியே, நீங்கள் கிரகித்துக் கொள்கிறீர்களா? பாருங்கள் நீங்கள் காண்பதில்லையா? தேவன் கூறினபடி அது காலங்கள் தோறும் திரைமறைக்கப்பட்டு, இந்தக் கடைசி நாட்களில் அது திறக்கப்படும். அப்பொழுது இவ்வளவு காலமாக என்ன நடந்ததென்னும் முழு காரியம் ஜனங்களின் காட்சிக்கு வரும். ஏழாம் தூதனுடைய செய்தியின் நேரத்தில், தேவனுடைய இரகசியங்கள் அனைத்தும் அந்த எலியாவில் வெளியாக்கப்பட வேண்டும் - இந்த கடைசி நேரத்தில் எப்படி கிறிஸ்து சபையிலிருந்து புறம்பாக்கப்படுவார் என்றும் - தேவனுடைய குமாரனாக; அவர் மறுபடியுமாக எப்படி மனுஷகுமாரனாக வெளிப்படுவார் என்றும்; சபை எப்படி ஒழுங்கில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், எல்லாமே கடைசி நாட்களில், எந்த கோட்பாடும், எந்த ஸ்தாபனமும் கிடையாது. வார்த்தை முற்றிலுமாக தனிப்பட்ட நபரில் ஜீவிப்பதாகும். ''நான் ஒருவனை எடுத்துக் கொண்டு, மற்றவனைக் கைவிடுவேன். நான் இதை எடுத்துக் கொண்டு, அதைக் கைவிடுவேன்.'' பாருங்கள்? அதில் எந்த கட்டுப்பாடோ, எந்த ஸ்தாபனமோ, எதுவுமே கிடையாது. அது தேவனுடன் - அவருடன் மாத்திரம் உள்ள இருதயம். பாருங்கள்? 97கவனியுங்கள், மாம்ச சரீரத்தில் திரைமறைக்கப்படுதல். மோசே அந்த வார்த்தையாயிருந்து, பிற்காலத்தில் தகசுத் தோலின் பின்னால் வைக்கப்படவிருந்ததை உரைத்தான். ஆகையால்... எனவே கிறிஸ்து நமது மோசே. கிறிஸ்து நமது மோசே. அவர் மாம்ச சரீரத்தில் திரை மறைக்கப்பட்டிருந்த தேவன், மானிடனில் மாம்சத்தில், அது உண்மை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் தகசுத் தோல்களினால் திரைமறைக்கப்பட்டிருந்தார். அவர் திரை மறைக்கப்பட்டிருந்தார். இந்த முறை அவர் மனிதனில் திரை மறைக்கப்பட்டார். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள், நேற்றும் இன்றும் என்றாம் மாறாதவர்“ இந்த காலத்துக்கான வார்த்தையை வாக்களித்துள்ளார். அவர் இப்பொழுதும் கிறிஸ்துவாக, இந்த காலத்தின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாக, மாம்ச சரீரத்தில் திரைமறைக்கப்பட்டிருக்கிறார். வார்த்தை தேவனாயிருக்கிறது. 98அபிஷேகம் என்பது ஒரு நபரைக் குறிக்கிறது. கிறிஸ்து என்னும் சொல்லுக்கு ''அபிஷேகம் பண்ணப்பட்டவர்“ என்று பொருள். பாருங்கள், ''அபிஷேகம் பண்ணப்பட்டவர்'' அப்படியானால் மோசே அவனுடைய காலத்தில் கிறிஸ்துவாக விளங்கினான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தான். எரேமியா அவனுடைய காலத்தில் கிறிஸ்துவாக விளங்கி அந்தக் காலத்துக்கென வார்த்தையின் ஒரு பாகத்தை உடையவனாயிருந்தான். ஆனால் இயேசு வந்தபோதோ, அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட மீட்பராக வந்தார். அது மோசேயும், மோசேக்குள்ளிருந்த அனைத்தும், வார்த்தை அனைத்தும் தேவத்துவம் அனைத்தும் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. ஆகையால்தான் தேவாலயத்தின் திரைச்சீலை முழுவதும் கிழிந்து கிருபாசனம் பரிபூரணமான காட்சிக்கு வந்தது. அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவராயிருந்தார். 99இப்பொழுது கவனியுங்கள், மாம்ச சரீரமாகிய திரை, இக்காலத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையும் திரைமறைக்கப்பட வேண்டும். பாவத்தை விரும்பும் சபை அங்கத்தினர்களும் பாவிகளும் மாம்ச சரீரத் திரையின் காரணமாக அதை காணமுடியாது. ஆகையால்தான் அவர்களால் அவரைக் காணமுடியவில்லை. “ஏன், அவர் ஒரு மனிதன். அவர் எங்கிருந்து வந்தார்? அவரிடம் எந்த ஐக்கியச் சீட்டு உள்ளது? அவர் எந்த சபையைச் சேர்ந்தவர்? (இன்றிரவு நான், ''அவர் எந்த சபையைச் சேர்ந்தவர் - என்னும் பொருளின் மேல் பேசவிரும்புகிறேன். பாருங்கள்?) எனவே, பாருங்கள்? ”அவர் எந்த சபையைச் சேர்ந்தவர்? அவர் எந்த கூட்டத்தைச் சார்ந்தவர்? அவர் எந்த பள்ளயில் பயின்றார்? அவர் எங்கு கல்வி கற்றார்? இங்கு சொல்லப்படும் பாரம்பரியக் கதையின் பிரகாரம். இங்குள்ள வதந்தியின் பிரகாரம், அவர் விவாகமாகாமல் பிறந்தவர். அவர் நிச்சயமாக பிசாசினால் உண்டானவர்.'' பாருங்கள்? ''அவர் பிசாசினால் உண்டானவர். அவர் விவாகமாகாமல் பிறந்தவர். மரியாள் வேசியானதால், அவள் கல்லெறிந்து கொல்லப்படுவதைத் தவிர்க்க யோசேப்பு அவளை விவாகம் செய்து கொண்டான். இவர் வந்து என்ன செய்ய வேண்டுமென்று ஆசாரியர்களாகிய நமக்கு போதிப்பதா?'' 100அங்கு தேவன் நின்று கொண்டு, அந்த வார்த்தையை வெளிப்படுத்தி, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்று சத்தமிட்டார். கிறிஸ்துவைக் குறித்து தாவீது அநேக ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கின அதே பாடலை அவர்கள் அந்த நேரத்தில் தேவாலயத்தில் பாடிக் கொண்டிருந்தனர். ''என் எலும்புகளெல்லாம் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, என் கைகளையும், என் கால்களையும் உருவக்குத்தினார்கள்.'' அவர்கள் அங்கு நின்று கொண்டு இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கையில் அந்த மனிதன் சிலுவையில் மரித்துக் கொண்டிருந்தார். அவர் மரித்தபோது, பரலோகத்தின் தேவன் சீனாய் மலையின் மேல் இறங்கி வந்தது போல் பரிசுத்த அக்கினியுடன் இறங்கி வந்து, தேவாலயத்தின் திரைச்சீலையை மேலிருந்து கீழ் வரைக்கும் எரித்து, அதை கிழித்துப் போட்டார். அவர்களால் என்ன செய்ய முடியும்? தேவாலயத்தின் சன்னல் வழியாக அவர்கள் வெளியே கல்வாரியை நோக்கின போது, பலியான தேவன் வெளிப்படையான காட்சியுடன் அங்கிருந்தார். 101ஆனால் அவர்கள் இன்று வரைக்கும் அதைக் காணவில்லை. இந்தக் கடைசி நாளில் தேவன் அந்த பாரம்பரியங்களைக் கிழித்துப்போட்டு, இக்காலத்துக்கான வார்த்தையை வெளிப்படையான காட்சிக்கு கொண்டு வந்துவிட்டார். இருப்பினும் அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். அவர்களுக்கு அதை குறித்து தெரியாது. அது மிகவும் எளிமையாயுள்ளது! பாருங்கள்? அது மிகவும் எளிமையாயுள்ளது. அது உலகத்தின் காரியங்களிலிருந்து மிகவும் அகன்றதாய் உள்ளது. அன்றொரு நாள் ஒருகூட்டத்தில் 'நட்' (nut)டாயிருப்பது என்பதைக் குறித்து பேசினேன். ('நட்' என்னும் ஆங்கிலச் சொல் கொச்சை மொழியில் 'பைத்தியக்காரன்' என்று பொருள்படும் - தமிழாக்கியோன்). இந்நாட்களில் ஒன்றில் 'நட்'டாயிருப்பது என்பதைக் குறித்து இங்கு பேச விரும்புகிறேன். நாம் யாராவது ஒருவருக்கு 'நட்'டுகளாக இருக்கிறோம். நான் கிறிஸ்துவுக்காக அப்படி ஒருவனாக இருப்பேன். பவுல், தான் புத்தியீனனாக எண்ணப்பட்டதாக கூறுகிறான். நிச்சயமாக. நீங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள், பாகங்களை ஒன்றோடொன்று சேர்க்க 'நட்' (nut) தேவைப்படுகிறது. பாருங்கள்? அது உண்மை. 102எனவே திரையை, மாம்ச சரீரத்தைக் கவனியுங்கள். அறிந்து கொள்ளுங்கள்... பாவத்தின் மேல் விருப்பம் கொண்டிருந்த ஜனங்களால் அதைக் காணமுடியவில்லை. பாரம்பரியங்களைக் கைக்கொண்ட மதசம்பந்தமான அந்த ஜனங்களால் அதைக் காணமுடியவில்லை. ஏனெனில் அவர் ஒரு மனிதனாயிருந்தார். என்ன? அந்த மாம்ச சரீரம் தேவனை மறைத்தது. அவர் இறங்கி வந்த ஒரு மகத்தான அக்கினி ஸ்தம்பமாக இருந்திருப்பாரானால்; பாருங்கள், ஒரு மகத்தான அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து அவர் யாரென்று - அவர் அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் என்று - அவர்களுக்குக் காண்பித்திருக்குமானால், யேகோவா அவ்வாறு காட்சியளித்திருப்பாரானால், அவர்கள் அதை விசுவாசித்திருப்பார்கள். ஆனால் அவர் என்ன செய்தாரென்று பாருங்கள்! அந்த ஞானமுள்ள புத்திமான்களை அவர் தவிர்க்க எண்ணி, ''ஒரு தீர்க்கதரிசியின் மூலம் நான் அவர்களோடு பேசுவேன்“ என்று அவர் மோசேக்கு வாக்குத்தத்தம் பண்ணின விதமாகவே தம்மை வெளிப்படுத்தினார். அவர் மனுஷ குமாரனாக, தீர்க்கதரிசியாக இருந்தார். சிலர் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். அப்பொழுது உலகில் இருந்த ஜனத்தொகையில் நூற்றில் ஒரு சதவிகிதம் அவர்மேல் விசுவாசம் வைத்தனர். மற்றவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. இருப்பினும் அவர் அவ்வாறாகவே இருந்தார். 103அங்கு வல்லமையுள்ள தேவன் முழுகாட்சியில் நின்று கொண்டிருந்தார் - கிருபாசனம். அவருடைய சொந்த பிள்ளைகள்... ''அவர் எங்களுக்கு வேண்டாம்! அவரை அகற்றும்'' என்று சொல்லி அவர் முகத்தில் துப்பி கொண்டிருந்தபோது, அவர் மரித்தார். இதற்கு முன்னடையாளமாக, அநேக ஆண்டுகளுக்கு முன்பு தாவீது புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக தேவாலயத்தை விட்டுச் செல்கிறான். அவன் தெருவின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, முடவன் ஒருவன் நகர்ந்து கொண்டு வந்து, “மாய்மாலக்காரனே'' என்று அப்படி ஏதோ ஒன்றை சொல்லி நிந்தித்து அவன் முகத்தில் துப்பினான். அப்பொழுது அவனுடைய காவலாளன் பட்டயத்தை உருவி ''இவன் என் ராஜாவின் முகத்தில் துப்புவதா, இந்த நாயின் தலையை நான் வாங்கிப்போடட்டும்'' என்றான். தாவீது அவனிடம், ''அவனை விட்டுவிடு, அப்படி செய்யும்படி தேவன் அவனிடம் சொல்லியிருப்பார்“ என்றான். தாவீது, தான் என்ன கூறினான் என்பதை ஒருக்கால் அறியாமல் இருந்திருப்பான். அவன் மலையின் மேல் ஏறி, கீழே நோக்கி, அழுதான். இது நிகழ்ந்து எண்ணூறு ஆண்டுகள் கழித்து, தாவீதின் குமாரன் அதே மலையின் மேல் ஏறினவராய், எட்டிப்பார்த்து, புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக எருசலேமை நோக்கி அழுதார். அவர்கள் அவர் முகத்தில் துப்பினார்கள். உங்களால் காணமுடியவில்லையா? அதே காரியம். அந்த வார்த்தை ஒவ்வொரு காலத்திலும் தொடர்ச்சியாக வந்து, இன்றைக்கும் வந்துள்ளதை பாருங்கள். அது எப்பொழுதுமே பெரும்பான்மையோரால் புறக்கணிக்கப்பட்டு, பாருங்கள், சிறுபான்மையோரால் விசுவாசிக்கப்படும். 104இப்பொழுது, பாருங்கள், அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. அந்த கிரேக்கர்களால் அவரைக் காணமுடியவில்லை. ஏனெனில் அவர் அவருடைய மாம்ச சரீரமாகிய ஆலயத்தில் வாசம் செய்துகொண்டிருந்தார். அவர்கள், ''இந்த மனிதனின் பெயர், இவன் நாசரேத்தைச் சேர்ந்தவன்'' என்றனர். அந்நாட்களில் அவர்கள் “ஜான், ஜிம்'' என்பது போல் ஒரு பெயரை மாத்திரமே வைத்திருந்தனர். அவர்கள் ''ஜெபர்ஸன்வில்லைச் சேர்ந்த ஜான், நியூ ஆல்பனியைச் சேர்ந்த ஜிம்'' என்று கூறுவதுபோல், அப்படி ஏதோ ஒன்று, பாருங்கள். அவர்கள், ''இது நாசரேத்தூரானாகிய இயேசு. அவருடைய தாயார் ஒரு போர்ச்சேவகனால் கர்ப்பமுற்றதாக வழக்கமாக நம்பப்படுகிறது'' என்றனர். அவர்கள் அப்படித்தான் நம்பினார்கள். நிச்சயமாக! அவர்கள், “இது நாசரேத்தூரானாகிய இயேசு. அல்லாமல் அவர் வேறு யார்?'' என்றனர். பாருங்கள்? அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை 105ஆனால் ஏன்? அவர் அந்நாளுக்கான வார்த்தையாயிருந்தார். அவர், ''வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, நான் யாரென்று சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. என்னை நீங்கள் விசுவாசிக்காமல் போனால் (நான் திரையென்பதை மறந்துவிடுங்கள்), புறப்பட்டு வருகிற வார்த்தையையாகிலும் விசுவாசியுங்கள். இரண்டுபேர் சாட்சிகளாயிருக்கின்றனர். நான் பேசுகிறேன், பிதா எனக்காக பேசுகிறார்'' என்றார். ஆமென் அது உண்மை. நான் இந்நாளுக்கான வார்த்தையைப் பேசுகிறேன். பிதா அதை ஊர்ஜிதப்படுத்துகிறார். அது உங்களுக்கு சாட்சியாயுள்ளதா? ஆம், பாருங்கள். அப்படித்தான் அது நிறைவேற வேண்டும். 106இப்பொழுது 2 கொரிந்தியரில் கவனியுங்கள்... 2 கொரிந்தியர் 3ம் அதிகாரம் 6ம் வசனத்தில், பழைய தேவாலயத்தில் தேவன் வாசம் செய்து (தகசுத் தோல்களுக்குப் பின்னார்) யூதர்களிடமிருந்து மறைந்திருந்தார். அந்த திரைச்சீலை கிழிக்கப்பட்ட பின்பும், யூதர்கள்... அவர் யாரென்பதை அறியாமல் குருடராயிருந்தனர், இன்னும் அவர் யாரென்பதை அறியாமலிருக்கின்றனர். அதன்பிறகு, தேவனால் அந்த திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிக்கப்பட்டபோது, உண்மையான ஜீவனுள்ள தேவன் யாரென்பதை பெந்தெகொஸ்தே வெளிப்படுத்தினது. அந்த திரைச்சீலை ஏன் கிழிந்தது? அது ஏன் கிழிந்தது? இன்றைக்கு இப்படிப்பட்ட ஒருசெய்தி வந்து, அது செய்ததை செய்ய வேண்டிய காரணம் என்ன? அது ஏன் வந்தது? ஏன்? 107அண்மையில் யாரோ என்னை இங்கு தொலைபேசியில் கூப்பிட்டு, சபை காலங்களைக் குறித்தும் “தேவன் தமது பரிசுத்த சபையில் இருக்கிறார்” என்பதைக் குறித்தும், என்னுடன் விவாதிக்க விரும்புவதாக கேள்விப்பட்டேன். அது ஒரு பெண் பிரசங்கி என்று நான் அறிந்து கொண்டபோது, அதிலிருந்த சிரத்தை எனக்குப் போய்விட்டது. பாருங்கள், அது ஒரு மனிதனாயிருந்து, இதைக் கேட்டு சீர்பட்டால், அது வித்தியாசமான காரியம். ஆனால்... இங்கு ஒரு கூட்டத்தை விட்டு, இந்த விவாதத்துக்காக வேறொரு நாட்டுக்குச் செல்வதால் என்ன பயன்? பாருங்கள்? அவர்களை நான் அப்படியே விட்டுவிட்டேன். குருடர் குருடருக்கு வழிகாட்டுகின்றனர். அவர்கள் எல்லோரும் குழியில் விழுவார்கள். 108எனவே இந்தக் காலத்தில் தேவனுடைய வார்த்தை காணப்படுவதற்கென, அதை மறைத்திருந்த பழைய ஸ்தாபன பாரம்பரிய திரைகிழிக்கப்பட்டு விட்டது. நான் கூறுவது விளங்குகிறதா? பாரம்பரியம், ''அவையெல்லாம் கடந்து சென்றுவிட்டன'' என்கிறது (உங்கள் மனதில் ஆழமாக பதியட்டும்!) ''இவையெல்லாம் கடந்து சென்றுவிட்டன. ஆனால் இந்தக் கடைசி நாளில், அந்தப் பாரம்பரியத்திரை கிழிக்கப்பட்டு விட்டு, இதோ அக்கினி ஸ்தம்பம் நின்று கொண்டிருக்கிறது. பாருங்கள்? இதோ அவர், இந்நாளுக்கான வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். திரை கிழிக்கப்பட்டுவிட்டது! ஆனாலும் உலகம் அதை நம்புவதில்லை. என்ன நடந்தபோதிலும், அவர்களால் அதைக் காணமுடியவில்லை, அவர்கள் அதைக் காண்பதில்லை, அது அவர்களுக்காக அனுப்பப்படவில்லை. ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுடைய குமாரன் சோதோமுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, இரண்டு தூதர்கள் மாத்திரமே. அது உண்மை. ஆனால், இந்த மாம்ச சரீரத்திலிருந்த தேவன் தாமே தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தப்பட்டார். தம்மை வெளிப்படுத்த அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். அவருக்குப் பின்னால் இருந்த சாராளின் சிந்தையில் இருந்தது என்னவென்று அவர் அறிந்து கொண்டபோது, ஆபிரகாம் அவர் யாரென்பதை அறிந்து கொண்டு அவரை ''ஏலோகிம்'' என்றழைத்தான். பாருங்கள்? ''உம்முடைய ஊழியக்காரன்...'' 109இப்பொழுது கவனியுங்கள், அது வெளிப்பட வேண்டும் என்பதற்காக. இத்தனை ஆண்டுகளாக வார்த்தையின்மேல் திரையிடப்பட்டு, அது ஜனங்களுக்கு மறைக்கப்பட்டு, ''அது முடியாது'' என்று அவர்கள் கூறி வந்தனர். நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு செல்லப் புறப்பட்டபோது, அன்று காலை, கோலியாத், தாவீது இவர்களைக் குறித்து நிகழ்த்தின பிரசங்கம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்பொழுது நான், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன'' என்று சவால் விடுபவனைப் பாருங்கள்'' என்றேன். அன்று முதல் ஒவ்வொன்றாக வெளி வந்த ஒலிநாடாக்களை கேளுங்கள், அது எவ்வாறு மேலும் மேலும் வெளிப்படையானது என்று - உங்களுக்கு கேட்க காதுகளிலிருந்தால் (பாருங்கள்?) காணக் கண்களிலிருந்தால். கவனியுங்கள் அப்பொழுது நான் ''மதசம்பந்தமான உலகம் அங்கு நின்று கொண்டு, இந்த விஞ்ஞானக் காலத்தில் அதெல்லாம் நடக்காது என்று கூறுகிறது'' என்றேன். ஆனால் நான் என்ன சொன்னேன் என்றால்... அந்த ஒளியிலிருந்த தேவன் - அந்த ஒளி ஒருமுறை புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்பு. அப்பொழுது அது புகைப்படம் எடுக்கப்படவில்லை. அது நதிக்கரையில் பிரத்தியட்சமானபோது, அவர்கள் அதன் புகைப்படத்தை அப்பொழுது எடுக்கவில்லை. பாருங்கள்? நான், ''அது நடக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். அவர் ஒரு அழைப்பு விடுப்பார், அது நாடுகள் பூராவும் விரைவில் பரவும்“ என்றேன். டாக்டர் டேவிஸம் கூட என்னிடம், ''ஆரம்ப கல்வி பயின்று, ஏழாம் வகுப்பு வரை படித்த நீயா ராஜாக்களுக்கும் சக்கிரவர்த்திகளுக்கும் ஜெபம் செய்து, நாடுகளை அசைக்கத்தக்க எழுப்புதலை தொடங்கப் போகிறாய்?'' என்று கேட்டார். நான், ''அப்படித்தான் அவர் சொன்னார்“ என்றேன். அது நடந்தது. பாருங்கள்? அது நடந்தேறிவிட்டது. காரியம் என்னவெனில், அவருக்கு வியாக்கியானம் தேவையில்லை, அவர் அதை செய்துவிட்டார். பாருங்கள்? அவர் ஏற்கனவே அதை செய்துவிட்டார், அதுதான் அதை வியாக்கியானப்படுத்தினது, பாருங்கள்; அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை பாருங்கள், வாழ்க்கையின் எல்லா துறைகளிலுமிருந்து அழைத்தல். அது இப்பொழுது வெளிப்பட்டு விட்டது. பாருங்கள்? 110நான் சொன்னேன்... சிறு, தேகம் மெலிந்த, கூன் விழுந்த தாவீது கையில் கவணைக் கொண்டவனாய் அங்கு நின்று கொண்டிருந்தான். போதகர் சங்கத்தின் தலைவனான சவுல் அவனைக் கண்டு, ''நீ பயிற்சி எதுவும் பெறவில்லையே.'' உனக்கு பி.எச்.டி. போன்ற ஏதாவதொன்றை கொடுக்க முடியுமாவென்று பார்க்கிறேன் என்று சொல்லி அந்த கவசத்தை அவனுக்கு அணிவித்தான். அது தேவனுடைய மனிதனுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டு கொண்டான். தாவீது, ''இதை என் மேலிருந்து கழற்றிப் போடுங்கள். இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் சிங்கத்துடன் எதைக் கொண்டு சண்டையிட்டேனோ, அதே விதமாகச் செல்லப் பிரியப்படுகிறேன்'' என்றான். அவன் காட்டில் வாழ்ந்தவன். அவன், “நான் அந்த விதமாகவே போகிறேன்'' என்றான். அவனைக் கண்டபோது கோலியாத், ''என்னுடன் சண்டையிட ஒரு நாயையா அனுப்புகிறீர்கள்? உன்னை என் ஈட்டி முனையில் குத்தி, உன் உடலை ஆகாயத்துப் பறவைகள் தின்பதற்காக தொங்க விடுவேன்'' என்றான். தாவீது, ''நீ பெலிஸ்தியன் என்ற முறையில் ஈட்டியோடும் கேடயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன்'' என்றான். அந்த தீர்க்கதரிசி தாவீது என்ன சொன்னான் என்பதை கவனியுங்கள்; ''இன்றைக்கு உன் தலை உன் தோளின் மேலிராதபடிக்கு அதை வாங்கிப் போடுவேன்.'' ஆமென்! ஓ, என்னே! அவனிடம் என்ன இருந்ததென்றும், அவன் விசுவாசித்தவர் இன்னார் என்றும், அவர் வாக்குத்தத்தம் பண்ணினதைக் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்றும் அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். பாருங்கள்? எனவே அது என்னவானாலும் சம்பவித்தது. ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்னும் பழமொழியின் சுவர் தகர்த்தெறியப்பட்டு விட்டன. யேகோவா இப்பொழுதும் திரைநீக்கப்பட்டவராய் முழு காட்சியில் நின்று கொண்டு, தமது வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது உண்மை. 111கவனியுங்கள், புறஜாதி சபையானது, மதசம்பந்தமான திரை நீக்கப்பட்டு தேவனை அது காண்பித்த பிறகும் கூட, மறுபடியும் திரையினால் குருடாகியுள்ளது. எப்படி? வார்த்தையானது ஒரு மனிதனில் திரையிடப்பட்டுள்ள காரணத்தால். அதைதான் இஸ்ரவேலர் காணத் தவறினர். அது ஒரு தேவதூதன் அல்லது வேறெதாவதாக இருந்தால், இஸ்ரவேலர் அதை விசுவாசித்திருப்பார்கள். ஆனால்... அது தேவதூதனாயிருக்க முடியாது, அது ஒரு மனிதனாக இருக்க வேண்டும். ஆமென். தேவன் தமது வார்த்தையை மீற முடியாது. இந்தக் கடைசி நாட்களில் அது மறுபடியும் அதேகாரியமாக இருக்க வேண்டும். பாருங்கள்? இஸ்ரவேலரை குருடாக்கினது எது? அந்த மனிதன். ''நீ மனிதனாயிருக்க உன்னை தேவனாக்கிக் கொள்கிறாய். அதற்காகத்தான் அவர்கள் அவரைக் கொன்றனர். இன்றைக்கு செய்தியானது மனிதனின் மூலம் வருகிறது, தேவதூதர்கள் மூலம் அல்ல! பாருங்கள்? தேவன் தமது வழியை மாற்றிக் கொள்ள முடியாது. அவர் மாறாதவர் என்று உரைத்திருக்கிறார். பாருங்கள்? கவனியுங்கள், தோமாவும், புறஜாதிகளும் இன்று இஸ்ரவேலரைப் போல குருடாயுள்ளனர். அதன் காரணம் என்ன? தேவன் ஒரு மனிதனில் திரைமறைக்கப்பட்டிருந்தது இஸ்ரவேலரை குருடாக்கினது. கவனியுங்கள், குருடனான எவனும்.... அது ஒருவனைக் குருடனாக்கும், மற்றவனுக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். அது சிலருடைய கண்களை மூடி, மற்றவர்களுடைய கண்களைத் திறக்கும். 112பாருங்கள் இயேசு நின்றுகொண்டு, “நல்லது, உன் பெயர் சீமோன், உன் தகப்பன் பெயர் யோனா'' என்றார். அவன், “தேவனாகிய கர்த்தாவே!'' என்றான். பாருங்கள். பிலிப்பு.... நாத்தான்வேல், ''நீர் என்னை எப்படி அறிவீர்?'' என்றான். அவர், “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். அவன், ''ரபீ, நீர் எப்பொழுது என்னை அறிந்தீர்?'' என்றான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்'' என்றார். அதற்கு நாத்தான்வேல், ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா“ என்றான். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள். ''அவர் பெயல் செபூல்'' என்றனர். பாருங்கள்? அது என்ன செய்தது? ஒருவருடைய கண்களைத் திறந்தது. மற்றவருடைய கண்களைக் குருடாக்கினது. ஆசாரியர்கள் என்ன சொன்னார்கள்? ''ஏன் இந்த ஆள் பெயல்செபூல்'' என்றனர். 113அந்த ஸ்திரீ, ''அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா வருகிறார் என்று அறிவேன்“ பாருங்கள்? ''அபிஷேகம் பண்ணப்பட்டவர் வருவார். எங்களுக்கு தீர்க்கதரிசிகள் இருக்கவில்லை... நீர் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும். அபிஷேகம் பண்ணப்பட்டவர் வருவார், அவருக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது புறஜாதிகளுக்கு... யூதர்களுக்கு கடைசி நாட்கள் என்றாள். அவள், ''இது கடைசி நாட்கள்” என்றாள். பாருங்கள். சமாரியர், யூதர் இருவருமே மேசியாவுக்காக காத்திருந்தனர். பாருங்கள்? அவள், “அவர் வருவதற்கு இதுவே நேரம் அவர் வரும்போது, இவைகளைச் செய்து, இவைகளை நமக்கு அறிவிப்பார்” என்றாள். அவர், ''நானே அவர்'' என்றார். அவளுடைய கண்கள் திறக்கப்பட்டன, ஆசாரியர்களே குருடாயினர். சுவிசேஷம் எப்பொழுதும் அதைதான் செய்கிறது. அது சிலருடைய கண்களைத் திறந்து அவர்களுக்கு சத்தியத்தை வெளிப்படுத்தி, சிலருடைய கண்களை குருடாக்கி விடுகிறது. அது இரண்டு விதமான பணியைச் செய்கிறது. சிலர் அந்த சூரியனை நேரடியாக உற்றுப் பார்த்து குருடாகி விடுகின்றனர்; மற்றவர்களோ அந்த சூரிய வெளிச்சத்தில் நடந்து அதன் பலனை அனுபவிக்கின்றனர். அதுதான் வித்தியாசம். 114ஒவ்வொரு காலத்திலும் நடந்ததுபோல், தேவன் மாம்சசரீரத்தில் திரைமறைக்கப்படுதல். கவனியுங்கள், அவர் அப்படித்தான் செய்தார். தேவனைத் திரைமறைத்தவர்களே தீர்க்கதரிசிகள். அவர்கள் மாம்சசரீரத்தில் திரைமறைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தனர். (அது சரியா?) எனவே அவர்கள் நம்முடைய மோசேயை கவனிக்கவில்லை. இயேசுவைக் காணவில்லை. கவனியுங்கள், முன்காலத்து தேவாலயத்தில் தகசுத் தோல்களினால் திரைமறைக்கப்பட்டிருந்தது வார்த்தை - கற்பலகைகளில் பொறிக்கப்பட்ட வார்த்தை. 115நான் இன்னும் இருபது நிமிடங்களில் முடித்து விட முயல்கிறேன் - என்னால் முடியுமானால். பதினொன்றரை மணிக்கு. கவனியுங்கள், நீங்கள் கவனித்திருப்பீர்களானால், இதை அதிக நீளமாக்காமல்... சுருக்க வேண்டும் என்பதற்காக... குறிப்பு எழுதி வைத்த புஸ்தகத்தின் சில பக்கங்களை நான் திருப்பிவிட்டேன். உங்களுக்கு உஷ்ணமாயும் களைப்பாயும் உள்ளது என்றறிவேன். 116முன்காலத்து தேவாலயத்தில் திரைக்குப் பின்னால் என்ன இருந்தது? யேகோவா யார்? அங்கு என்ன மறைக்கப்பட்டிருந்தது? திரை எதை மறைத்துக் கொண்டிருந்தது? ஓ, அல்லேலூயா! திரை எதை மறைத்துக் கொண்டிருந்தது? அது வார்த்தையை மறைத்துக் கொண்டிருந்தது. திரையானது (தகசுத் தோல்கள்) வார்த்தையை அவர்களுடைய மாம்சக் கண்களிலிருந்து மறைத்தது. பின்னால் அங்கே சமுகத்தப்பம் இருந்தது. பின்னால் அங்கே ஷெகினா மகிமையும் இருந்தது. ஆனால் இவையெல்லாம் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அவையனைத்தும் மறைக்கப்பட்டிருந்தன. தேவனுடைய மகிமை அனைத்தும் தகசுத் தோலுக்குப் பின்னால் இருந்து, அது உண்மை, அவர்களுடைய மாம்சக் கண்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அது ''உருளும் பரிசுத்தரின் கூட்டம், மூடபக்தி வைராக்கியமுள்ளவர்கள்'' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பின்னால் என்ன மறைந்துள்ளது என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். பாருங்கள்? அது உண்மை. அவர்களுக்கு அது தெரியாது. பாருங்கள்? 117தேவன் கிருபையாக, அவர்கள் காண்பதற்கென திரையைக் கிழித்தார். ஆனால் அவர்களோ தங்கள் பாரம்பரியங்களில் ஆழ்ந்திருந்தபடியால்... இன்று வரைக்கும் அது அவர்களுக்கு மறைந்துள்ளது. அதேதான் இப்பொழுதும் இப்பொழுது விசுவாசியின் மேல் இறங்கும் மகிமை, பரிசுத்த ஆவியின் வல்லமை, ஷெகினா மகிமை (நான் உண்மையான விசுவாசியை குறிப்பிடுகிறேன்), அவன் தேவனுடைய கிரியைகளைச் செய்ய காரணமாயுள்ளது. தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க அவனுக்குள் விசுவாசம் உண்டாகிறது. ஆனால் இவையனைத்தும் அவர்களுடைய கண்களுக்கு மறைக்கப்பட்டு, அவர்கள், ''இவை கடந்து சென்றுவிட்டன'' என்கின்றனர். பாருங்கள், அவர்கள் இன்னமும் திரைக்குப் பின்னால் வாழ்ந்து வருகின்றனர். சிறு பிள்ளைகளே, நீங்கள் அந்த திரைக்குப் பின்னால் இல்லை. தேவன் உங்கள் முழு காட்சிக்கு வந்துவிட்டார். 118அன்றொரு நாள், சகோ. ஃபிரெட் சாத்மனும், சகோ. டாம் சிம்சனும் (அவர் இங்கு எப்பொழுதாவது வந்துள்ளாரோ இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை). இன்னும் நாங்கள் அநேகர் பாப்டிஸ்டு சபைக்கு சென்றிருந்தோம். அப்பொழுது போதகர் சொன்ன ஏதோ ஒன்று நன்றாக ஒலித்தது, அதற்கு நாங்கள் எல்லோரும் “ஆமென்” என்று சொன்னோம். சபையிலிருந்த எல்லோருமே கழுத்தை நீட்டி சுற்று முற்றும் பார்த்தனர். பாருங்கள்? அந்த ஷெகினாவின் பின்னேயிருந்து ஒரு துணிக்கை (crumb) வந்ததை நாங்கள் கண்டு, அதைப் பெற்றுக்கொள்ள மகிழ்ச்சி கொண்டோம். நாங்கள், ''கர்த்தாவே, உமக்கு நன்றி!'' என்று கூறும் வகையில் அதை கூறினோம். பாருங்கள்? நாங்கள் இவ்வாறு கூறினபோது, அங்கிருந்தவர்கள் அவ்வளவாக திரைமறைக்கப்பட்டிருந்ததால் எங்களைப் பார்த்து கேலியாக சிரித்தனர். இதெல்லாம் என்னவென்று அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பாருங்கள்? அவர்கள் இன்னமும் திரைமறைக்கப்பட்டுள்ளனர். எனவே.... ஆனால் நமக்கோ தேவன் முழுகாட்சியில் இருக்கிறார். இப்பொழுதும் அதேவிதமாக உள்ளது! 119தேவன் கிருபையாக திரையைக் கிழித்தபோது, அவர் முழு காட்சிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர்களோ தங்கள் பாரம்பரியங்களில் மிகவும் ஆழ்ந்துள்ளதால், அவர் இப்பொழுதும் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறார். இப்பொழுதும் அவ்வாறேயுள்ளது. மறைக்கப்பட்ட அந்த மகிமை அனைத்தும் நமக்காக வார்த்தையாகிய கிறிஸ்துவில் மறைக்கப்பட்டுள்ளது. அவரே நம்முடைய ஆலயம். ஓ, இப்பொழுது, இதில் நான் சிறிது ஆழமாக செல்ல வேண்டியதாயுள்ளது. என்னுடைய உணர்ச்சிகளுக்காக இன்று காலை என்னை மன்னியுங்கள். ஓ, இதை நான் கூற வேண்டுமென்று நீண்ட நாட்களாக விரும்பினேன், நான்.... அது என்னை உந்திக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? 120கவனியுங்கள், தேவனில் உள்ள எல்லா மகிமையும் வார்த்தையில் உள்ளது. தேவனில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களும் வார்த்தையில் உள்ளது. அது பாரம்பரியங்களின் காரணமாக அவிசுவாசிக்கு மறைந்துள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? ஆனால் அது அனைத்தும் கிறிஸ்துவில் உள்ளது. தேவன் தமது அனைத்தையும் வெறுமையாக்கிக் கொண்டு (“கீனாஸ்”), கிறிஸ்துவுக்குள் வந்தார். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும், திரைக்குப் பின்னால் இருக்க வேண்டும். “நல்லது, நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன்'' என்று நீங்கள் சொல்லிவிட்டு, மூன்று கடவுள்களை விசுவாசித்தால்? ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' ஞானஸ்நானம் கொடுத்தால், முன்னோர்களின் இந்த பாரம்பரியங்கள் அனைத்திலும் நீங்கள் விசுவாசம் கொண்டிருந்தால்? அப்படியானால் நீங்கள் இன்னும் திரைக்கு இந்த பக்கம் இருக்கிறீர்கள். பாருங்கள்? வார்த்தையாகிய கிறிஸ்துவின் திரைக்குள் வாருங்கள். எப்படி வருவது? ''எனக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கிடையாது. இந்த அற்புதங்களையும் அப்படிப்பட்ட காரியங்களையும் நாம் நம்புவதில்லை.'' அப்படியானால் நீங்கள் திரைக்குள் இல்லை. நீங்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. பாருங்கள்? கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். நாம் வார்த்தையில் இருக்கும் போது கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். நான் கிறிஸ்துவை மறுதலித்து, அவருக்குள் எப்படி இருக்க முடியும்? “இதனுடன் ஒரு வார்த்தை கூட்டக் கூடாது, இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போடக்கூடாது” என்று கூறினவர் அவரே. அப்படியானால், நீங்கள் எப்படி கூட்ட முடியும் அல்லது எடுத்துப் போட முடியும்? எந்த திரை உங்களைத் திரைமறைத்திருக்கிறது என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? 121நாம் அவருக்குள் இருக்கிறோம்! அவருக்குள் நாம் இருக்கும்போது, மதசம்பந்தமானவர்களுக்கும், உலகில் மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் நாம் திரைமறைக்கப்பட்டிருக்கிறோம் பாருங்கள் நாம் பெற்று அனுபவித்து வருகிற இந்த மகிமை நாம் வெளியிலுள்ளவர்களுக்கு திரைமறைக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் நாம் பைத்தியக்காரர், 'நட்' என்று நினைக்கின்றனர். பாருங்கள்? பாருங்கள்? அது உண்மை. ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு (1 கொரி. 12) அவருக்குள் இருக்கும் நாமோ, இந்த மகிமையில் பங்கு பெறுகிறவர்களாய் இருக்கிறோம். பாருங்கள்? ஆனால் வெளியே உள்ளவர்கள் அப்படியல்ல, அவர்கள் உள்ளே நோக்கினவர்களாய், அதை மறுதலித்துக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? எனவே, அவருடைய அனைத்திலும் நாம் பங்கு பெறும்படிக்கு, அவருக்குள் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருக்குள் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் அது அவிசுவாசிகளுக்கு மாம்ச சரீரம் என்னும் திரையினால் மறைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? அந்த மகிமையை அவர்கள் அறிந்துள்ளனர், அதைக் குறித்து அவர்கள் படித்திருக்கின்றனர். தேவனுடைய மகிமையைக் குறித்தும் அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்தும் இந்த வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அவர்களுக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. நமக்கோ அது ஒரு வெளிப்பாடு! பாருங்கள்? அது நமக்கு வெறும் வார்த்தையைக் காட்டிலும் மேலானது, அது தத்ரூபமான ஒன்று! ஆமென். தேவன், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார். அது வார்த்தை இப்பொழுது வெளிச்சம் உள்ளது. அது வார்த்தையல்ல, அது வெளிச்சம். நான் கூறுவது விளங்குகிறதா? 122அது நமக்கு வெறும் எழுதப்பட்ட வார்த்தை அல்ல, அது தத்ரூபமானது. நாம் அவருக்குள் இருக்கிறோம். அவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது அவரைக் காண்கிறோம். வார்த்தையாகிய அவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அது வெளியேயுள்ளவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஏன்? ஏனெனில் அது மாம்ச சரீரத்தில் திரைமறைக்கப்பட்டுள்ளது. ஓ, அவர்கள், “அந்த கூட்டம் ஜனங்கள் எந்த பள்ளிக்கூடத்துக்கு சென்றார்கள்? எங்கு கல்வி கற்றார்கள்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் எந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்?'' என்கின்றனர். பாருங்கள், அவர்களுக்கு அது விளங்குவதில்லை. அன்றொரு நாள் ஒரு மனிதன் வேறொரு மனிதனிடம், ''நீ கிறிஸ்தவனாயிருக்க வேண்டுமானால், ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்திருக்க வேண்டும்'' என்றார். அவர், ''நான் ஒரு கிறிஸ்தவன், நான் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை. தேவன் என்னிலிருந்து புற்று நோயை அகற்றிவிட்டார். அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அவர் ஒரு மருத்துவர். அவர், ''ஸ்தாபனங்கள் இதை செய்வதை எனக்குக் காண்பியுங்கள்'' என்றார். பாருங்கள்? சரி. பாருங்கள்? அது இன்னமும் திரைமறைக்கப்பட்டுள்ளது. 123நாம் கிறிஸ்துவுக்குள்ளே இருக்கிறோம். முன்பு போலவே இன்றும் உண்மையான விசுவாசிகள் அனைவரும் அவரை - இக்காலத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தை வெளியரங்கமாக வெளிப்படுவதை - காண்கின்றனர். உங்களால் விளங்கிக் கொள்ளமுடியுமானால், அது ஒரு பெரிய வார்த்தை. பாருங்கள்? பாருங்கள் வார்த்தையிலுள்ள உண்மையான விசுவாசிகள் அனைவருமே தேவனை வெளியரங்கமாகக் காண்கின்றனர். திரை கிழிக்கப்பட்டு விட்டது. தேவன் உங்கள் முன்னிலையில் வெளியரங்கமான நின்று கொண்டு, தம்மை வெளிப்படுத்துகிறார். பாருங்கள்? தேவன் வெளியரங்கமாக வெளிப்படுதல். அப்படி செய்வதற்கு, நமது பழைய ஸ்தாபன பாரம்பரிய திரை மறுபடியுமாக கிழிக்கப்பட வேண்டும். அது என்னவென்று உண்மையில் காணவேண்டுமானால், அத்தகைய காரியங்களிலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டும். பாருங்கள்? உங்களால் அப்படி செய்ய முடியாது. அவர்கள் ஒவ்வொரு முறையும் ''அது ஒன்றுமில்லை'' என்று சொல்லி உங்களுக்கு முன்னால் திரையை இழுத்து விட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இங்கு அது எழுதப்பட்டுள்ளது. இங்கு அது வெளிப்படுகிறது, பார்த்தீர்களா? பாருங்கள்? 124ஒருவன் சூரியனைக் காண மறுத்து, “ஓ, 'வெளிச்சம் உண்டாகக்கடவது' என்று தேவன் உரைத்தார் என்று எனக்குத் தெரியும். ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது. நான் அடித்தளத்துக்கு செல்கிறேன். அதைக் காண மறுக்கிறேன்” என்பானானால், அவன் பைத்தியக்காரன். அவனில் ஏதோ கோளாறு உள்ளது. அவ்வாறே, தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது வெளிப்படுவதைக் கண்டும், அவர்களுடைய ஸ்தாபனம் திரையை இழுத்து விடுகிறது என்னும் காரணத்திற்காக அதை விசுவாசிக்க மறுக்கும் எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏதோ கோளாறு உள்ளது. பாருங்கள், அது அவர்களுக்கு திரை மறைக்கப்பட்டுள்ளது. 125இதை செய்ய வேண்டுமென்றால், நம்முடைய ஸ்தாபன பாரம்பரிய திரைகள் தேவனுடைய ஆவியாகிய அக்கினியினாலும், அவருடைய வார்த்தை என்னும் பட்டயத்தாலும் உடைத்தெறியப்பட வேண்டும். எப்பொழுதுமே அவருடைய வார்த்தை அவருடைய பட்டயமாயுள்ளது. பாருங்கள்? அந்த நாளில் அவர் அக்கினி நிறைந்த தமது பட்டயத்தினால் அந்த திரைச்சீலையை மேலிருந்து கீழ்வரைக்கும் கிழித்துப்போட்டார். இன்றைக்கும் அதே பட்டயத்தைக் கொண்டு அதே காரியத்தை அவர் செய்கிறார்! ''என் கோட்பாடுகளோ, கோட்பாடுகளின் புஸ்தகமோ, என் ஸ்தாபனப் பிரமாண புஸ்தகமோ அல்ல.'' ஆனால் கர்த்தருடைய பட்டயம், பாருங்கள், திரைச்சீலையை கீழ்வரைக்கும் கிழித்து போடுகிறது. அப்பொழுது நீங்கள் தேவன் தமது வார்த்தையில் வெளிப்பட்டு, வெளிப்படையான காட்சியில் நின்று கொண்டிருப்பதைக் காண்பீர்கள். காண்பதற்கு அது எவ்வளவு மகிமையான காட்சி பாருங்கள்? சரி. தேவனுடைய பரிசுத்த ஆவியும் அக்கினியும், அவருடைய பட்டயமும் அதை கிழித்துப் போடுகிறது. வார்த்தை ஸ்தாபன திரையை கிழித்துப் போடுகிறது. 126நீங்கள் “வார்த்தை'' என்று சொல்லி, வார்த்தை கிரியை செய்யாமல் போனால்? பட்டயம் இங்கு இருந்து, அதனால் ''கிழிக்க முடியாது,'' ''அது கிழிக்காது'' என்றால், பட்டயத்தினால் என்ன பயன்? ஆனால் நீங்கள் அங்கு தேவனுடைய பட்டயத்தை வைத்து, அது கிழிப்பதை நீங்கள் காணும் போது - அது அதற்கென்று அனுப்பப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள கரத்தில் உள்ளது. பாருங்கள், அது அதை கிழிக்கிறது, அவர் அங்கே இருக்கிறார், அது தேவனை - மகத்தான யேகோவாவை - வெளிப்படையாகக் காண்பிக்கிறது. அது அவருடைய வார்த்தை வெளிப்படுதல் - இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள பாகம். உங்களுக்கு விளங்குகிறதா? பாருங்கள்? இன்றைக்கு இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பட்டயம்; தேவன் தமது பட்டயத்தை கையிலெடுத்து ஸ்தாபன திரையை கீழ் வரைக்கும் கிழித்து அதை பின்னால் நீக்கி, தம்மை வெளிப்படுத்தி, அவர் இங்கிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார். அது இப்பொழுதும் அதே அக்கினி ஸ்தம்பம்! கவனியுங்கள், அது இன்றைய வாக்குத்தத்தங்களுக்கென வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. 127பேதுரு, “ஆண்டவரே, இதைக் கண்ட பிறகு நாங்கள் எங்கே போவோம்?'' என்று கூறினது போல் நாமும் கண்டு கூறுகிறோம். நாம் எங்கே போவோம்? நாம் ஒரு சபையில் பிறந்திருக்கையில், எந்த சபையைச் சேர்ந்து கொள்ள முடியும்? பாருங்கள்? நீங்கள் என்ன... இந்த நீங்கள் சத்தியத்தை அறிந்து கொண்ட பிறகு, பாருங்கள், நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொள்ள முடியும்? அவர்கள் ஒவ்வொருவரும் அதை மறுதலிக்கின்றனரே! அவர்கள் ஒவ்வொருவரும் இதைக்குறித்து ஒரு நல்ல காரியத்தை சொல்லும் எந்த ஸ்தாபனமும் எனக்குத் தெரியாது. அது உண்மை. அது உண்மை. 128நாற்பத்திரண்டு சபைகள் ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ள நான் புறப்பட்டேன். அங்கு நான் அடைந்தபோது, எனக்கு ஒருவர் கூட இல்லை. அவர்கள், “அவர் நித்திய பாதுகாப்பின்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறார்'' என்றனர். அது 'லீகலிஸ்டுகளை (legalists) அகற்றி விட்டது. ஒருவர், ''அவர் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறார்” என்றார். அது மற்றெல்லாரையும் அகற்றி விட்டது, பாருங்கள். அவர்களில் ஒருவர், ''அவர் சர்ப்பத்தின் வித்தின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறார். சர்ப்பத்துக்கு வித்து இல்லை'' என்றார். அது வேதம், ''நான் அவள் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்'' என்று உரைக்கிறது. பாருங்கள், அது - வார்த்தையை மறைத்திருந்த திரை நீக்கப்பட்டு விட்டது. பாருங்கள்? அது உண்மை. அது பாலகருக்கு வெளிப்படுகின்றது. அது நீக்கப்பட்டது, அவர்கள் அதைக் காண்கின்றனர். வார்த்தையின் மேலிருந்த திரை நீக்கப்பட்டவுடனே, பாரம்பரியங்கள் வார்த்தையிலிருந்து நீக்கப்படுகின்றது - இயேசு ஒரு சமயம் ''என்னைக் காணும்போது, நீங்கள் பிதாவை காண்கின்றீர்கள்'' என்று கூறினது போல. பாருங்கள்? தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றே. இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? வார்த்தை வெளிப்படும்போது, அது என்ன? பாருங்கள்? 129இயேசு, ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளைப் பெற்றுள்ளதாக எண்ணுகிறீர்களே! தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். நீங்கள் என்னைக் காணும்போது, பிதாவைக் காண்கிறீர்கள்'' என்றார். நீங்கள் வார்த்தை வெளிப்படுவதைக் காணும் போது, நீங்கள் பிதாவை, தேவனை, காண்கிறீர்கள். ஏனெனில் வார்த்தையே பிதா, வார்த்தையே தேவன். வார்த்தை வெளிப்படுதல் என்பது தேவனே தமது சொந்த வார்த்தையை எடுத்து அதை விசுவாசிகளிடையே வெளிப்படுத்துவதாகும். விசுவாசிகளைத் தவிர வேறெதுவும் அதை ஜீவிக்கச் செய்ய முடியாது, விசுவாசிகள் மாத்திரமே. வேறெதுவும் இல்லை.... 130நீங்கள் கோதுமையை எடுத்து வித்தியாசமான மண்ணில் விதைத்தால், அது வளராது. அந்த கோதுமை வளர்வதற்கு நிலத்தில் ஒரு பிரத்தியேக உரம் இருக்க வேண்டும். அது இல்லையென்றால்..... நிலத்திலுள்ள உரம் சரியாக இல்லையென்றால், அந்த உரத்துக்கு கோதுமை தளிர் விடவில்லையென்றால், அது ஒருபோதும் வளராது. எனவே வார்த்தை விழும் போது, அது சரியான விதமான இருதயத்தில் விழவில்லையென்றால்.... இயேசு, “சில விதை வழியருகே விழுந்தது. சில விதை கற்பாறை இடங்களில் விழுந்தது, பறவைகள் வந்து அதைப் பட்சித்து போட்டது'' என்றார். அவர் தொடர்ந்து ''சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது'' என்றார் - பாரம்பரியங்கள், ஸ்தாபனங்கள், உலகக் கவலை அதை நெருக்கிப் போடுகின்றன. அவர், ''சில விதை நல்ல நிலத்தில் விழுந்து நூறாக பலன் தந்தது. அதுதான் தேவனுடைய ராஜ்யம்'' என்றார். அதே காரியம் தான், பாருங்கள், சிலர் விசுவாசிக்கவே மாட்டார்கள். சிலர் அவரை சில காலம் விசுவாசிப்பார்கள், அவருக்கிருந்த சில சிஷர்களைப் போல், அவர்களில் பலர் - அந்த எழுபது பேர் - அவரிடம் என்ன இருந்தது என்பதைக் கண்டு பிடிக்க சில ஆண்டுகளாக, ஏறக்குறைய ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளாக, அவரைப் பின் தொடர்ந்தனர். இவைகளைச் செய்ய எப்படிப்பட்ட வல்லமை அவருக்கு இருந்ததென்றும், அவர் ஒரு மந்திரவாதி போல் இவைகளைச் செய்கிறாரா என்றும், ஜனங்களின் இருதயங்களில் இருந்தவைகளையும் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் அவரால் எப்படி அறிந்து கொள்ள முடிகிறது என்பதையும் கண்டு கொள்ள. ஆனால் முடிவில் அவர் ''நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்,'' ''நானே வார்த்தை'' என்று உரைத்தார் என்று அவர்கள் அறிந்து கொண்டபோது, அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள், ''இது எந்த மனிதனும் விளங்கிக் கொள்ள முடியாது ஒன்று'' என்று சொல்லி, அவரை விட்டு விலகிச் சென்று விட்டனர். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். 131இது ஒரே காரியத்தை குறிப்பிடுகிறது. அதாவது ஒவ்வொரு சபையிலும் பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள், விசுவாசிகள் உள்ளனர். அது ஒவ்வொரு சபையிலும் காணப்படுகிறது. நீங்கள் எக்காலத்திலும் அதைக் காணலாம். சிலர் விசுவாசிகளைப் போல் பாவனை செய்கின்றனர். இதுவே மிகவும் மோசமான ரகம். பிறகு உண்மையான விசுவாசிகள் உள்ளனர், இவர்கள் உங்களைத் தொல்லைப்படுத்துவதில்லை, இவர்கள் தலையை அசைத்து ஆமோதம் தெரிவித்து போய்விடுவார்கள். ஆனால் தங்கள் விசுவாசிகள் என்று அழைத்துக் கொண்டு பாவனை விசுவாசிகளாயிருக்கிறார்களே, அவர்கள் மீதுதான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் - இந்த பாவனை விசுவாசிகளின் மேல் சில உண்மையான விசுவாசிகள் உள்ளனர். இம்மூவகை சாராரைக் கவனித்தீர்களா? அவிசுவாசிகள் இருந்தனர். அவர், ''மனுஷகுமாரனின் மாம்சத்தைப் புசித்து'' என்று சொன்ன மாத்திரத்தில், ஓ, அவ்வளவுதான். மற்றவர் பாவனை விசுவாசிகள். அவர்கள் (யூதாசைப் போல்) கடைசி வரைக்கும் கூட இருந்தனர். பிறகு உண்மையான விசுவாசிகள், அவர்களால் அதற்கு விளக்கம் தர முடியவில்லை, இருப்பினும் அவர்கள் அதை விசுவாசித்தனர். அவர்கள் முடிவு வரைக்கும் நிலைத்திருந்தனர். 132திரை... அவிசுவாசிகளின் பாரம்பரியம் நீக்கப்படும் போது, நீங்கள் தேவனைக் காண்கிறீர்கள், பாரம்பரியம் என்னும் திரை நீக்கப்பட்டவுடனே, தேவன் இன்னமும் தமது வார்த்தையின் தேவனாயிருக்கிறார் என்பதை நீங்கள் காணலாம். அவர் இன்னமும் தமது வார்த்தையை காத்துக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அவர் தேவனாக, தமது வார்த்தையின் மூல கர்த்தாவாக, மற்றவர்களுக்கு தோல் திரையின் பின்னால் மறைக்கப்பட்டவராயிருக்கிறார். ஆம் அது உண்மை! திரைக்குப் பின்னால் போக முடியாதவர்களுக்கு, அவர் இன்னமும் தோல் திரைக்குப் பின்னால் இருக்கிறவராயிருக்கிறார். 133கவனியுங்கள், அப்பொழுது நாம் - அப்பொழுது நாம் அவருடைய பாகமாகி விடுகின்றோம். ஏனெனில் நீங்கள் அவரை மறைக்கும் திரையாகி விடுகின்றீர்கள். (கிறிஸ்து உங்களில் உள்ள வரைக்கும்) நீங்கள் அவருடைய பாகமாக இருக்கின்றீர்கள் - கிறிஸ்து தேவனுடையவராயிருந்தது போல. தேவன் கிறிஸ்துவுக்குள் வாசமாய் இருந்ததனால் அது அவரைத் தேவனாக்கியது. கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களில் வாசம் செய்வதால், நீங்கள் கிறிஸ்துவின் பாகமாகி விடுகின்றீர்கள். “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' பாருங்கள்? கிறிஸ்து உங்களில் மறைந்துள்ள வரைக்கும் நீங்கள் கிறிஸ்துவின் பாகமாயிருக்கின்றீர்கள் அது அவிசுவாசிக்கு திரைமறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உங்களில் வாசமாயிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் தேவாலயமாக, கிறிஸ்துவை தோல் திரைக்கு பின்னால் கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது நாம்... இந்த திரைக்குப் பின்னால் இருப்பதன் காரணமாக. மறுபடியுமாக மாம்ச சரீரம் என்னும் திரை தேவனை (வார்த்தையை) அவிசுவாசியிடமிருந்து மறைக்கிறது. 134“எழுதியிருக்கிறதே,'' பாருங்கள் எழுதியிருக்கிறது. ''நீங்கள் எழுதப்பட்ட நிருபங்கள்” என்று வேதம் உரைக்கிறது. நிரூபம் என்றால் என்ன? ''எழுதப்பட்ட வார்த்தை.'' நீங்கள் எழுதப்பட்ட வேறு விதமாகக் கூறினால், நீங்கள் அதை இவ்வாறு படிக்கலாமே, நீங்கள்.... பவுல், ''நீங்கள் எழுதப்பட்ட நிரூபங்கள் அல்லது ''நீங்கள் எழுதப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை“ என்கிறான். அதனுடன் ஒன்றையும் கூட்ட முடியாது. நீங்கள் ”நான் எழுதப்பட்ட நிரூபம்'' என்று சொல்லிக் கொண்டு, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள விதமாக தவிர வேறெந்த விதமாகவும் வாழ முடியாது. ஏனெனில் இதனோடு ஒன்றையும் கூட்டவோ அல்லது இதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போடவோ முடியாது. 135டாக்டர் லீ வேயில் இந்த பிரசித்தி பெற்ற புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். சிறிது கழிந்து அது வெளியாகும்போது, அதை நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சகோ. வேயில் திறந்த வெளியில் எங்கோ இருக்கிறார். அவரை வெளியே கண்டேன். அவரால் உள்ளே வரமுடியவில்லை என்று நினைக்கிறேன். அவர் ஒரு புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் லவோதிக்கேயா சபையைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. மிகவும் பிரமிக்கத்தக்கதாய் உள்ளது. நீங்கள் அதை படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அது வெகு விரைவில் அச்சகத்தை விட்டு வெளிவரும். நாங்கள் அதை கடைசி முறையாக படித்துக் கொண்டிருக்கிறோம். அவர் எழுதியுள்ளதை நாங்கள் அங்கு விவாதித்துக் கொண்டிருந்தோம். 136அநேகர் என்னிடம் அடிக்கடி வந்து, ''சகோ. பிரான்ஹாமே, அந்த ஏழு இடிகள் முழங்கினவைகளை அவர், 'அதை எழுதாமல் முத்திரை போடு' என்றாரே. அந்த கடைசி நாட்களில் ஏழு இடி முழக்கங்கள் வெளிப்பட்டு, அது என்னவென்று நமக்கு அறிவிக்குமா?'' என்று கேட்பதுண்டு. அது கேட்பதற்கு நன்றாயுள்ளதல்லவா? பாருங்கள்? ஆனால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள். அவர், ''அதை எழுதாதே“ என்றார். பாருங்கள்? இந்த ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின. அவர், ''நீ எழுதாதே” என்றார். அது கடைசிநாள் வரைக்கும் புஸ்தகத்தில் முத்திரை போடப்பட்டிருக்க வேண்டும். 137சிலர், அநேகர், வேதபண்டிதர் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, தேவனாகிய கர்த்தர். தமது ஜனத்திற்கென்று தேவன் உங்களுக்கு அளித்துள்ள அனுபவத்தைக் கொண்டு'' - இதை நான் தாழ்மையோடு கூறுகிறேன் - ''தேவன் உங்கள் மூலம் வெளிப்படுத்தின வார்த்தையை ஒரு வேதபுஸ்தகமாக எழுத நீங்கள் தகுதி பெற்றிருக்கின்றீர்கள்“ என்று கூறினதுண்டு. நான், ''அது ஒருக்கால் உண்மையாயிருக்கலாம்'' என்றேன். பாருங்கள், அவர் வார்த்தையில் என்னை பிடிக்க முயன்றார். பாருங்கள்? நான், ''ஆனால், பாருங்கள், அப்படி நான் செய்ய முடியாது'' என்றேன். அவர், “ஏன் உங்களால்முடியாது? உங்களுக்கு எல்லா தகுதிகளும் உள்ளனவே'' என்றார். நான், ''ஆனால், பாருங்கள், ஒரு வார்த்தையை கூட்டக் கூடாது, ஒரு வார்த்தையை எடுத்துப் போடக்கூடாது'' என்றேன். அவர், ''நல்லது, அப்படியானால், அந்த ஏழு இடி முழக்கங்கள்? அந்த ஏழு இடிகள் முழங்கினவை ஒரு மனிதனுக்கு வெளிப்பாடாக அளிக்கப்படாதா?'' என்று கேட்டார். நான், “இல்லை ஐயா. அப்படியானால் அதனுடன் கூட்டுவதாகவோ அல்லது எடுத்துப் போடுவதாகவோ ஆகிவிடுமே'' என்றேன். அவையனைத்தும் அங்கு வெளிப்பட்டுவிட்டது. அது என்னவென்னும் வெளிப்பாட்டை ஏழு முத்திரைகள் திறந்து அளித்துவிட்டன. அவர் இன்னமும் வார்த்தையாயிருக்கிறார் பாருங்கள், நீங்கள் அந்த வார்த்தையிலிருந்து விலகிச் செல்லமுடியாது. அது வார்த்தையை விட்டுச் செல்லாது, தேவனுடைய ஆவி அந்த வார்த்தையை ஒருபோதும் விட்டுச் செல்லாது. அது வார்த்தையில் நிலைத்திருந்து, சிலரைக் குருடாக்கி, சிலருடைய கண்களைத் திறக்கும். அது எக்காலத்தும் அப்படியே செய்யும். 138''நீங்கள் சகல மனுஷராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிரூபங்கள்“ (2 கொரி. 3:2). ''நீங்கள் எங்கள்...'' அதற்கு நீங்கள் சரியான அர்த்தம் உரைத்து இந்தப் பக்கம் திருப்பிப்பாருங்கள், பாருங்கள், அதை திருப்பி பாருங்கள். ''நீங்கள் எழுதப்பட்ட நிரூபங்கள்,'' அதனோடு நீங்கள் ஒன்றையும் கூட்ட முடியாது, ''சகல மனுஷராலும் வாசிக்கப்படும் நிரூபங்கள்.'' வேறு விதமாகக் கூறினால், ''வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை. பேதுருவும் யோவானும் அங்கு சென்று அதைக் காண்பித்த போது, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அவர்களுக்கு கல்வியறிவு இல்லையென்றும் அறிந்திருந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள். பாருங்கள், அவர்கள் படிப்பறியாதவர்கள், பேதமையுள்ளவர்கள், ஆனால் அவர்கள் எழுதப்பட்ட நிரூபங்களாயிருந்தபடியால், பாருங்கள், அவர்கள் இயேசுவுடனே கூட இருந்ததை அவர்கள் அந்த நிரூபத்தில் படித்தனர். ஏனெனில் இயேசு அவர்கள் மூலமாய் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கிறிஸ்து அவர்கள் மாம்ச சரீரத்தில் திரைமறைக்கப்பட்டு, வெளிப்பட்டு, ஜீவிக்கிறவரானால், 139அவர் மோசேயில் இருந்தது போல. வார்த்தை மோசேயில் இருந்தபோது, அவன் மாம்சத்தில் தோன்றிய தேவனாயிருந்தான். அது இயேசுவில் இருந்தபோது அவர் மாம்சத்தில் தோன்றிய தேவனாயிருந்தார். பாருங்கள்? அவர் செய்த ஒன்றே ஒன்று தமது முகமூடியை மாற்றிக் கொள்ளுதல் - வார்த்தையை அல்ல, அவருடைய தன்மையை அல்ல. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் தமது உருவத்தை மாத்திரமே மாற்றிக் கொண்டார். அவர் நோவாவிலிருந்து மோசேக்கு மாறினார்; அவர் மோசேயிலிருந்து தாவீதுக்கு மாறினார்; தாவீதிலிருந்து, யோசேப்புக்கு, இப்படி படிப்படியாக மாறிக் கொண்டே வந்து தேவத்துவத்தின் பரிபூரணத்தை சரீரத்தில் கொண்ட நிலையை அடைந்தார். பாருங்கள்? அது இன்னமும் அதே தேவன்! ஆமென்! ஆமென்! அது விளங்குகிறது என்று நம்புகிறேன். பாருங்கள்? அது அதே தேவன், ஆனால் அவர் வேறொரு திரையை எடுத்துக் கொள்கிறார். பாருங்கள், அவர் மற்றொரு திரையைப் போட்டுக் கொள்கிறார். 140அவர் சீர்திருத்தக்காரர்களில் அதை செய்தார். அவர் ஒரு திரையைப் போட்டுக் கொண்டார், வேறொரு திரையைப் போட்டுக் கொண்டார், இப்படியாக அது லூத்தரன் காலம், மற்ற காலம் வழியாக வந்து, முடிவில் அது முழுமைக்கு வருகிறது. அது வருவதற்கு முன்பு, ஒரு தீர்க்கதரிசி மறுபடியும் எழும்புகிறான். அப்படி எழும்பும்போது, அது வார்த்தைக்கு முன் நிழல்களாயிருந்தவைகளை எடுத்துக் காண்பித்து, அங்கு என்ன நடந்தென்று, காண்பித்து அதை விவரித்து, என்ன விடப்பட்டுள்ளது என்பதையும் விளக்கி, சபையான... இதைக் குறித்த அறிவைப் பெறும்படி செய்கிறது. இது மறையும் போது, யோவான் சொன்னதுபோல, “நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்.'' அப்பொழுது எல்லாமே அவருக்குள் வருகிறது. அவர் லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தே காலம், இப்படி வழிவழியாக முழுவதுமாக வெளிப்பட்டு விட்டார். அவர் முழுவதுமாக வெளிப்பட்டு விட்டார், பாருங்கள், வழிவழியாக வெளிப்படுத்துதல், தேவன் தம்மை வெளிப்படுத்திக் காண்பித்தல். பாருங்கள்! இப்பொழுது கவனியுங்கள், அவர்களுக்கு செய்தது போல, இந்த நாளிலும் அவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார். 141இப்பொழுது மோசே, அந்நாளில் வார்த்தையாயிருந்தான். ஏனெனில் அந்த நாளுக்கான வார்த்தை அவனிடம் கொடுக்கப்பட்டது - மோசேயிடம். யோசேப்பு அவன் நாட்களில் வார்த்தையாயிருந்து, கிறிஸ்துவை அப்படியே சித்தரித்தான். பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவரும் வார்த்தையாக இருந்தனர். இயேசு வந்தபோது, அவர் வார்த்தையின் பரிபூரணமாக இருந்தார். ஏனெனில் மீட்பின் திட்டம் முழுவதும் அவரில் வைக்கப்பட்டிருந்தது. மீட்பின் திட்டம் முழுவதும் மோசேயில் வைக்கப்படவில்லை. யோசேப்பில் வைக்கப்படவில்லை. எலியாவில் வைக்கப்படவில்லை. பாருங்கள். அவர்கள் வார்த்தையின் ஒரு பாகமாக மாத்திரமிருந்து அதைச் சுட்டிக் காண்பித்தனர். பாருங்கள்? (இப்பொழுது கவனியுங்கள். நான் கூறப்போவதில் உங்கள் சிந்தனையை செலுத்துங்கள்). பாருங்கள், முழுதிட்டமும் அவர்களில் இல்லை. அவர்கள் அதைச் சுட்டிக் காண்பித்தனர். 142எனவே பரிபூரணமான அவருக்குப்பிறகு, நாம் வேறெதையும் சுட்டிக் காண்பிக்க முடியாது. அது மறுபடியும் வார்த்தையாகிய அவரை பின் நோக்கிச் சுட்டிக் காண்பிக்கிறது. இது முழு வெளிப்பாடு, இதனோடு ஒன்றையும் கூட்ட முடியாது, இதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போட முடியாது. அது முழு வெளிப்பாடு. மற்ற அனைத்தும் அவருடைய வருகையின் நிழல்களாயிருந்தன. ஆனால் அவர் வந்தபோது, அவரே அந்த பரிபூரணமானவர். எபிரேயர் 1: ''பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் - தேவன் இந்த திரைகளாகிய தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பேசினார் - “இந்தக் கடைசி நாட்களில் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் திருவுளம் பற்றினார்.'' பார்த்தீர்களா? தேவனுடைய குமாரன் கல்வாரியில் திரைநீக்கப்பட்டார். 143கவனியுங்கள், ''உயிர்ப்பிக்கப்படுதல்.'' இன்றைக்கு வார்த்தையானது திரைகளாகிய மனித பாண்டங்களில் வெளிப்படும் போது, அது முற்றிலுமாக அந்நாளில் நிறைவேறும் வார்த்தையாக இருந்து, தேவனைச் சுட்டிக்காட்டுவதாயுள்ளது. 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தின்படி அவருக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுவதன் மூலம், அவரோடு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு நம்மை ஒன்றுபடுத்திக் கொள்கிறோம். ஆமென். 144நான் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேன் என்றேன், இன்னும் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாமா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). பாருங்கள்? கவனியுங்கள், இதை இங்கு கூறாமல் விட்டுவிடக் கூடாது. கவனியுங்கள், அவரோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுதல். 145இப்பொழுது கவனியுங்கள். இங்குள்ளவர்கள் எத்தனை பேர் அமெரிக்க குடிமக்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி, நீங்கள் அமெரிக்க குடிமக்கள். அப்படியானால் இந்த நாட்டுடன் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு உங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாடு எப்படியெல்லாம் உள்ளதோ, அதெல்லாம் நீங்கள். அது சரியா? அவளுடைய மகிமையிலும் அவளுடைய அவமானத்திலும் நீங்கள் ஒன்றுபட்டவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அமெரிக்க குடிமக்களாக இருக்கும் காரணத்தால், நீங்கள் அமெரிக்காவை சார்ந்தவர்களாயிருக்கிறீர்கள். அல்லேலூயா ஜார்ஜ் வாஷிங்டன் டெலாவேரைக் கடக்கும்போது நான் அவருடன் இருந்தேன். நான் அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறேன். அது உண்மை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவின் போது நான் ஆபிரகாம் லின்கனுடன் இருந்தேன். அங்கு நான் நின்று கொண்டிருந்தேன். க்வாமில் நான் போர்வீரர்களுடன் இருந்தேன். போர்வீரர்களே, நீங்கள் அங்கு அந்த கொடியை ஏற்றினபோது, நான் அங்கிருந்தேன். நான் அமெரிக்கன். ஆகையால் அதனுடன் நான் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். ஆமென். அமெரிக்கனாயிருப்பதற்கு, புரட்சி அவளுக்கு என்ன அவமானம் நேர்ந்தாலும், அதை நான் சுமக்கிறேன். ஏனெனில் நான் ஒரு அமெரிக்கன். அது உண்மை. 146அவ்வாறே ஒரு கிறிஸ்தவன் என்னும் முறையில் அவருடன் நான் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். ஆமென்! நோவா பேழைக்குள் பிரவேசித்த போது, நான் அவருடன் இருந்தேன். மோசே எகிப்தை விட்டு வெளி வந்தபோது, நான் அவனுடன் இருந்தேன். ஆமென்! நான் எலியாவுடன் கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்தேன். ஆம், ஐயா! தேவனுக்கு மகிமை! அவன் அதை செய்த போது நான் அவனுடன் இருந்தேன். நான் உண்மையில் அவருடன் இருந்தேன். நான் உலகத்தின் காரியங்களுக்கும், எனக்கும், எல்லா பாரம்பரியங்களுக்கும் மரித்தபோது, கல்வாரியில் அவருடைய மரணத்துடன் என்னை ஒன்றுபடுத்திக் கொண்டேன். நான் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். ஈஸ்டர் காலையில் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த போது, நான் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி பலத்த காற்றைப் போல் இறங்கி வந்தபோது, நான் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். அவர் என்னவெல்லாமாக இருந்தாரோ அது அனைத்தும் நானாக இருக்கிறேன், நான் என்னவெல்லாமாக இருக்கிறேனா, அது அனைத்தும் அவராக இருந்தார். ஆமென். அவருக்குள் மரிப்பதன் மூலம் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறோம். அவர் என்னவாக இருக்கிறாரோ, அது நானாக இருக்கிறேன். ஆமென். 147இந்த நாடு என்னவாக இருக்கிறதோ, அது நானாக இருக்கிறேன். அப்படியிருக்க எனக்குப் பெருமையுண்டு. அதன் அவமானத்தை சுமக்க நான் ஆயத்தமாயிருக்கிறேன். அமெரிக்கனாயிருக்க, அதன் நிந்தையை சுமக்க நான் ஆயத்தமாயிருக்கிறேன். அது உண்மை. ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு நான் இதற்கு இரட்டிப்பாக இருக்கிறேன். அவர் என்னவெல்லாம் இருந்தாரோ, அது நானாக இருக்கிறேன். அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட நான் விரும்புகிறேன். அந்த அப்போஸ்தலர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் எண்ணினர். அவர்கள் பரியாசம் செய்யப்பட்டு, பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்டனர். அவர்கள் அவருடைய நாமத்தினிமித்தம் நிந்தையைச் சுமப்பது மிகவும் கனமானது என்று எண்ணினர். அவர்களில் ஒருவனாக நான் இருந்து, வார்த்தையாகிய கிறிஸ்துவுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதைக் குறித்து, இன்றைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுதல்! அவருக்குள் நானும் ஞானஸ்நானம் பண்ணப்படுவதன் மூலம் நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறோம். வார்த்தை என்பது அவரே. நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவருடைய வார்த்தையாயிருக்கிறேன். ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார் அவர் என்னவாயிருக்கிறாரோ, அது நான் ஆமென்! உங்களுக்கு விளங்குகிறதா? சரி. 148அங்கு அந்த வெளிப்படுதலை வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை, அப்படியானால் அது என்னை எங்கே வைக்கிறது? அவர் அந்த ஷெகினா மகிமையாயிருந்தால், நான் அதன் பாகமாயிருக்கிறேன். ஆமென்! ஓ! ஆமென்! அது உண்மை. வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையே, தன்னை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. சிந்தித்துப் பாருங்கள்! அந்த நாளில் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட அதே பரலோக தூதனின் மூலமாய் இந்த நாளில் தேவனுடைய பரம இரகசியங்கள் நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. மோசேயை அனுப்பின அதே அக்கினி ஸ்தம்பம், வேதாகமத்தை எழுதின மோசேயின் மேல் தங்கியிருந்த அதே அக்கினி ஸ்தம்பம், தமஸ்குவுக்குப் போகிற வழியில் பவுலைச் சந்தித்த அதே அக்கினி ஸ்தம்பம் - பவுல் புதிய ஏற்பாட்டை எழுதினான். ஞாபகம் கொள்ளுங்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அவர்கள் கண்ணால் கண்டதை எழுதினார்கள். ஆனால் பவுலுக்கோ வெளிப்பாடு கிடைத்தது. அவன் அதை வெளியே கொண்டு வந்தான். ஏனெனில் அவன் அக்கினி ஸ்தம்பத்தை சந்தித்தான். சிந்தித்துப் பாருங்கள், அதே ... 149அங்கே யோசேப்பு, அவர்கள் அனைவரும் நடந்ததை எழுதி வைத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் காலத்தில் எழுதிவைத்தனர். ஆனால் மோசே காட்சிக்கு வந்தபோது, அவனுக்கு வெளிப்பாடு கிடைத்தது. அவன் அக்கினி ஸ்தம்பத்தை சந்தித்திருந்தான். ஆதியாகம காலத்தில் நடந்தவைகளைக் குறித்து அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் வேதாகமத்தின் முதல் நான்கு புத்தகங்களை எழுதினான். மோசே எழுதினான். அது சரியா? ஏனெனில் அவன் தேவனை, அக்கினி ஸ்தம்ப உருவில், அக்கினி ஸ்தம்பத்தில் திரை மறைக்கப்பட்டிருந்தவரை, சந்தித்தான். பவுல் அவரை வழியில் சந்தித்தபோது... சீஷர்கள் அவர் செய்யக் கண்டதை மாத்திரமே எழுதி வைத்தனர், ஆனால் பவுலுக்கோ வெளிப்பாடு கிடைத்தது. அவன் எகிப்துக்கு சென்று ஆராய்ந்து, பழைய ஏற்பாட்டின் தேவனே புதிய ஏற்பாட்டின் இயேசு என்னும் வெளிப்பாட்டைக் கண்டு கொண்டான். ''நான் பரம தரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை'' அது உண்மை. சரி! இதை சிந்தித்துப் பாருங்கள்! வேதாகமத்தை எழுதினவர்களின் மேல் தங்கியிருந்த அதே அக்கினி ஸ்தம்பம் இன்றைக்கு இங்கு வேதாகமத்துக்கு வியாக்கியானம் அளித்துக் கொண்டிருக்கிறது! ஆமென்! அதற்காய் நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அதே அக்கினி ஸ்தம்பம்! என்ன ஒரு ஆறுதல், என்ன ஒரு அடையாளம் காண்பித்தல் நான் அதில் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், இன்னும் மற்றவர்களில் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதைக் காட்டிலும், ஷெகினா மகிமையும் வெளிப்பாடும் தங்கியுள்ள வார்த்தையில் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். 150அக்கினி ஸ்தம்பம் காணக்கூடிய விதத்தில் நமது மத்தியில் பிரசன்னமாகி, செய்தி சரியென்று அடையாளம் காண்பிக்கிறது - அவர் சீனாய் மலையில் செய்தது போல, ஞாபகம் கொள்ளுங்கள், உண்மையான செய்தி வருவதற்கு முன்பு மோசே பிரசங்கம் செய்து, அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தான். அங்கு உண்மையான கட்டளைகள் அளிக்கப்படுவதற்கு முன்பு (முத்திரைகள் கொண்டு வரப்படுவதற்கு முன்பு) தேவன் ஜனங்களுக்கு முன்னால் இறங்கி வந்து அவன் அவரால் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபித்தார். (அது சரியா?) அவனைக் கண்டு அவனுடன் பேசினதாக மோசே கூறின அதே அக்கினி ஸ்தம்பத்தில் அவர் இறங்கி வந்தார். ஓ, இந்தக் கடைசி நாட்களில் நமது மத்தியில் அதே அக்கினி ஸ்தம்பம் காணப்பட்டு அதே வார்த்தையைப் பேசுவது என்பது அது அது மாத்திரமல்ல, அதை வெளிப்படுத்துவனால் அதை வியாக்கியானப்படுத்தி, அது சத்தியம் என்று நிரூபிப்பது. எனவே அதை அவிசுவாசிக்க ஜனங்களுக்கு எந்த வழியும் இல்லை - அவர்கள் வேண்டுமென்று மனப்பூர்வமாய் அப்படி செய்தாலோழிய, ''சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு ஒருவன் மனப்பூர்வமாய் பாவஞ்செய்தால், பாவங்களின் நிமித்தம் செலுத்தக்க வேறொரு பலி இனியில்லை“ (எபி 10:26). 151கவனியுங்கள், வேதாகமத்தை எழுதின மோசேக்கு, பவுலுக்கு அனுப்பப்பட்ட அதே அக்கினி ஸ்தம்பம், வேதாகமத்திலுள்ளவைகளை வெளிப்படுத்த இப்பொழுது அனுப்பப்பட்டுள்ளது. தேவனுடைய கிருபை, என்றென்றும் மாறாத தேவன், ''இதோ சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' என்று மத்தேயு 28ல் கூறப்பட்ட வாக்குத்தத்தத்தையும், “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று யோவான் 14:12ல் கூறப்பட்டதையும் ''கடைசி நாட்களில் மனுஷகுமாரன் வெளிப்படுவார்'' என்று லூக்கா 17:28-29ல் கூறப்பட்டதையும், பாருங்கள், பாருங்கள், ''இதோ, நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புகிறேன். அவன் ஜனங்களுடைய விசுவாசத்தை மூல வார்த்தைக்குத் திருப்புவான்” என்று மல்கியா 4ல் கூறப்பட்டதையும் நிறைவேற்றினார். பார்த்தீர்களா? பாருங்கள்? எப்படி இந்த... பாருங்கள்? ஓ, என்னே! 152அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவதற்காக மரித்தார். இப்பொழுது அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நாம் மரிப்போமாக. அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நாம் பாரம்பரியங்களுக்கும், அப்படிப்பட்ட காரியங்களுக்கும் மரிப்போம். அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நாம் ஸ்தாபனங்களுக்கு மரித்தவர்களாயிருப்போம். 153கவனியுங்கள், முன்பிருந்த தேவாலயத்திற்குள் ஷெகினா மகிமை இருந்தது. இந்த ஷெகினா வெளிச்சம் வார்த்தையின் மேல் தங்கியிருந்தது. வார்த்தை என்பது வித்து, அது சமுகத்தப்பத்தை விசுவாசிகளுக்கு மாத்திரமே அளித்தது. இரத்தம் உடன் படிக்கையின் மேலும் இருந்தது. இரத்தம் என்பது தண்ணீர். அது வார்த்தையாகிய தானியத்தை, கோதுமையை, வித்தை உயிர்பெறச் செய்யும் தண்ணீர். ''சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல'' என்று இயேசு கூறினார் (யோவான் 3:14) அவர் மேலும், ''தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளினார்'' என்றார். (யோவான் 3:16) மோசே அழிந்து கொண்டிருந்த ஜனங்களைக் காப்பாற்றி அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க வனாந்தரத்தில் கன்மலையை அடித்தான். அவ்வாறே அழிந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்காக தேவன் இயேசுவை அடித்து அவரிடமிருந்து ஆவியை வெளியே கொண்டு வந்தார். இரத்தம் அவரிடமிருந்து புறப்பட்டு வந்தது. அது “வசனம் என்னும் திருமுழுக்கினால் சுத்திகரிக்கும் தண்ணீர்'' (தண்ணீர் வித்துக்கு ஜீவனைக் கொண்டு வருகிறது). அது ஷெகினா மகிமையைக் கொண்டு வந்து, வார்த்தையின் மேல் பிரகாசிக்கச் செய்து, சமுகத்தப்பத்தைக் கொண்டு வந்தது. சமுகத்தப்பம் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுக்கு மாத்திரமே அது சரியா? 154இப்பொழுது திரைக்குள், திரையின் வழியாக அவருடைய சமுகத்தில் பிரவேசித்தல். அங்கு தான் வார்த்தை உள்ளது (கோட்பாடு அல்ல), வார்த்தை ஷெகினா, மகிமையை நோக்கின வண்ணமாய் இருக்கிறது ஷெகினா வல்லமை, பரிசுத்த ஆவி வார்த்தையின் மேல் பிரகாசித்து வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுதல் என்பது நீங்கள் திரைக்குப் பின்னால் உள்ளதைக் காண்பிக்கிறது. ஆமென். நான் கிழிக்கப்பட்ட திரைகளைக் கடந்து விட்டேன் அங்கு மகிமை ஒருக்காலும் ஒழியாது, அல்லேலூயா அல்லேலூயா; நான் ராஜாவின் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் கிழிக்கப்பட்ட திரைகளைக் கடந்து விட்டேன் அங்கு மகிமை ஒருக்காலும் ஒழியாது, நான் ராஜாவின் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 155பழைய தகசுத் தோல், ஸ்தாபனங்கள், கிழிக்கப்பட்டு விட்டது. நான் அதன் வழியாகக் கடந்து சென்று ஷெகினா மகிமைக்குள் பிரவேசித்து விட்டேன். அங்கு நான் வார்த்தையைக் காண்கிறேன். அங்கு அக்கினி ஸ்தம்பம் அசைவதைக் காண்கிறேன். அங்கு வார்த்தை வெளிப்படுவதைக் காண்கிறேன். இந்தக் கடைசி நாட்களில் அவர் என்ன செய்யப் போவதாக வாக்களித்துள்ளாரோ, அது வளர்ந்து வருகிறதைக் காண்கிறேன். அந்த வார்த்தை முதிர்வடைந்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற சமுகத்தப்பத்தை, அதை விசுவாசிக்கும் பிள்ளைகள் புசிப்பதைக் காண்கிறேன். ஆமென்! நாம் எவ்வளவு அருமையான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பாருங்கள், ஷெகினா மகிமை வார்த்தையின் மேல் தங்கியிருந்தது. அதற்கு கீழே அப்பம் இருந்தது. அங்கு இரத்தம் தெளிக்கப்பட்டிருந்து, அது அதற்கு தண்ணீர் அளிக்கிறது. ஆவி வார்த்தைக்கு ஜீவனை அளிக்கிறது... (எத்தனை பேர் 'வழக்கு விசாரணை' என்னும் ஒலிநாடாவைக் கேட்டிருக்கிறீர்கள்? ஆம் உங்களில் பலர் கேட்டிருக்கிறீர்கள்). அங்கு பார்ப்பீர்களானால், அது அந்த வார்த்தை வளர வேண்டும். அது வளர வேண்டுமென்றால், அது சரியான நிலத்தில் இருக்க வேண்டும். பாருங்கள்? தேவன் வாக்குத்தத்தம் ஒன்றை செய்யும் போது, அது அந்த இருதயத்தை தாக்குகிறது, ஒரு ஒருக்காலும் தவறாது. 156நோவா நூற்றிருபது ஆண்டுகள் காத்திருந்தான். ஆபிரகாம் குழந்தைக்காக இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தான். தேவன் அவ்வாறு உரைத்தார், அத்துடன் அது முடிவு பெற்று விட்டது. பாருங்கள்? தண்ணீர் பாய்ச்சப்பட்டது, அங்கு வார்த்தை விசுவாசத்தினால் தண்ணீர் பாய்ச்சப்பட்டு, அதை விசுவாசித்தல் பலனையளித்தது. அது குமாரனைத் தோன்றச் செய்தது, அது மழையைச் தோன்றச் செய்தது. அது வெள்ளத்தை தோன்றச் செய்தது; அது ஒரு கன்னிகை கர்ப்பவதியாகும்படி செய்தது. ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்“ என்று தீர்க்கதரிசி உரைத்தான். ஒவ்வொரு இளம் பெண்ணும் சென்று குழந்தைக்கு வேண்டிய துணிகளை ஆயத்தம் செய்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஏசாயா தீர்க்கதரிசி, அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. கர்த்தர், ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள். அவர்களுக்கு நான் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளத்தை, ஒரு மகத்தான அடையாளத்தை, அளிக்கப் போகிறேன். ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றார். 157அந்த ஜனங்கள் எல்லோரும், அந்த விசுவாசிகள், உங்களைப் போன்றவர்கள், தீர்க்கதரிசி உரைப்பதைக் கேட்டு, ஒவ்வொரு இளம் பெண்ணும்... ஒவ்வொரு மனிதனும், ''அது என் குமாரத்தி தான். ஆம், ஐயா“ என்று சொல்லியிருப்பான். எல்லோருமே சென்று குழந்தைக்கு வேண்டிய காலுறைகள், மற்றவைகளை வாங்கி ஆயத்தம் செய்திருப்பார்கள். ஏனெனில் அது நிறைவேறும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், அந்த சந்ததி கடந்து சென்றது. அவர்கள், ''அந்த அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட தீர்க்கதரிசி, தேவனால் உறுதிப்படுத்தப்பட்டவன், எப்படி தவறுரைக்க முடியும்? அது நடந்தே தீரும்'' என்று எண்ணினர். எண்ணூறு ஆண்டுகள் கழித்து, ஒரு கன்னிகை ஒரு குமாரனைப் பெற்றான். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை'' 158''கடைசி நாட்களில் இவை நடக்கும் என்று தேவன் உரைத்திருக்கிறார்.“ பாருங்கள், நாம் அந்த நாளுக்கு வந்திருக்கிறோம். வார்த்தையின் மேல் வெளிச்சம். சூரிய வெளிச்சம் கோதுமை மணியை மகிமையின் மேல் மகிமையடையச் செய்வது போல், நாமும் கூட அவருடைய சமுகத்தில் வாழும்போது, அதிகமாக அவரைப் போலாகி, அவரோடு சஞ்சரிக்கும் போது, அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட சாயலுக்கு ஒத்த சாயலைப் பெறுகிறோம். சூரியன் என்ன செய்கிறதென்று கவனியுங்கள். நீங்கள் ஒரு விதையை விதைக்கும்போது என்ன நடக்கிறது? அந்த விதை அழுகிப் போகின்றது. அந்த விதைக்கும் ஜீவன் உள்ளது. அந்த ஜீவன் புறப்பட்டுச் சென்று தண்டை தோன்றச் செய்கிறது. அந்த தண்டு காண்பதற்கு முதலில் இருந்தது போல் இல்லை. அதுதான் லூத்தர், தண்டு சரி, தண்டு வளர்ந்து கொண்டே வந்து பட்டுக் குஞ்சத்தை தோன்றச் செய்தது. பாருங்கள், அதுதான் வெஸ்லியின் எழுப்புதல், அது மற்றதைப் போல் இல்லை. அதன்பிறகு பெந்தெகொஸ்தே எழுப்புதல் தோன்றி, பாருங்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு வந்தது. சரி, என்ன நடந்தது? நமக்கு கதிரில் காளான் (fungus) உண்டானது. இந்தக் காரியம், அந்தக் காரியம் தவறாகக் காணப்பட்டது. அது வார்த்தையைப் போல் காணப்படவில்லை, அது மற்றதை போல் இல்லை. அது உள்ளே சென்ற மூல தானியத்தை போல் இருக்கவில்லை. 159இருப்பினும் அதை அவ்வாறு உண்டாக்க தேவன் இன்னமும் அங்குள்ளார். கவனியுங்கள், அது என்ன செய்கிறது? அது முடிவில் மூல வித்துக்கே திரும்ப வருகிறது. அவர் மார்டின் லூத்தர் உருவில் வந்தபோது, அவர் பெந்தெகொஸ்தே உருவில் வந்தபோது, அவர் மறுபடியுமாக உள்ளே சென்ற வித்தைப் போல - மனுஷகுமாரனாக தம்மை வெளிப்படுத்த வேண்டியராயிருக்கிறார். அவர் தண்டு காலம் போன்ற காலங்களில் தம்மை தேவனுடைய குமாரனாக வெளிப்படுத்தினார். ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தம்மை மறுபடியுமாக மனுஷ குமாரனாக வெளிப்படுத்த வேண்டும் விளங்குகிறதா? சரி, தொடக்கத்தைப் போன்றே, உருவாக்கப்படுதல். 160அந்த தண்டு எதை வளரச் செய்கிறது? அது வளர்ந்து கொண்டே வருகிறது. அந்த சிறு தண்டு வளர்ந்து வருகிறது. இருப்பினும் அது மூல தானியத்தைப் போல் இல்லை. அவ்வாறே லூத்தரின் செய்தியும் இருக்கவில்லை. இல்லை. மற்ற செய்திகளும் அதனுடன் வந்தன - ஃபின்னி, சாங்கி, நாக்ஸ், கால்வின், இப்படி வழிவழியாக. ஆனால் அவை ஒன்றுகூட அவ்வாறு இருக்கவில்லை. அவையனைத்தும் செய்தியே. ஆனால் என்ன வெனில், அவர்களுக்கு முழுவெளிப்பாடும் கிடைக்கப் பெறவில்லை. ஏனெனில்; அது அதற்கான நேரம் அல்ல. நீங்கள் நேரம் வருவதற்கு முன்பு கதிரில் தானியத்தை தோன்றச் செய்ய முடியாது. பாருங்கள்? முடிவில் நிலத்திற்குள் சென்ற மூலவித்து திரும்ப வருகிறது. 161பாருங்கள், தேவன் இயற்கையை அப்படியே பின்பற்றுகிறார். பாருங்கள், அவர் ஆட்டுக்குட்டியாகப் பிறந்தார், ஆகையால்தான் அவர் வெளியே தொழுவத்தில் பிறந்தார். ஆட்டுக் குட்டிகள் படுக்கையில் பிறப்பது கிடையாது. பாருங்கள். அவர் கல்வாரிக்கு கொண்டு போகப்பட்டார். செம்மறியாடுகள் கொண்டு போகப்பட வேண்டும். அது உண்மை. கொல்லப்படுவதற்காக வெள்ளாடுகள் அவைகளை கொல்லும் இடத்திற்கு கொண்டு செல்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஒரு வெள்ளாடு அவைகளை கொண்டு செல்கிறது, அவை கொண்டு போகப்பட வேண்டும். அது உண்மை. அவர் செம்மறியாடாய் இருந்தபடியால், பாருங்கள், அவர் கொல்லப்படுவதற்கு கொண்டு போகப்பட்டார். இயற்கையில் உள்ள எல்லாமே அவரை அடையாளம் காண்பித்தன. ஆகையால்தான் அவர் மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் பிறந்தார், டிசம்பர் மாதத்தில் அல்ல. அவர் டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது, ஏனெனில் அந்த மாதத்தில் அங்கு இருபது அடி உயரத்துக்கு பனி உண்டாயிருக்கும். அவர் சூரிய பகவான் (sun god) அல்ல, அவர் தேவனுடைய குமாரன் (Son of God) பாருங்கள்? சூரியன் மகரரேகையைக் கடக்கும் போது டிசம்பர் 25ம் தேதியன்று ரோமர்கள் சூரிய பகவானின் பிறந்த நாள் என்று அழைத்து, அதை பின்னர் தேவகுமாரனின் பிறந்த நாளாகச் செய்து விட்டார்கள். இல்லை, இல்லை, அவர் தேவனுடைய குமாரன். அவருடைய பிறந்த நாள் இயற்கையுடன் இணைகிறது. முற்றிலுமாக. நாம் தொடர்ந்து செல்லும்போது, மறுபடியுமாக இதைக் கவனியுங்கள். நமக்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. 162இப்பொழுது பரிபூரணத்துக்கு, தண்டு உண்டான பிறகு, பட்டுக் குஞ்சம் உண்டான பிறகு தானியமானது உமியின் நிலையை அடைந்து, அதன்பிறகு பரிபூரணமடைந்து, சரியான தானியாக ஆகின்றது. ஞாபகம் கொள்ளுங்கள், தானியம் ஜீவனைப் பெறவேண்டும். பாருங்கள்? இல்லையென்றால் அது ஜீவிக்க முடியாது. பாருங்கள்? இந்த செய்திகளுக்கு வெளியே இருந்த எதுவும் ஜீவனைப் பெறமுடியாது. அது அதில் ஜீவனைப் பெறவேண்டும். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், தண்டில் இருந்த அதே ஜீவன்தான் தானியத்தில் உள்ளது. அது முதிர்வடைந்து மறுபடியும் அந்த நிலையை அடைகிறது. பாருங்கள்? அவர் தம்மை யாராக வெளிப்படுத்தினார்? மனுஷகுமாரனாக, நிலத்திற்குள் சென்ற தானியமாக. செய்தி விளங்குகிறதா? கிரேக்கர், ''நாங்கள் இயேசுவைக்காண விரும்புகிறோம்.'' என்றனர். அவர், ''கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்“ என்றார். பாருங்கள்? சரி. 163அடுத்தபடியாக அவர் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தினார். வேறு உருவில், தண்டு, பட்டுக்குஞ்சம், இலைகள் போன்றவை. அதன் பிறகு அவர் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தினார்? அதே ஆவி, ஆனால் வேறு உருவில். பாருங்கள்? ஆனால் அந்த தானியத்தின் கடைசி கட்டம் என்ன? அது மூல தானியத்துக்கு திரும்ப வருகிறது. அது சரியா? அவருடைய ஊழியம் சீர்த்திருத்தங்களிலிருந்து மூல வார்த்தைக்கு மறுபடியும் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. அவர் ஜனங்களின் விசுவாசத்தை மூல தானியத்துக்கு திருப்பப் போவதாக மல்கியா 4ல் வாக்களித்துள்ளார். நிலத்திற்குள் சென்றது எதுவோ, அதுவே இங்குள்ளது. தானியம் இது வழியாக மேலே வந்தது. அது தேவனுடைய குமாரனாக மேலே வந்து, இங்கு மனுஷகுமாரனாக தன்னை வெளிப்படுத்தி, பிறகு சிங்காசனத்தின் மேலும் தாவீதின் குமாரனாக தன்னை வெளிப்படுத்துகிறது. பாருங்கள்? அந்த மூன்று குமாரர்கள், முற்றிலுமாக. ஓ, என்னே, மறுபடியுமாக மூல தானியத்தைப் போல்! 164இப்பொழுது, அவருடைய பரிபூரண ஊழியம், ஏதோ ஒரு மனிதன் அல்ல, ஏதோ ஸ்தாபனம் அல்ல (அந்த காலத்தில் அவர்கள் செய்து கொண்டு வந்தது போல), ஆனால் அவரே வெளிப்படுபவராய், தம்மை வெளிப்படுத்தி லூக்கா 17:28, மல்கியா 4, எபி. 13:8 போன்ற வாக்குத்தத்தங்கள் உண்மையென காண்பிக்கிறார். அப்படி அவர் செய்யும் நேரம் எந்த நேரமாக இருக்கவேண்டும்? ஆபிரகாமின் ராஜரீக சந்ததி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியிருக்கும் நேரம். எல்லா முன்னடையாளங்களும் நிறைவேற வேண்டியதாயுள்ளது. அழிவுக்கு முன்பு தேவனே மானிட உருவில் ஆபிரகாமின் மாம்ச சந்ததிக்கு தரிசனமானார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் திரும்ப வருவதற்கு முன்பு இதே காரியம் இந்த ராஜரீக சந்ததிக்கு சம்பவிக்கும் என்று இயேசு கூறியுள்ளார். 165மகிமையை மறைத்த அந்த பழைய திரையைக் கவனியுங்கள். அந்த பழைய தகசுத் தோல்களில், விரும்பத்தக்க அழகு எதுவும் இருக்கவில்லை. அவருடைய மாம்ச சரீரம் அதே போல் இருந்தது. ஆகையால் தான் ஜனங்கள் அவரைப் பார்த்து, ''தோள் தொங்கின இவனா?'' என்றனர். ஒருக்கால் முப்பது வயது, தலை நரைத்து, தாடி நரைத்து, காண்பதற்கு கம்பீரமான தோற்றம் எதுவும் இல்லை. “நாம் அவரை விரும்பத்தக்க அழகு அவருக்கு இல்லாதிருந்தது'' என்று வேதம் கூறுகிறது (ஏசா.53:2). அவர் காண்பதற்கு ராஜாவைப் போல் இல்லை - அந்த பழைய தகசுத் தோல். ஆனால், ஓ, உள்ளே என்ன இருந்தது! 'உருளும் பரிசுத்தரின் சிறுகூட்டம்' இப்படிப்பட்ட உஷ்ணமான கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் அழைக்கின்றனர். விரும்பத்தக்க அழகு இவர்களுக்கு இல்லை. ஆனால் உள்ளே இருப்பதோ அது அநேக இருதயங்களுக்கு திரைமறைக்கப்பட்டுள்ளது என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன், பாருங்கள். பார்த்தீர்களா? சரி, 166வெளிப்புறம் ஒன்றுமில்லை, ஆனால் எல்லாமே உள்ளே இருந்தது. ஒருமுறை நீங்கள் உள்ளே பிரவேசித்துவிட்டால் அதை காண்பீர்கள். அதற்குள் நீங்கள் எப்படி பிரவேசிப்பீர்கள்? கைகளைக் குலுக்குவதன் மூலமோ, அல்லது சேர்ந்து கொள்வதன் மூலமோ? இல்லை, அதற்குள் பிறக்க வேண்டும். மரித்து, உங்கள் பழைய தகசுத் தோலை, உங்கள் பழைய மனுஷனைக் களைந்து போட்டு, பாருங்கள். புதிதான ஒன்றுக்குள் நுழைந்து கொள்வது. பாருங்கள்? பழைய தகசுத் தோலைப் புறக்கணிப்பது. ஷெகினா வெளிச்சம் செய்வதில்லை.... கேளுங்கள், போதகர்களே! போதகர்களே, இதை நீங்கள் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒருமுறை உள்ளே பிரவேசித்து விட்டால்.... இதை நீங்கள் நிச்சயம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நல்ல முறையில் விவரிக்கப் போகின்றேன். ஒருமுறை திரைக்குள் பிரவேசித்து, ஷெகினா மகிமையின் கீழ் வந்துவிட்டால், ஷெகினா மகிமை வார்த்தையை எடுத்து இயேசுவை குறி சொல்பவராக வெளிப்படுத்தாது - இன்றைக்கு ஸ்தாபனங்கள் செய்வது போல், “மனோதத்துவத்தினால் மனதிலுள்ளதை அறிந்து கொள்ளுதல், உருளும் பரித்தர், பெயல்செபூல்” என்று. ஷெகினா மகிமை அவரை அப்படி வெளிப்படுத்தாது. ஷெகினா மகிமை அந்த நேரத்துக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாகிய வித்தை முதிர்வடையச்செய்து, அவர் இன்னமும் பள்ளத்தாக்கின் லீலிப் புஷ்பமாக இருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. அது அந்த வித்தை கொண்டுவந்து, அவரை பள்ளத்தாக்கின் லீலிப்புஷ்பமாக, ஜீவ அப்பமாக, அல்பாவும் ஓமெகாவும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகக் காண்பிக்கிறது. அவர் விசுவாசியின் பங்காயிருக்கிறார். ஷெகினா மகிமை அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக விசுவாசிக்கு வெளிப்படுத்தித் தருகிறது. 167“அந்த நாட்களில்... அவர் கடந்துவிட்டார், அவர் மரித்து விட்டார், எல்லாம் முடிந்துவிட்டது'' என்றல்ல. நண்பனே, உன் நம்பிக்கை அதுவானால், நீ அவ்வாறு நம்பினால், நீ ஷெகினா மகிமையை சந்திக்கவேயில்லை. ஷெகினா மகிமை அவரை எப்படி மூன்று ஆட்களாக வெளிப்படுத்தும்? பாருங்கள்? எவருமே வேதத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாதிருக்கையில், அம்முறையில் ஞானஸ்நானம் கொடுப்பது சரியென்று ஷெகினா மகிமை எப்படி வெளிப்படுத்தும்? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்க, ஷெகினா மகிமை அவரை ஒரு அப்போஸ்தலனின் நிலைக்கு மாத்திரம் எப்படி குறைக்க முடியும்? பாருங்கள், ஷெகினா மகிமை வாக்குத்தத்தத்தின் வார்த்தையை கொண்டு வருபவரை உங்களுக்கு வெளிப்படுத்தித் தருகிறது. ஆகையால் தான் அவர் மோசேயின் முகத்தை முக்காடிட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவனுக்குள் வார்த்தை இருந்தது. அவர் இயேசு என்னும் தாழ்மையுள்ள சிறு மனிதரில் தம்மை திரைமறைத்து, அவர்கள் யேகோவாவைக் காணக்கூடாதபடிக்குச் செய்தார். இன்றைக்கு அவர் ஷெகினாவுடன் தம்மை மண்பாண்டங்களில் திரைமறைத்துக் கொண்டிருக்கிறார். வெளிப்புறம் ஒரு கூட்டம் உருளும் பரிசுத்தராகக் காணப்படுகிறது- பழைய தகசுத் தோல்கள். ஆனால் உள்ளே அது ஷெகினா மகிமையை மறைத்துக் கொண்டு அது நாம் விருந்துண்டு கொண்டிருக்கிற சமுகத்தப்பத்தை முதிர்வடையச் செய்கிறது. இந்த ஆகாரத்தைப் பெறுவதற்காக நாட்டின் வழியாக நூற்றுக்கணக்கான மைல்கள் நாம் பிரயாணம் செய்கிறோம். அது விசுவாசியின் ஆகாரம். அது விசுவாசிக்கு மாத்திரமே. ஞாபகம் கொள்ளுங்கள். சமுகத்தப்பம் விசுவாசிக்கு மாத்திரமே, பாருங்கள், சமுகத்தப்ப வித்து. கவனியுங்கள், அது என்ன செய்கிறது? சமுகத்தப்பத்தின் மேலிருந்த ஷெகினா மகிமை அதை கெடாமல் பாதுகாத்தது. 168ஞாபகம் கொள்ளுங்கள், வானத்திலிருந்து வந்த மன்னா ஷெகினா மகிமையின் கீழ், ஒரு சந்ததியிலிருந்து மறு சந்ததி வரைக்கும் கெடாமலிருந்தது. ஆனால் வெளியே, ஒரே இரவில் அது புழுத்து கெட்டு போனது. அது சரியா? ஷெகினா மகிமைக்கு வெளியே, ''அற்புதங்களின் காலம் கடந்துவிட்டது. பாருங்கள், அதெல்லாம் மூடபக்தி வைராக்கியம்.'' ஆனால் உள்ளே ... 169கவனியுங்கள், ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோசேப்பின் நாட்களில் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி விதையை அவர்கள் கொண்டு வந்தனர். யோசேப்பு அதை களஞ்சியத்தில் வைத்திருந்தான். அவர்கள் அதை விதைத்த போது, அது முளைத்தது. ஏன்? அதற்கு ஜீவன் இருந்தது. 170இன்றைக்கு ஷெகினா மகிமை நீங்கள் திரைக்கு பின்னால் சென்று உங்களுக்கு முன்னால் தேவன் நின்று கொண்டிருப்பதையல்லவா காண்பிக்கிறது? நமக்கு முன்னால் தேவன் நின்று கொண்டிருப்பதை காணச் செய்கிறதல்லவா? அக்கினி ஸ்தம்பம், அவர் மாம்ச சரீரத்தில் திரை மறைக்கப்பட்டிருக்கிறார். அது என்ன...? அது என்ன செய்தது? இந்நாளில் நாம் வாழ வேண்டிய இந்த வாக்குத்தத்தங்களாகிய வார்த்தை என்னும் சமுகத்தப்ப வித்தை ஷெகினா மகிமை முதிர்வடையச் செய்து அவைகளை நிறைவேற்றி பல ஆண்டுகளாக வேதாகமத்தில் இருந்த இக்காலத்துக்கான வார்த்தையை அப்பமாகச் செய்து அளிக்கிறது. ஆனால் ஸ்தாபனங்களுக்கோ அது இடறுதற்கேதுவான கல்லாய் உள்ளது. ஸ்தாபனங்கள் அதைக் கண்டு இடறி விழுகின்றன. காலங்கள் தோறும் - லூத்தர், வெஸ்லி, மார்டின் லூத்தரும் மற்றவர்களும், சாங்கி, ஃபின்னி, ஜான் ஸ்மித், நாக்ஸ் ஆகியோரின் காலங்களில் - அனைவரும் இடறி விழுந்தனர். 171ஆனால் கடைசி நாட்களில் என்ன செய்யப்பட வேண்டும்? அது வெளிப்பட வேண்டும்? அது கொண்டு வரப்படவேண்டும். மல்கியா என்ன செய்ய வேண்டும்? அந்த இடறல் கல்லிலிருந்து ஜனங்களைத் திருப்பி, பாரம்பரியங்களை உடைத்துப் போட்டு, ஷெகினா மகிமையுடன் கூடிய அப்பத்தை வெளிப்படுத்துவதே. அது முதிர்வடைந்து, அது எதை தோன்றச் செய்யும் என்று உரைத்துள்ளதோ அதையே தோன்றச் செய்வதை (ஓ, என்னே!) கவனியுங்கள் - கவனியுங்கள் - இக்காலத்துக்கான சமுகத்தப்பத்தை ஸ்தாபனங்களுக்கு அது இடறல் கல், ''மூடபக்தி வைராக்கிய கூட்டம். ஆனால் அவரை விசுவாசிக்கும் நாமோ... 172வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம் வாக்களித்துள்ளது போன்று, ''ஆண்டுகளாக வேதாகமப் பக்கங்களில் மறைந்திருந்த தேவனுடைய இரகசியங்கள் அனைத்தும் முதிர்வடைந்து, ஏழாம் தூதனின் செய்தியின் காலத்தில் வெளியே கொண்டு வரப்படும்.'' அது சரியா? அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன கூறினார்? “டூசானுக்கு போ. டூசானுக்கு வடக்கில் இரு. ஒரு பெரிய வெடி சத்தம் உண்டாகும்'' என்றும், என்ன நடக்குமென்றும், முத்திரைகள் திறக்கப்படும் என்றும் - இவைகளை வெளிப்படுத்தின முத்திரைகள். அவர் உரைத்தபடியே நடந்து திரும்ப வந்தேன். அது என்ன? அது மனிதனாயிருக்க முடியாது என்பதை காண்பிக்கிறது. அது ஒவ்வொரு முறையும் இலக்கை நேராக சென்று அடிக்கிறது. அது என்ன? அது நமக்கு முன்னால், பாருங்கள், தேவனுடைய கரம். அது மாம்ச சரீரத்தில் திரையிடப்பட்டு ஒரு சிறு கூட்டத்தில் காணப்படுவதால், அது வெளிப்புற உலகிற்கு திரைமறைக்கப்பட்டுள்ளது. அவர் வெளிப்புற உலகிற்கு மறைக்கப்பட்டு, கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? 173ஒவ்வொரு..... பாருங்கள், வேதத்திலுள்ள ஒவ்வொரு உவமையும், வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு முன்னடையாளமும் நமக்கு முன்னால் இங்கு வெளிப்படையாகிவிட்டது. வேதத்தை எழுதின - பழைய வேதாகமத்தையும் புதிய வேதாகமத்தையும் எழுதின - அதே தேவன் (அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தவர்) இங்கு இருந்து கொண்டு அதை வெளிப்படுத்திக் கொடுத்து, அது என்னவென்பதைக் காண்பித்து, அதற்கு வியாக்கியானம் உரைத்து, அது சரியான வியாக்கியானம் என்பதை உறுதிப்படுத்துகிறார். எங்களிடம் அதற்கான வியாக்கியானம் உள்ளது அப்படியானால், அது நடப்பதை நாங்கள் காணட்டும். பாருங்கள், அதுதான், அது வெளியரங்கமாவதை நாங்கள் காணட்டும். வெளியரங்கமாதல்! இயேசு, ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்றார் (யோவான் 10:35). பாருங்கள், அது நிரூபிக்கப்பட வேண்டும். அவர்கள் இயேசுவை நிரூபிக்கச் சொன்னது போல் இல்லை இது. அவர்கள் ஒரு கந்தை துணியை அவர் தலையைச் சுற்றிக் கட்டி, அவரைத் தலையில் அடித்து, ''நீ தீர்க்கதரிசியானால், உன்னை அடித்தது யார் என்று சொல்'' என்றார்கள். ''நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லை அப்பமாக மாற்றும்...'' பாருங்கள், அது பிசாசு. ''நீ தேவனுடைய குமாரனேயானால், சிலுவையை விட்டு இறங்கி வா.'' 174அவர் செய்ய வேண்டியதைக் குறித்து அவருக்கு கிடைக்கப் பெறும் வெளிப்பாட்டையே நான் கூறுகிறேன். அதுதான் அது. வெளிப்படுத்தல் 10 வெளிப்படும்போது, ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம் வாக்களித்தபடியே, தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. வார்த்தையாகிய அவர் பேரில் உங்கள் விசுவாசம் நிலைத்திருக்கட்டும். ஏனெனில் வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம் என்ன கூறுகிறதென்றால் இல்லை, வெளிப்படுத்தல் 19ம் அதிகாரம் நான் அதனுடன் இணைந்து 10ம் அதிகாரம் என்று எழுதி வைத்திருந்தேன். அது 10ம் அதிகாரம் அல்ல, 19ம் அதிகாரம். அவர் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வரும்போது ''தேவனுடைய வார்த்தை'' என்று அழைக்கப்படுவார். பரலோகத்தின் சேனைகள் அவருக்குப் பின் செல்வார்கள். கல்வி என்னும் ஸ்தாபனத்திரையை உடைத்தெறியுங்கள்! பாரம்பரியம் என்னும் ஸ்தாபனத் திரையை உடைத்தெறியுங்கள்! அவரை உங்களிடமிருந்து மறைக்கும் திரைகளை உடைத்தெறியுங்கள்! ஸ்திரீகளே பெருமை என்பது போன்ற திரைகளை உடைத்தெறியுங்கள். நீங்கள் ராஜாவின் குமாரத்திகள். அதைப் போல் நடந்து கொள்ளுங்கள், அதைப் போல் வாழுங்கள். ஒவ்வொரு திரையையும் உடைத்தெறியுங்கள்! பி.எச்.டி., எல்.எல்.டி. பட்டங்கள் வாங்கினவர் என்ன கூறினாலும், அது வேதத்துக்கு முரணாயிருக்குமானால், அந்த திரையை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லுங்கள், ஏனெனில் நாம் கிழிக்கப்பட்ட திரையை கடந்து சென்றுவிட்டோம். இப்பொழுது நாம் திரைக்கு மறுபுறத்தில் இருக்கிறோம். நீங்கள் மாத்திரம் அப்படி செய்வீர்களானால் - அந்த பழைய பாரம்பரியங்களையும் மற்றவைகளையும் உடைத்தெறிந்து அவரிடம் வருவீர்களானால் -அந்த வெற்றி சிறந்த வல்லமையுள்ளவர், இக்காலத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை வெளிப்பட்டு நின்று கொண்டிருப்பதைக் காண்பீர்கள். வல்லமையுள்ள தேவன் திரைநீக்கப்பட்டு நமது மத்தியில் உள்ளதை நீங்கள் காண்பீர்கள் - திரை நீக்கப்பட்ட வல்லமையுள்ள தேவன், பாரம்பரியங்களால் மேற்கொள்ளப்பட முடியாதவர். 175அவரை அங்கு மறைத்து வைக்க முயன்றனர். அவர்கள் அவ்வாறு அநேக ஆண்டுகளாக செய்து வந்தனர். ஆனால் வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டிய நேரம் நெருங்கினபோது, தேவன் ஒரு காலத்தில் மோசேயை எழுப்பினார். அவன் பிள்ளைகளை எல்லாவற்றினின்றும் விடுவித்தான். அவர் இன்னமும்... அவர் மேற்கொள்ளப்பட முடியாதவர். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை'' அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர்கள் ''அப்படி செய்யமுடியாது'' என்றனர். ஆனால் அது செய்து காண்பிக்கப்பட்டது. அது செய்து காண்பிக்கப்பட்ட போது அவர்கள், ''அது பிசாசினால் உண்டானது என்றனர்.'' ஆனால் அது தேவனுடைய வார்த்தையை சிறிதளவும் மாற்றுவதில்லை, அது இன்னும் விசுவாசிக்கு “தேவனாய்'' உள்ளது. வல்லமையாக வெற்றி சிறந்தவர் அவருடைய தன்மையிலும் அவருடைய வார்த்தையிலும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கிறவர். எபி. 13:8. 176இதைக் கூறி முடித்து விடுகிறேன். ஏனெனில் பன்னிரண்டு மணிக்கு ஐந்து நிமிடம் ஆகிவிட்டது, இதைக் கூறி விடுகிறேன். இன்னும் பத்து பன்னிரண்டு பக்கங்கள் உள்ளன. மற்றொரு சமயம் அதை பார்க்கலாம், ஒருக்கால் இன்றிரவு. கவனியுங்கள், இதை கவனியுங்கள். ஒருமுறை ஒரு பழைய வயலின் ஏலத்துக்கு விடப்பட்டது. இதை நீங்கள் பலமுறை கேட்டிருக்கிறீர்கள் - பழைய வயலின். ஏலம் விடுபவன், ''இதற்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?'' என்று கேட்டான். இதை நான் ஒருக்கால் கவிதையின்படி சரியாக கூறாமல் இருக்கலாம், இதை கூறி அநேக ஆண்டுகள் ஆகிவிட்டன, இது என் நினைவுக்கு வந்தது. அவர்கள் அந்த பழைய வயலினைக் கையிலெடுத்துப் பார்த்தார்கள். காண்பதற்கு அது நன்றாக இல்லை, அது அழுக்கு படிந்ததாயிருந்தது. ஏலக்காரனுக்கு விலை கேட்பவர் எவருமேயில்லை. முடிவில் யாரோ ஒருவர் ஒரு டாலருக்கு கேட்டார் என்று நினைக்கிறேன். அப்படி ஏதோ ஒன்று. 177அந்த விலைக்கு அதை விற்கக்கூடாது என்று கருதிய ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் சென்று வயலினைக் கையிலெடுத்து, அதை இசைக்கும் 'வில்லை' (bow) கையிலெடுத்து அதற்கு 'ரோசின்' தேய்த்து, ஒரு ராகத்தை வாசித்தார். அவர் வாசித்த போது, எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட ஒரு இன்னிசையை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கேட்டதேயில்லை. ஏலம் விடுபவன், “இப்பொழுது என்ன விலை தருகிறீர்கள்” என்று கேட்டான். “இரண்டாயிரம்'', ”ஐயாயிரம்'', ''பத்தாயிரம்.'' பாருங்கள்? அது என்ன? நிபுணனின் கை அந்த பழைய வாத்தியத்தில் என்ன மறைந்திருந்தது என்பதை வெளிப்படுத்தினது. இப்பொழுதும் அப்படியே! பழைய புஸ்தகம், அது கிழிக்கப்பட்டு, நகைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு வந்தது. அவர்களுடைய ஸ்தாபன ஏலத்திற்கு நேரம் வந்துவிட்டது, உலக சபைகளின் ஆலோசனை சங்கம். அவர்கள் எவ்வித கவலையுமின்றி அதை விற்றுக் கொண்டிருக்கின்றனர் ஸ்தாபன ஏலம் ஒன்று வருகிறது. 178ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அந்த பழைய புஸ்தகத்திலுள்ள ஒன்று, ஒரு நாளில் ஒரு முன் குறிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட கரம் ஒன்று வந்து அதை கையிலெடுத்து, இந்த புஸ்தகத்திலுள்ள வார்த்தையை விவரித்து (முன்குறிக்கப்பட்ட இருதயத்துக்கு, அது உண்டாக்கப்பட்ட பணிக்கு), அதிலுள்ள வாக்குத்தத்தங்களை வெளிப்படுத்தும் என்று வாக்களித்துள்ளது. அது ஒருக்கால், ஓ, பழைய உருளும் பரிசுத்தரின் கூட்டமாக அல்லது அப்படி ஏதோ ஒன்றாக காணப்படும். ஆனால் அந்த வார்த்தையை வெளிப்படுத்த நிபுணரின் கை அவசியமாயுள்ளது. அப்பொழுது அது உருளும் பரிசுத்தரை விட மேலானதாகி விடும். அப்படித்தான் அது நம் ஒவ்வொருவருக்கும் ஆகியுள்ளது, இல்லையா நண்பர்களே? அது மூடபக்தி வைராக்கியத்தின் தொகுப்பு அல்ல. அது யார் கையில் இசைக்கும் வில் உள்ளது என்பதை பொறுத்தது. ஜெபம் செய்வோம். 179எங்கள் பரலோகப் பிதாவே, விசுவாசத்தின் மூலம் நான் அந்த பழைய புஸ்தகத்தின் நிபுணரைக் காண்கிறேன். அவர்கள் அதை பாரம்பரியங்களுக்காகவும், ஸ்தாபனங்களுக்காகவும் பண்டமாற்றம் செய்து, அதை விற்றுப்போட்டார்கள். இப்பொழுது அவர்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட உலக சபை ஆலோசனை சங்கத்திற்காகவும், கம்யூனிஸக் கொள்கைக்காகவும், நாத்திகத்துக்காகவும் அதை விற்றுப்போடப் பார்க்கிறார்கள். கர்த்தாவே, ஏலம் நடந்து கொண்டிருக்கிறது. தேவனே, அடியெடுத்து வைத்து முன் வாரும்! நிச்சயம் நீர் வருவீர். இசைக்கும் வில்லைக் கையிலெடுத்து, இந்த வார்த்தையை கையிலெடுத்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபிக்கும் தீர்க்கதரிசியை எங்களுக்கு அனுப்புவீராக. கர்த்தாவே, அநேகர் தங்கள் வாழ்க்கையை விற்றுப்போட்டு, தங்கள் பழைய பாரம்பரியங்களை தூர எறிந்து, திரைகளை உடைக்க விரும்புகின்றனர். கர்த்தாவே, அவர்களுக்கு அதுவேண்டும். அவர்கள் எதையும் கொடுக்க ஆயத்தமாயுள்ளனர், அவர்களுக்கு இயேசுவை மாத்திரம் தாரும். கர்த்தாவே, அதை நீர் அவர்களுக்கு இப்பொழுது நிரூபித்துவிட்டீர் என்று எண்ணுகிறேன். அவர்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் சம்பாதனையை செலவழித்து, எல்லாவற்றையும் செய்து கூட்டத்துக்கு வர முயல்கின்றனர், அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் விலை மதிக்க முடியாத அந்த முத்தை அவர்கள் கண்டு கொண்டனர். மற்றவை அனைத்தும் மிகச் சிறியவைகளே. பிதாவே, இவர்களை ஆசீர்வதியும். 180கர்த்தாவே, இன்று காலை இந்த பிரசங்க பீடத்தின் மேல் உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒருக்கால் சிலர் இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுவதற்கு முன்பே போக வேண்டியிருக்கும். ஓ, நித்திய தேவனே, கீழே நோக்கிப்பாரும். நீர் இங்கிருக்கிறீர் என்று நானறிவேன். நீர் திரைமறைக்கப்பட்டிருக்கிறீர். கர்த்தாவே, ''உறுமால்கள்“ என்று அழைக்கப்படுகிற இந்த சிறுதிரைகளை, சிறு ''கச்சைகளை'', குழந்தைகளுக்கு சிறு ”காலுறைகளை'' நான் அனுப்புகிறேன். உமது வார்த்தை இன்று காலை இங்கு பிரசங்கிக்கப்பட்டது என்பதற்கு இந்த சிறு திரை அடையாளங்களை அனுப்புகிறேன். ஒரு விசுவாசி என்னும் ரீதியில் நான் விசுவாசிக்கிறேன் என்பதற்கு அறிகுறியாக என் சரீரத்தின் கைகளை அதன் மேல் வைக்கிறேன். கர்த்தாவே, விசுவாசத்தினால் இக்கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு வரும் அவ்வாறே செய்கின்றனர். வியாதியஸ்தர் சுகமடைவார்களாக. 181அந்த வயலின் இசைப்பவர் பழைய வயலினை வாசித்தது போல, கர்த்தாவே, நீர் இங்கிருந்தே வார்த்தையை இசைக்க முடியும். அது சரியான ராகத்தை இசைக்கும்படி செய்யும். நிபுணரின் கையில் வில் இருக்கும்போது, அவர் முழு காட்சியில் நிற்பதை நாங்கள் காண்போம். அந்த நாளிலே அவர்கள் அந்த பழைய வயலினுக்கு ஒன்றுமே கொடுக்க மனதில்லாதபோது, அதை அவர்கள் வேண்டாம் என்ற போது அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள். அவர்களுக்கு அதை வீட்டிற்கு கொண்டு போகப் பிரியமில்லை. ஆனால் கைதேர்ந்த நிபுணர் அதை கையில் எடுத்த மாத்திரத்தில், அதைக்கொள்ள அவர்கள் எல்லாவற்றையும் விற்றனர். யார் அதைக் கொள்ளவேண்டும் என்பதைக்குறித்து அவர்கள் தர்க்கம் செய்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குள் காலதாமதமாகிவிட்டது. 182என்றாவது ஒரு நாள் கர்த்தருடைய எக்காளம் முழங்கி இனி காலம் செல்லாது என்னும் போது அப்படித்தான் இருக்கும். ஆனால் பரியாசம் செய்யப்பட்டவர்கள், திறந்த திரைக்கு முன்னால் நின்றுகொண்டு தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டதைக் கண்டவர்கள். மற்றவர்கள் அதற்காக அலறுவார்கள், ஆனால் நீர் கூறினது போன்று ''அப்பொழுது காலதாமதமாயிருக்கும்'' (அவர்கள் கலியாண விருந்துக்கு சென்றுவிட்டனர். இவர்கள் கைவிடப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். பிதாவே, இன்று காலை ஒவ்வொரு நபரும் விசுவாசிக்க உதவி செய்யும். தன்னயம் என்னும் ஒவ்வொரு திரையையும், அவிசுவாசம் என்னும் ஒவ்வொரு திரையையும் உடைத்தெறிந்து, விசுவாசிகளுக்கு முன்னால் வல்லமையுள்ள வெற்றி சிறந்தவர் திரை நீக்கப்பட்டு அவர்கள் காணும்படி செய்யும். ஏனெனில், “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்.'' கர்த்தாவே, நீர் இதுவரை செய்து வந்தது போல், உம்மை எங்கள் மத்தியில் காண்பித்தருளும். நாங்கள் காணக்கூடிய விதத்தில் உமக்கு முன்னால் இருக்கும் வரைக்கும் அதேவிதமாக நீர் இருந்தருளும் - அந்த என் மார்ஃப் மாறி நீர் மறுபடியும் மனுஷ குமாரன் தாவீதின் குமாரனாக ஆகும் வரைக்கும். கர்த்தாவே, இதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மூலம் அருளுவீராக. நாம் அனைவரும் ஜெபநிலையில் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில்: 183இங்கு யாராகிலும் உள்ளனரா என்று வியக்கிறேன்.... உள்ளே அல்லது வெளியே, இங்கு பீட அழைப்பு கொடுக்க ஒரு வழியுமில்லை, ஏனெனில் இங்கு இடமில்லை. இது சத்தியம் என்று நீங்கள் உண்மையாக விசுவாசிக்கிறீர்களா? நோவாவின் நாட்களில் இருந்ததுபோல், மோசேயின் நாட்களில் இருந்ததுபோல், கிறிஸ்துவின் நாட்களில் இருந்ததுபோல குழப்பம் இந்நாட்களில், அவருக்குள்ளாக பிறந்திருக்கும் நம் அனைவருக்கும் பிதாவானவர், தேவன், நமது மத்தியில் நின்று கொண்டிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 184விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட அக்கினி ஸ்தம்பம், அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறுவனாயிருந்தபோது என்னுடன் பேசி, நான் இங்கு வசிப்பேன் என்றும், என்ன நடக்குமென்றும் கூறினார். அதைக் குறித்து நான் உங்களிடம் கூறினேன், அதன் பிறகு அது. ஒருநாள் நதிக்கரையில், ஊழியம் தொடங்குவதற்கு முன்பு - முதலாம் எழுப்புதல் - அவர் ஆகாயத்தில் பிரத்தியட்சமாகி, தம்மை அடையாளம் காண்பித்து, ஊழியத்துக்கான கட்டளையளித்தார். இத்தனை ஆண்டுகளாக அதை என் இருதயத்தில் மறைத்து வைத்திருந்து, கிறிஸ்துவை திரைமறைத்து, அதே அக்கினி ஸ்தம்பம் வாக்களித்தபடி வார்த்தைக்கு வியாக்கியானம் உரைத்து வந்தது. நாம் கடைசி சாட்களில் இருக்கிறோம், கர்த்தருடைய வருகை மாத்திரமே. நீங்கள் திரைக்கு வெளியே இருப்பதாக அறிந்தால் (வெளியே இருப்பது மரணம்). நீங்கள் விசுவாசத்தினால், இன்று காலை, ''தேவனுடைய உதவியைக் கொண்டு; கர்த்தாவே, உம்முடைய உதவியைக் கொண்டு திரைக்குள் பிரவேசிக்க விரும்புகிறேன். நீர் எங்கிருக்கிறீரோ அங்கு நான் உள்ளே வந்து, முழு தேவனுடைய வார்த்தையும் காண விரும்புகிறேன்“ என்று கூறுவீர்களா? 185நீங்கள் மோசேயாக இருக்க முயல வேண்டாம். நீங்கள் ஆரோனாக இருக்க முயல வேண்டாம். நீங்கள் நீங்களாகவே, ஒரு கிறிஸ்தவனாக இருங்கள். உங்கள் தலைகளை வணங்கி, உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி, ''கர்த்தராகிய தேவனே, திரைக்குள் பிரவேசிக்க உதவி செய்யும்'' என்று சொல்வீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியானதாய் தோன்றுகிறது. வெளியே உள்ளவர்களே, ஞாபகம் கொள்ளுங்கள், உங்கள் கையை நான் காணாமலிருக்கலாம். நான் காண்பதனால் எந்த உபயோகமும் இல்லை. தேவன் அதைக் காணவேண்டும். எனக்கு... என்னைப் பொறுத்த வரையில் விதை எங்கு விழுந்தது என்பதை நான் அறிந்து கொள்ள முடியும்... ஆனால் தேவன் உண்மையான இருதயத்தைக் காண்கிறார். கைகளையுயர்த்தாத யாராகிலும் இப்பொழுது உயர்த்த விரும்பினால், இப்பொழுது உங்கள் கைகளையுயர்த்தி ஜெபத்தில் நினைவு கூரப்படுங்கள். உங்கள் கைகளை உயர்த்துங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 186பிதாவே, திரைக்குள் பிரவேசிக்காத இவர்களுக்காக, கர்த்தாவே, இன்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் இஸ்ரவேலரைப் போல் வெளியே நின்று கொண்டு கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் விசுவாசிக்கின்றனர், இருப்பினும் அவர்கள் அந்த மகத்தான ஷெகினா ஒளியைக் காண உள்ளே பிரவேசிக்கவில்லை. ஆகையால் தான் புகைப்பட கருவியின் இயந்திர கண் அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டேயிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அது மறுபடியும் அதை படம் எடுத்தது. கர்த்தாவே, நீர் உம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர். வல்லமையுள்ள தேவன் அவிசுவாசிக்கு திரைமறைக்கப்பட்டிருக்கிறார், விசுவாசிக்கோ திரை நீக்கப்பட்டிருக்கிறார். கர்த்தாவே, இன்று அவர்கள் உள்ளே பிரவேசித்து, அவருடைய பிரகாசத்தையும் மகிமையையும் காண்பார்களாக. இன்றிரவு நாங்கள் மறுபடியும் இந்த சபைக்கு வருவதற்கு முன்பு, அவர்களுடைய இருதயங்கள் மாற்றப்படுவதாக. அவர்கள் அனைவரும் உமது ஆவியினால், உமது பிரசன்னத்தினால் நிறையப்படுவார்களாக. கைதேர்ந்த நிபுணர் தாமே அவர்களுக்கும் விசுவாசம் என்னும் இசைக்கும் வில்லைக் கையிலெடுத்து வார்த்தை என்னும் வயலின் நரம்புகளின் மேல் அதை செலுத்தி, “இதை விசுவாசிக்க நீ உலகத் தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்டிருக்கிறாய். பிள்ளையே, விசுவாசித்து இரட்சிக்கப்படும்'' என்னும் ராகத்தை எழுப்புவாராக. 187பிதாவே, தேவனே, இவர்களை உமது கரங்களில் இப்பொழுது சமர்ப்பிக்கிறோம். எங்களால் வேறொன்றையும் செய்ய முடியாதென்று உணருகிறோம். பிதாவே, இவையனைத்தும் உம்மிடம் உள்ளது. இவர்களை உமக்களிக்கிறேன். உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார், அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! காணாமற்போனேன், கண்டுபிடிக்கப்பட்டேன், ஆக்கினையினின்று விடுதலையடைந்தேன், இயேசு விடுதலையும் முழு இரட்சிப்பும் அருளினார்; பாவம சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார், அற்புதம் என் இயேசுவுக்கு என் ஸ்தோத்திரம்! ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், வல்ல மீட்பராம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார், அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! 188எத்தனை பேர் அவர் நமக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள் - வல்லமையுள்ள வெற்றி சிறந்தவர். வார்த்தை மாம்சமானவர் நமக்கு முன்னால் திரைநீக்கப்பட்டவராய், அல்பா, ஓமெகா, இருந்தவர், இருக்கிறவர், வருகிறவர், தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; மனுஷகுமாரனாய், தேவகுமாரனாய் இருந்தவர், மனுஷகுமாரனாய் இருக்கிறவர், தாவீதின் குமாரனாய் இருக்கப் போகிறவர். அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒவ்வொரு காலத்திலும் தம்மை திரைநீக்கி விசுவாசிக்கு வெளிப்படுத்தி, மாம்ச சரீரத்தில் திரையிடப்பட்டு தம்மை அவிசுவாசியிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். அவர் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கிறார். தேவன் தாமே ஒவ்வொரு திரையையும் உடைத்தெறிந்து அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைக் காணும்படி செய்வாராக. இயேசு விலங்கை முறித்தாரே, இயேசு விலங்கை முறித்தாரே, இயேசு விலங்கை முறித்தாரே, உன்னை விடுவித்தாரே! யோர்தானின் மறுபுறத்தில்! ஏதேனின் இனிமையான தோட்டத்தில் ஜீவ விருட்சம் கனிகொடுக்கும் இடத்தில், எனக்கு இளைப்பாறுதல் உண்டு இயேசு விலங்கை..... (நீங்கள் இப்பொழுது யோர்தானைக் கடக்க விரும்புகிறீர்களா? நீண்ட காலம் வனாந்தரத்தில் இருந்துவிட்டோம் இப்பொழுது கடந்து வாக்குத்தத்தங்களை அடைவோம்!) இயேசு விலங்கை முறித்தாரே இயேசு விலங்கை முறித்தாரே ஓ, உன்னை விடுவித்தாரே! இப்பொழுது நமது கரங்களை உயர்த்துவோம்: நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், அவர் என்னை விடுவித்ததால்! (ஆமென்!) 189அது உங்களுக்கு நல்லுணர்வு தருகிறது அல்லவா? ஓ, எவ்வளவு அற்புதமானவர் எவ்வளவு அற்புதமானவர் இல்லையா? நாம் ஒருவரோடொருவர் கைகுலக்கி இதைக் கூறுவோம்: இயேசு விலங்கை முறித்தாரே, இயேசுவிலங்கை முறித்தாரே, இயேசு விலங்கை முறித்தாரே, உன்னை விடுவித்தாரே! நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், (வல்லமையுள்ள தேவனை) நான்.... (நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரை, அவர் உருவத்தை மாத்திரம் மாற்றிக் கொண்டார்) நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், அவர் கோட்பாடுகளை என்னிலிருந்து அகற்றி, வார்த்தையை விசுவாசிக்கும்படி செய்ததால். 190ஓ, கைதேர்ந்த நிபுணர் இசைக்கும் வில்லை வார்த்தையின் மேல் இழுப்பதை உங்களால் கேட்க முடியவில்லையா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்! நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், நான்... (வார்த்தையாகிய அவரை)... எப்பொழுதும், எப்பொழுதும் துதிப்பேன் (அவர்என்ன செய்தார்?) என்னை விடுவித்தாரே (திரைக்குப் பின்னால் கொண்டு சென்றார்) தேவனுக்குத் துதியுண்டாவதாக! அவரை நான் நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா? இது பரலோகமாய் உள்ளதல்லவா? எனக்கு அந்த வார்த்தையின் தன்மைகள், பரிசுத்த ஆவியானவர் இனிய தாழ்மையான விதத்தில் கூறுவது பிரியம். அது எனக்குப் பிரியம். ஓ, சற்று சிந்தித்துப் பாருங்கள். யோர்தானின் மறுபுறத்தில், (நான் இப்பொழுது இதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்) அந்த இனிய சாகக்கூடாத ஏதேனில் (அங்கு எதைக் காண்பேன்?) ஜீவ விருட்சம்... (அது ஏதேன் தோட்டம்)... கனி தரும் இடத்தில், எனக்கு இளைப்பாறுதல் உண்டு. மகிமை! என்றாலும்... அவர் விலங்கை முறிக்கிறார். இயேசு விலங்கை (எல்லா பாரம்பரியங்களை) முறித்தாரே, இயேசு விலங்கை முறித்தாரே, (எல்லா ஸ்தாபனங்களையும் எல்லா கோட்பாடுகளையும்)... விலங்கை முறித்தாரே, ஓ, என்னை விடுவித்தாரே! 191தேவனுக்குத் துதியுண்டாவதாக! அவரை நான் நேசிக்கிறேன். ''அவர் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, அதிசயமானவர்'' என்று ஏசாயா கூறினதில் வியப்பொன்றுமில்லை. அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், வல்ல மீட்பராம், ஓ, பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார், அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! ஓ, என்னே! அது என் இருதயத்தை சிலிர்க்க வைக்கிறது. அவர் எவ்வளவு அற்புதமானவர்! நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதற்கு முடிவேயில்லை. இது முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் இதே உணர்ச்சியைக் கொண்டவனாய் இதற்குள் வந்தேன். அவர் வரத்தாமதிப்பாரானால், ஒருநாள் என் கண்களை மூடிவிடுவேன், இதே விதமாக நான் செல்வேன். ஆமென்! அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், வல்ல மீட்பராம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார், அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! 192நான் இதிலேயே நாள் முழுவதும் நிலைத்திருக்கக் கூடும். பவுல், ''நான் பாடினால், ஆவியில் பாடுவேன். நான் பிரசங்கித்தால், ஆவியில் பிரசங்கிப்பேன். நான் நடந்தால், ஆவியில் நடப்பேன்; நான் பேசினால் ஆவியில் பேசுவேன்'' என்றான். எல்லாமே வார்த்தையினாலும் ஆவியினாலும் செய்யப்படட்டும். ஆம், ஐயா, ஆமென்! அதெல்லாம் தேவனுடைய சத்தியமே. நான் அவரை, வல்லமையுள்ள தேவன் திரைநீக்கப்பட்டுள்ளதைக் காண்கிறேன். அவர் கோட்பாடுகளையும், ஸ்தாபனங்களையும், அவ நம்பிக்கையையும், கல்வித் திட்டங்களையும், மற்றவைகளையும் பின்னால் இழுத்து தள்ளிவிட்டு, முன்னே நடந்து வந்து அங்கு நிற்பதைக் காண்கிறேன். கோட்பாடுகள் அவரை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? ஸ்தாபனங்கள் அவரை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? உலக சபைகளின் ஆலோசனை சங்கம் அவரை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? அவர் எல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்து, எல்லா விலங்குகளையும் முறித்து, பாதாளத்தை திறந்து, முத்திரையை உடைத்து மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, நமக்கு அவரை திரை நீக்கிக் காண்பித்து,அவர் வார்த்தை என்றும் நேற்றும் இன்றும் மாறாதவர் என்றும் காண்பித்திருக்கிறார். ஆமென். அவரை நான் நேசிக்கிறேன். 193இப்பொழுது, மறுபடியும் நாம் பிற்பகலில் சந்திக்கும் வரைக்கும், நாம் ஒன்றைச் செய்ய விரும்புகிறோம். அதுதான் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரும் துக்கமும் நிறைந்த பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், நீ எங்கு சென்றாலும் அதை கொண்டு செல், விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். நீங்கள் சரியான காரியத்தை நோக்கிக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி சாத்தான் உங்களை சோதிக்க முயன்றால், இயேசு செய்தது போல அவனுக்கு வார்த்தையை சுட்டிக் காட்டுங்கள். பாருங்கள்?பாருங்கள்? ஆமென்! இயேசுவின் நாமத்திற்குப் பணிந்து, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து, நமது பயணம் முடிவுபெறும் போது, பரலோகத்தில் அவரை ராஜாதி ராஜாவாய் முடிசூட்டுவோம். விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!), ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!) ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 194பில்லி இங்கு ஆறு மணிக்கு வந்து, ஜெபவரிசையில் வர விரும்புகிறவர்களுக்கு ஜெப அட்டைகள் வழங்குவான். அப்படி செய்வது நலமென்று நினைக்கிறேன். நாங்கள் செய்ய வேண்டாம் என்று நினைத்தோம், ஆனால் கூட்டம் அதிகமாயிருப்பதால், அப்படி நாங்கள் செய்வது நலம், பாருங்கள். இப்பொழுது, அவரை நினைவுகூருங்கள்! நீங்கள் எங்கு சென்றாலும், அவரை எப்பொழுதும் உங்கள் நினைவில்,உங்கள் இருதயத்தில் வைத்திருங்கள். பாருங்கள், இயேசுவை உங்கள் நினைவில் வைத்திருங்கள். இயேசுவின் நாமத்தை உன்னுடன்... (இப்பொழுது கவனியுங்கள்) கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாய்; (என்ன நடக்கிறது?) உன்னைச் சோதனைகள் சூழும் போது, (நீ என்ன செய்ய வேண்டும்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம், விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!) ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இப்பொழுது நாம் தலைவணங்குவோம். போதகர் வந்து கூட்டத்தை முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன். சகோ. நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோ. நெவில்.